Friday, June 13, 2014

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?

மிஸ்டரி எனப்படும் மர்மமான விசயங்களை பற்றி படிப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. இதுபோன்ற படங்களையே நான் அதிகம் பார்த்துள்ளேன். அதில் ஒருவகையான ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகளைப்பற்றிய புத்தகம்தான் ராஜ்சிவா எழுதிய இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?.
இதில் உள்ள சில விசயங்களைப்பற்றி ஏற்கனவே சுஜாதாவும் மதனும் எழுதிவிட்டாலும் ராஜ்சிவா அளவுக்கு யாரும் டீடெய்லா எழுதவில்லை அதனாலேயே இந்த புத்தகம் எனக்கு பிடித்தும்விட்டது.
இந்த புத்தகத்திலிருந்து சில துளிகள்..
* இதுவரை உலகத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பயிர் வட்டங்கள் உருவாகி இருக்கின்றன.  அவற்றை உருவாக்குவது யார்? எப்படி? எதற்கு?
* பறக்கும் தட்டை பார்த்தவர்களின் சாட்சியம் மற்றும் புகைப்படம், வீடியோ ஆதாரங்கள்.
* பயிர்வட்டங்களின் மூலம் ஏலியன்கள் மனிதர்களுக்கு அனுப்பிய செய்தி என்ன?
*  2 மற்றும் 3 பரிமாணங்கள் தெரியும். நான்காவதாக காலத்தையும் சேர்த்து 4D தொழில்நுட்பத்தில் செய்யப்படும் டைம் ட்ராவல் சாத்தியமா?
* 11 பரிமாணங்கள் இருப்பதாக சொல்லப்படும் ஒரு தியரி.
* ஏலியன்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அதிபர்.
*  ரோஸ்வெல் நகரில் விபத்துக்குள்ளான பறங்கும் தட்டையும் அதில் இருந்த ஏலியனையும் மறைக்கும் அமெரிக்கா.
* பிரமிடுக்கும் ஏலியனுக்கும் உள்ள தொடர்பு என்ன?
* ஏலியன்கள் இருக்கா? இல்லையா? அவை பூமிக்கு வந்தது உண்மையா?
* ஏலியன்கள் என நாம் நம்புவது டைம் மெஷினில் வருகைபுரியும் நமது வருங்கல சந்ததியினரா?
* நம்மை படைத்தது ஏலியன்களா?
இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடைகள் இந்த புத்தகத்தில் உள்ளது. உயிர்மை இணைய இதழில் தொடர் கட்டுரையாக வந்ததை தொகுத்து உயிர்மை பதிப்பகத்தார் ரூபாய் 175க்கு வெளியிட்டுள்ளனர். சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாத புத்தகம் இது.
             

