Saturday, August 3, 2013

The Lone Ranger

படம்வந்து இவ்ளோநாள் கழித்து விமர்சனம் எழுதும் கடைசி நபர் நானாகத்தான் இருப்பேன் ஏன்னா இந்த தியேடரில் படம்பார்ப்பவர்கள் தயவுசெய்து கத்தாதீங்க விசில்அடிக்காதீங்க அங்கையும் இங்கையும் நடக்காதீங்க. என்னைப்போல் தியேடர் பிரிண்டில் படம்பார்ப்பவர்களின் நிலமைய நினைத்துபாருங்க.
wild west படங்களின் பிதாமகரான செர்ஜியோ லியோனின் படங்கள் சீரியஸாசாக இருந்தாலும் மெலிதான நகைச்சுவை அதனுடே இருக்கும். அதேவரிசையில் வந்திருக்கும் இந்த லோன் ரேஞ்சர், சீரியஸையே சிரிக்கும்படி சொல்லியிருக்கும் படம். பைரேட்ஸ் ஆப் த கரீபியன் படத்தை எடுத்த அதே டீம்தான் இந்த படத்தையும் எடுத்துள்ளனர் என்ற எதிர்பார்ப்புடன் சென்றால் ஏமாற்றம் நிச்சயம். சரி இப்ப படத்தை பார்ப்போம்.
1933, சான்ஃபிரான்ஸிஸ்கோவில் நடைபெரும் ஒரு வைல்டு வெஸ்ட் கண்காட்சியை காணவரும் ஒரு சிறுவனிடம் தன் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார் அந்த செவ்விந்தியர். அவர் பெயர் டான்டு (ஜானிடெப்). 1869ல் டெக்ஸாஸ் மாகாணத்தில் ரயில்பாதை அமைத்துக்கொண்டுள்ளார் ஒரு அரசாங்க உயரதிகாரி. அதே நகரின் பிரபல ரேஞ்சர் டான் ரெய்ட். இவருக்கு ஜான்ரெய்ட் என்ற தம்பியும் ஒரே ஒரு மனைவியும் ஒரு மகனும் உண்டு. இவரின் மனைவிமீது அந்த உயரதிகாரிக்கு ஒரு கண்ணு, அவளுக்கு ஜான்ரெய்ட்மேல ஒரு கண்ணு, ஆனா உங்களுக்கு அவமேல ரெண்டு கண்ணு. இந்நிலையில் ஒரு சுபயோக சுபதினத்தில் பிரபல கொள்ளைகாரணான புட்ச் கேவன்டிசை பிடிக்க டான்ரெய்ட் அவர் தம்பியுடன் கிளம்புறார். ஆனா அவங்க எல்லாரையும் கொன்னுட்டு கொள்ளையன் தப்பிடுறான். இங்கதான் ஒரு டிவிஸ்ட் செவ்விந்தியரான டான்டு ஜான்ரெய்ட காப்பாற்றி அவருக்கு முகமுடி மாட்டிவிட்டு லோன் ரேஞ்சரா மாற்றுகிறார்.  பின்னர் இவ்விருவரும் , செவ்விந்தியர்களை கொன்று அவர்களின் வெள்ளி சுரங்கத்தை வைத்து நாட்டையே பிடிக்கும் உயரதிகாரியின் திட்டத்தை எப்படி முறியடிக்கிறாங்கனுபடத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
ஜானிடெப்பை பொருத்தவரை pocல் எப்படியோ அதேபோல் இதிலும் உள்ளார். pocன் அனைத்து பாகங்களிலும் எனக்கு மிகவும் பிடித்தது ஜானிடெப்பின் அறிமுக காட்சிதான் அதைப்போல் இந்த படத்தில் இவருக்கு அறிமுக காட்சி இல்லாவிட்டாலும் அதற்கு இணையான படு அட்டகாசமான ஒரு காட்சி இறுதியில் வரும் டிரெய்ன் சேசிங்கில் உள்ளது.
மொத்தத்தில் உங்களுக்கு போரடிக்குறப்ப பாருங்க ஜாலியா இருக்கும்.