இது கவ்பாய் பற்றிய ஒரு தொடர் பதிவு.
கவ்பாய்களுக்கும் எனக்குமான தொடர்பு என் சிறுவயதின் ஒரு மதிய வேலையில் முன்னும் பின்னும் அட்டையில்லாத உயிரைவிடும் நிலையிலிருந்த ஒரு பழைய ராணி காமிக்ஸ் கவ்பாய் கதையை படித்ததிலிருந்து ஆரம்பிக்கிறது. அன்றிலிருந்து இந்த கவ்பாய் பித்து பிடித்து பல கவ்பாய் படங்கள் பார்க்க ஆரம்பித்து நிறைய மொக்கை வாங்கியதுதான் மிச்சம். கடந்த இரண்டு வருடங்களாக மீண்டும் கவ்பாய் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்துள்ளேன். அவற்றைபற்றிய ஒரு தொடர்தான் இது (தொடருமானுதான் தெரியல).
கேமரா கண்டுபிடித்த ஆரம்ப காலகட்டத்தில் சில நிமிடங்களே ஓடும் திரைப்படங்கள் எக்கச்சக்கமாய் வெளிவந்து கொண்டிருந்த சூழலில் எட்வின் போர்டர் என்ற இயக்குனர் 1903ல் த கிரேட் ட்ரெய்ன் ராபரி என்ற முழு நீள திரைப்படத்தை வெளியிட்டார். இது ஏதோ இரண்டு மணிநேர படம்னு நினைச்சிடாதிங்க பத்து நிமிடங்கள் மட்டுமே ஓடும் ஒரு ஷார்ட் ஃபிளிம்தான். அந்த காலகட்டத்தில் இது பெரிய படம்தான். இது ஒரு ஊமை படம். இதுல என்ன விசயம்னா இது ஒரு கவ்பாய் திரைப்படம். ட்ரெய்ன் மீது சண்டைகாட்சியெல்லாம் வைத்து பிரமாண்டமாக எடுக்கப்பட்ட உலக சினிமா வரலாற்றின் முதல் முழுநீள திரைப்படம். இன்றும் யூடியூபில் காணக்கிடைக்கிறது. இந்த படம் வெளிவந்து நான்கு வருடங்களுக்கு பிறகுதான் உண்மையான கவ்பாய் பிறந்தார் அவர் பெயர் ஜான் வெய்ன்.
கவ்பாய் உலகின் பொற்காலம் என்பது 1930லிருந்து 1970 வரைதான். அப்போதுதான் ஜான் வெய்னின் புகழ்பெற்ற கவ்பாய் படங்களான ஸ்டேஜ் கோச், த சர்ச்சர்ஸ், ரியோ ப்ராவோ, எல்டொரடோ போன்ற படங்கள் வந்து அவரை ஹாலிவுட்டின் அரசனாக்கியது. இதே காலகட்டத்தில் இத்தாலியை சேர்ந்த ஒரு மூவரணி தங்களது வித்யாசமான கவ்பாய் படங்களால் உலகை தாக்கி ஹாலிவுட்டை கைப்பற்றியது. இன்றுவரை உலகின் பல படங்களில் காப்பியடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் டாலர்ஸ் ட்ரையாலஜி என்ற கவ்பாய் காவியத்தை கொடுத்த இயக்குனர் செர்ஜியோ லியோனி நடிகர் கிளின்ட் ஈஸ்டுவுட் மற்றும் இசையமைப்பாளர் என்னியோ மார்கோனி ஆகிய மூவரணிதான் அது. இவர்களின் படங்கள் அல்லாது த வைல்டு பன்ச், த மேக்னிஃபிஸியன் செவன், ஒன்ஸ் அபான்ய டைம் இன் த வெஸ்ட், த டம்ப் ஸ்டோன், டான்சஸ் வித் வுல்வ்ஸ், ட்ரு க்ரிட், ஜாங்கோ அன்ஜெய்ன், த லோன் ரேஞ்சர் போன்று இன்றுவரை கவ்பாய் படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.