Friday, June 6, 2014

அமேஸிங் ஸ்பைடர் மேன்-2

எலக்ட்ரோ
இந்த திரைப்படத்தின் தலையாய வில்லனான எலக்ட்ரோவை பற்றி காமிக் புத்தகங்கள் என்ன சொல்கின்றன என்பதை முதலில் பார்த்துவிடுவோம்.
மேக்ஸ் டில்லியன் என்ற ஒரு எலக்ட்ரிக்கல் இஞ்ஜீனியர் கம் லயன்மேன் ஒருமுறை லயன்கம்பத்தில் ஏறி வேலை செய்துகொண்டிருக்கும் போது மின்னலால் தாக்கப்படுகிறார். அதன் பலனாக அவர் ஒரு நடமாடும் பேட்டரியைப் போல் செயல்பட்டு பல்வேறு நாசகாரியங்களை செய்கிறார். இதன் பின்னரே மேக்ஸ், எலக்ட்ரோ என அன்புடன் அழைக்கப்படுகிறார். இவர் ஸ்பைடர் மேனுக்கு மட்டுமல்லாது டேர்டெவில், ஃபென்டாஸ்டிக் ஃபோர் பேன்றவர்களுக்கும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வில்லனாகிறார். பேதாதற்கு எக்ஸ் மேன் குரூப்பின் தலைமை வில்லனான மேக்னடோவின்  சீடர்களுள் இந்த எலக்ட்ரோவும் ஒருவன்.
இனி படத்தை பார்ப்போம்.
ரிச்சர்ட் பார்கரும் அவர் மனைவியும் சிறுவனான பீட்டர் பார்க்கரை சித்தப்பா பென் பார்க்கரிடம் விட்டுவிட்டு ஒரு தனி விமானத்தில் நாட்டைவிட்டே செல்கின்றனர். அந்த விமானத்தில் உள்ள ஒருவனால் இருவரும் சுடப்பட்டு இறக்கும் தருவாயில் ஏதோ ஒரு ஃபைலை தனது லேப்டாப்பிலிருந்து அப்லோட் செய்துவிட்டு இறக்கிறார்.
நிகழ்காலத்தில், புளுடோனியத்தை கடத்திச்செல்லும் ஒரு கும்பலை மடக்கிப்பிடிக்கும் அட்டகாசமான ஆரம்பத்துடன் அறிமுகமாகிறார் ஸ்பைடர்மேன். அந்த களோபரத்தின் நடுவே ஆஸ்கார்ப் நிறுவனத்தின் எலக்ட்ரிக்கல் இஞ்ஜினியரான மேக்ஸ் டில்லியனை காப்பாற்றுகிறார். இதன் பின்னர் ஆஸ்கார்ப் டவரில்  ஏற்படும் ஒரு மின்சார பழுதை சரிசெய்ய செல்லும் மேக்ஸ் எதிர்பாராதவிதமாக ஷாக் அடித்து எலக்ட்ரிக் ஈல்கள் ( மின்சார மீன்கள்) இருக்கும் தொட்டியில் விழுந்துவிடுகிறார். இதனால் எலக்ட்ரிக்கல் பவரை கட்டுப்படுத்தும் எலக்ட்ரோவாக உருவெடுத்து வில்லனாகிறார்.
இதற்கிடையில் ஆஸ்கார்ப் நிறுவனத்தின் தலைவரான நார்மன் மரணப்படுக்கையில் தனது மகனான ஹாரியை அழைத்து தனக்கு வந்திருக்கும் பரம்பரை வியாதி ஹாரிக்கும் வருமென்றும் அதிலிருந்து மீள இது உதவுமென்று ஒரு சிறிய வஸ்துவை கொடுத்துவிட்டு இறந்துவிடுகிறார். அந்த நோயினை குணப்படுத்த ஸ்பைடர்மேனின் ரத்தம் தேவைப்படுகிறது. தரமறுக்கும் ஸ்பைடர் மேனுக்கு கிரீன் கோப்ளின் என்ற பயங்கர வில்லனாக மாறுகிறான் ஹாரி.
இந்த இருவரிடமிருந்து மக்களை எவ்வாறு ஸ்பைடர் மேன் தனது காதல் காட்சிகளுக்கு இடையே காப்பாற்றுகிறார் என்பதை திரையில் காணுங்கள்.
இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது இதன் 3D எஃபெக்ட்தான்.  ஸ்பைடர் மேன் பறப்பதை இப்படித்தான் காட்டவேண்டும். படம் ரொம்பவே மெதுவாக செல்வதால் எல்லாருக்கும் பிடிக்கும் என சொல்லமுடியாது. எனக்கு பிடித்திருந்தது. படத்தின் கடைசியில் ரினோ என்ற பெரிய ரோபோ தாக்க வருகையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு சென்டிமென்ட் காட்சி கனகச்சிதமாக எடுக்கப்பட்டிருக்கும். இந்த படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த காட்சியும் அதுதான்.
இந்த படத்தின் தொடர்ச்சியாய் 2016 ல் இதன் மூன்றாம் பாகமும் 2018ல் நான்காம் பாகமும் வர இருக்கிறது. அதில் சினிஸ்டர் சிக்ஸ் எனப்படும் வில்லன்கள் அடங்கிய குழுவும் உள்ளது. மேலும் அடுத்த பாகங்களில் ஸ்பைடர் மேனின் புதிய காதலி மேரி ஜேனாக இருக்கப் போகிறாள். அதுவரை ஸ்பைடர் மேனுடம் சேர்ந்து நீங்களும் காத்திருங்கள்.
                  .

Tuesday, March 25, 2014

The Chesar ( south korea) 2008

ஜாங் வூ அப்புடினு தொன் கொரியால ஒரு மாமா இருந்தாரு. என்னடா மாமாங்குறேனு பாக்குறீங்களா என்ன பன்றது அவர் பன்ற தொழில் அப்படி. ரெண்டாம் நம்பர் பிஸ்னஸ் பன்னுகிற நம்பர் ஒன் ஆளு. கொஞ்ச நாளாவே அவரிடம் இருந்த இரு பெண்களை காணவில்லை.  இந்நிலையில் 4885 என்ற நம்பரிலிருந்து ஒருவன் அழைத்து தன் சொல்லுமிடத்திற்கு ஒரு பெண்ணை அனுப்பும்படி கூறுகிறான்.  ஜாங் வூவும் சரினு மி ஜின் என்ற பெண்ணை அனுப்புகிறார்.  பின்னர் இந்த பொண்ணும் திரும்பிவருவதில்லை. என்னடா இது என அவர் தன் ரிஜிஸ்டரை எடுத்துப்பார்க்க அதில் தொலைந்த மூன்று பெண்களும் 4885 என்ற நம்பரிலிருந்தே அழைக்கப்பட்டிருப்பதை காண்கிறார்.

அந்த நம்பரை தேடிச்செல்கையில் வழியில் ஒருவன்  ஜாங் வூவின் காரை இடித்து விடுகிறான். அவனிடம்  சண்டையிடும் ஜாங் வூ அவன் போன் நம்பரை கேட்கிறார். தரமறுக்கும் அவன் மேல் சந்தேகம் கொண்டு 4885க்கு அழைக்கிறார். அவன் செல்போன் ஒலிக்க  வண்டியை விட்டு இறங்கி ஓடுகிறான்.  அவனை விரட்டிப்பிடிக்கையில் இருவரும் போலிசிடம்  மாட்டுகின்றனர். தனது மூன்று பெண்களை அழைத்துச்சென்று வேறு இடத்தில் விற்று விட்டதாக அவன்மேல் குற்றம்சாட்டுகிறார் ஜாங் வூ. விசாரிக்கும் போலிசிடம் தான் மூன்று பெண்களையும் விற்கவில்லை எனவும் கொன்று விட்டதாகவும் மேலும் இதுவரை பன்னிரென்டு பெண்களை கொன்றிருப்பதாகவும் அவன் கூறுகிறான்.

எங்கு தேடியும் அவன் கொன்றதாக கூறிய பெண்களின் சடலம் கிடைக்காததால்  போலிஸ் அவனை விட்டுவிடுகிறது. இதனை நம்பாமல் அவனை பின் தொடர்கிறான் ஜாங் வூ. இதன்பின்னர் என்ன ஆனது என்பதை சேஸர் என்ற இந்த கொரிய திரைப்படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதுவரை வந்த எல்லா சைக்கோ த்ரில்லர் திரைப்படங்களிலும் கொலைகாரன் கட்டக்கடைசியில் தான் தன் முகத்தை காட்டுவான்.  அதை வைத்துதான் பார்வையாளர்களை பரபரப்பாக பல்லைகடிக்க வைப்பார்கள். ஆனால் இந்த படத்தில் அதற்கு நேர் எதிராக ஆரம்பத்திலேயே கொலைகாரன் போலிசிடமே மாட்டிக் கொள்வான் இருந்தாலும் படபடப்பாய் நம்மை பார்க்க வைப்பது இதன் நேர்த்தியான திரைக்கதைதான். இன்றைய காலகட்டத்தில் ஹாலிவுட்டை விட தரத்தில் சிறந்த படங்களை கொடுப்பது கொரியாதான்.  இருந்தாலும் ஹாலிவுட் அளவிற்கு யாராலும் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாய் படம் எடுக்க முடியாவிட்டாலும் நல்ல திரைப்படத்திற்கு பணம் ஒரு பொருட்டல்ல என்பதற்கு இந்த படமும் ஒரு உதாரணம்.


                                                                                                 

Friday, March 14, 2014

கரீபியன் கடற்கொள்ளையர்-இறந்தவனின் இதயம்

போர்ட் ராயல் துறைமுகத்தின் ஒரு மழைக்கால பகல்வேலையில் மழைத்துளிகளுக்கு போட்டியாய் அணிவகுத்து வருகின்றனர் பிரிட்டிஸ் கடற்படை வீரர்கள். அவர்களின் தலைவன் லார்ட் பெக்கட் பிரபு. இவனே போர்ட் ராயலின் புதிய நிர்வாகி. திருமணக்கோலத்தில் இருக்கும் வில் டானரையும் எலிசபெத்தையும் கைது செய்து , ஜாக்கிற்கு உதவிய குற்றத்திற்காக தூக்கிலிடும் வாரண்டுடன் வருகிறார். வில் டானரை மட்டும் விடுவித்து ஜாக்கின் திசைமானியை கொண்டுவந்தால் எலிசபெத்தை விட்டுவிடுவதாக கூறி வில்லை அணுப்பி விடுகிறார்.