நாட்கனக்கில் குளிக்காத அழுக்கேறிய உடலுடன் இடைபெல்டில் ரிவால்வரும்
குதிரையின் சேனத்தில் வின்செஸ்டர் ரைஃபிலும் வைத்துக்கொண்டு, வறுத்தொடுக்கும் வெய்யிலிலும்
வாட்டிவதைக்கும் குளிரிலும் ஓயாது தங்கத்தை தேடியலையும் இந்த கவ்பாய் உலகை கொஞ்சம்
புழுதிபடாமல் எட்டிப்பார்ப்போம்.
பொதுவா கவ்பாய் கதைகள் நடப்பது அமெரிக்க உள்நாட்டு யுத்தம் நடந்த 1850களில்தான். அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களில் சியோக்ஸ், செயனி, நவாஜோ, அபாசே போன்ற பல்வேறு இனகுழுக்கள் இந்த கதைகளில் வருவார்கள். பெரும்பாலும் கெட்டவர்களாகவே சித்தரிக்கப்படும் இவர்களை அழித்தொழித்த வெள்ளையர்கள்தான் உண்மையில் கயவர்கள். இவர்கள் அணைவரும் நதிக்கரையோரங்களில் டென்ட் அடித்து வேட்டையாடி வாழ்பவர்கள். இவர்களின் ஒரு பிரிவினர் எதிரிகளை கொன்று அவர்களின் மண்டைத்தோலை முடியுடன் சிறிது வெட்டியெடுத்துச்செல்வது ( வெற்றியின் சின்னம்) வழக்கம். இவர்களின் நிலங்களை அபகரித்து அதில் ரயில் பாதை போடுவதால் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்குமிடையேஅடிக்கடி மோதல் ஏற்படும்.
அமெரிக்காவின் தொழில்வளர்ச்சிக்கும் அண்டை மாகானங்களை வளைத்துப்போடவும் நாடு முழுவதும் ரயில் பாதைகள் போடப்பட்டன. அதில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் தங்கவும் சரக்கடிக்கவும் சிறுசிறு நகரங்களும் அதில் மதுபான விடுதியான சலூன்களும் அதில் சண்டைகளும் தோன்றின. இந்த தொழிலாளர்களின் உணவு தோவைக்கு மாட்டு மந்தைகளையுடைய பண்ணைகளும் அவற்றை பாதுகாக்கவும் உருவானவர்கள்தான் கவ்பாய்கள்.
பொரும்பாலான கவ்பாய் நாயகர்கள் இந்த மாட்டுமந்தை கவ்பாயாகவோ, உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபடும் ராணுவ வீரனாகவோ, சிறுநகரத்தின் தலைவரான ஸெரிஃபாகவோ, ரேஞ்சராகவோ அல்லது வாண்டட் லிஸ்ட் கேடிகளை பிடித்துக்கொடுத்து பணம் பெரும் பௌன்டி ஹன்டராகவோ இருக்கலாம்.
தற்போது தமிழில் அப்படிப்பட்ட காமிக்ஸ் கதைகளை லயன்- முத்து காமிக்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இவர்கள் பெரும்பாலும் இத்தாலி, ஃபிரான்ஸ் மற்றும் பெல்ஜிய காமிக்ஸ்களை தமிழில் தருகின்றனர். அதில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு நாயகர்தான் லெஃப்டினன்ட் ப்ளூபெர்ரி. தமிழில் " கேப்டன் டைகர் " என்ற பெயரில் அதகளம் செய்யும் இவர் அமெரிக்காவின் வட பகுதி ராணுவத்தை சேர்ந்தவர். ராணுவ யுக்திகளில் கைதேர்ந்தவர், வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்குமிடையேநடக்கும் சண்டைகளை தடுக்க நினைப்பவர். புதையல் தேடும் புலி. துப்பாக்கிகளின் தோழன். ஆனாலும் எதிரிகளிடம் தோற்கக்கூடிய சாத்தியமுடைய ஒரு சாதாரண நபராகத்தான் இவரது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கும். இவரது கதைகளில் நான் முதன் முதலில் படித்த " தங்கக் கல்லரை" பற்றியும் டாலர்ஸ் ட்ரையாலஜி திரைப்படம் பற்றியும் அடுத்த பதிவில்.........

0 Comments:
Post a Comment