அது ஒரு சிறைச்சாலை. பினந்திண்ணி காக்கைகளும் கழுகுகளும் கூண்டில் அடைக்கப்பட்ட உயிருள்ள கைதிகளை கொத்தித்திண்ணும் கொடுமையான இடம்.  அங்கு இறந்த கைதிகளின் சவப்பெட்டிகளை தூக்கி கடலில் எறிகின்றனர் இரு எம கிங்கிகர்கள். கடலில் விழுந்த ஒரு சவப்பெட்டியை கொத்திக்கொண்டிருக்கும் காகத்தை உள்ளிருந்து ஒரு துப்பாக்கி சுடுகிறது.  பெட்டியின் உள்ளிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டு உள்ளிருக்கும் இறந்த பிணத்தின் கையை பிய்த்து அதை துடுப்பாய் பயன்படுத்தி கடலில் செல்லும் அந்த உருவம் ஜாக் ஸ்பேரோவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும். அவன் அந்த சிறையிலிருந்து ஒரு சாவியின் வரைபடத்தை  கைப்பற்றி வருகிறான்.  அந்த சாவியின் மூலம் டேவி ஜோன்சின் இதயம் இருக்கும் பெட்டகத்தை திறக்கலாம். அதை வைத்து நூற்றாண்டு கடனை அடைப்பதே ஜாக்கின் திட்டம்.

பிளாக்பியர்ல் கப்பலை கிழக்கு இந்திய கம்பெனி மூழ்கடித்த போது அதனை மீட்டுக் ஜாக்கிடம் கொடுத்தவன் டேவி ஜோன்ஸ். அதன் பிரதிபலனாக ஜாக் பதிமூன்று ஆண்டுகள் கேப்டனாகவும் பின்னர் நூறு ஆண்டுகள் ஃபிளையிங் டச்மேன் கப்பலில் மாலுமியாகவும் இருக்க வேண்டும் என்பதே ஜாக் ஸ்பேரோவின் வட்டியில்லா கடன்.

யார் இந்த டேவி ஜோன்ஸ்!?

ஏழு கடல்களிலும் ஈடுஇணையில்லாத வலிமையும் வேகமும் கொண்ட கப்பலான ஃபிளையிங் டச்மேனின் கேப்டன்தான் டேவி ஜோன்ஸ்.  இந்த கப்பலுக்கு கேப்டனாக இருப்பவரின் இதயத்தை எடுத்து ஒரு பெட்டகத்தில் வைத்துவிட வேண்டும் இதுதான் இந்த கப்பலின் விதி. அந்த இதயத்தை யார் கொல்கிறாரோ அவரே அடுத்த கேப்டன். அவருக்கும் இதயம் இருக்காது. டேவி ஜோன்சின் பார்ட் டைம் வேலை கடலில் இறந்தவர்களை மறு உலகிற்கு அணுப்பிவைப்பது. இவனது கட்டுப்பாட்டில் உள்ள க்ராக்கன் என்ற படு பயங்கர கடல்மிருகத்தை வைத்து பல கப்பல்களை கபாலிகரம் செய்வதும் இவன் வேலைதான். இவனுக்கு ஒரு காதலியும் உண்டு மேலும் பத்து வருடங்களுக்கு ஒருமுறை தான் கரைக்கே வர முடியும். ஃபிளையிங் டச்மேனில் உள்ள மாலுமிகள் அணைவரும் நூறு ஆண்டுகளுக்கு அடிமையாய் இருப்பவர்கள். அவர்களுள் ஒருவர் வில் டானரின் தந்தையான பூஸ்ட்ரப் டானர். டேவி ஜோன்ஸின் ஆக்டோபஸ் முகமும் கொடுக்குக் கையும்  உருவாக்கிய விதம் செம, கற்பனையின் உச்சம் எனலாம்.
ஜாக் ஸ்பேரோவின் திசைமாணிக்கு ஒரு விசேச குணம் உண்டு. அது வட திசையை காட்டாது ஆனால் நாம் செல்லவேண்டும் என நினைக்கும் திசையை காட்டக்கூடியது. இதைக்கொண்டு  டேவி ஜோன்ஸின் இதயம் இருக்கும் இடத்தை அறிந்து அதை கைப்பற்றுவதன் மூலம் ஃபிளையிங் டச்மேனை அடையலாம். அதை வைத்து மொத்த கடற்கொள்ளையர்களையும் அழிப்பதே லார்ட் பெக்கெட் பிரபுவின் திட்டம்.

எலிசபெத்தை காப்பாற்ற ஜாக்கைதேடி வரும் வில் டானரிடம்  வரைபடத்தில் இருக்கும் சாவியை எடுத்து வந்தால் திசைமாணியை தருவதாக சொல்கிறான் ஜாக். சாவியை தேடி ஃபிளையிங் டச்மேன் கப்பலிற்கு செல்கிறான் வில். அங்கு தன் தந்தையை சந்திக்கிறான்.  டேவி ஜோன்ஸ் அசந்த நேரத்தில் அவனிடமிருந்து சாவியை திருடிச் செல்கிறான்.  அதை பயன்படுத்தி தன் தந்தையை விடுவிப்பதே வில் டானரின் திட்டம்.

கடைசியில் டேவி ஜோன்ஸின் இதயம் யாருக்கு கிடைத்தது என்பதே பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் - டெட்மேன்'ஸ் ஜெஸ்ட் திரைப்படத்தின் கதை. படு அட்டகாசமாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் காட்டுவாசிகளிடம் மாட்டிக்கொண்டு ஜாக் செய்யும் சேட்டைகள் பட்டைய கெளப்பும். இதில் முக்கியமான ஒன்று ஹன்ஸ் ஸிம்மரின் இசை. ஒற்றை வயலின் மட்டுமே தனி ஆவர்த்தனம் புரியும்.

                                                                                                             
                                                                                                         
                

Wednesday, March 12, 2014

வாரியர்ஸ் ஆஃப் த ரெய்ன்போ : சீட்டிக் பேல்

இந்த உலகில் உள்ள விலங்குகளுள் மிகவும் பயங்கரமானதும் தலையாயதுமான ஒரு மிருகம் மனிதன்.  அவன் அழித்தொழிக்காத உயிரினமே இல்லை தன் இனம் உட்பட. அப்படிப்பட்ட நாகரீக மனிதன் ஒரு பழங்குடி இனத்தையே அழித்த கதைதான் இந்த வாரியர்ஸ் ஆஃப் த ரெய்ன்போ.

இது தைவானில் 1930ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த படத்தைப்போல் படம் எடுக்கப்பட்ட கதையும் சுவாரஸ்யமானது முதலில் அதைப்பார்ப்போம்.

இந்த கதை ஆரம்பமானது 1996ல். வெய் டி ஷாங் அப்புடிங்குற ஒரு தைவான் இயக்குனர் Wushe Incident எனப்படும்  சம்பவத்தை அடிப்படையாய் வைத்து எழுதப்பட்ட ஒரு காமிக் புக்கை படித்தார். அது பிடித்துப்போகவே அதை படமாய் எடுக்க முடிவு செய்து இரண்டு வருடம் உட்கார்ந்து நீண்ட திரைக்கதை ஒன்றை எழுதினார்.  இந்த திரைக்கதையை எடுத்துக்கொண்டு ஒரு தயாரிப்பாளரை அணுகி  படத்தைப்பற்றிய ஒரு டிரைலர் வீடியோ எடுக்க இரண்டரை மில்லியன் அமெரிக்க டாலர் கேட்டார். முழு படத்தின் பட்ஜெட் ஏழு மில்லியன்.  அரண்டுபோன தயாரிப்பாளர் புத்தர் கோவிலில் மந்திரிச்ச டாலரை வாங்கி கொடுத்து இயக்குனரை அணுப்பிவிட்டார். வேறு வழியில்லாமல் தனது மனைவியின் நகை நட்டு எல்லாவற்றையும் விற்று அந்த டிரைலரை எடுத்து பல நிறுவனங்களிடம் காட்டினார். பெரிய பட்ஜெட் காரணமாக எந்த நிறுவனமும்  கண்டுகொள்ளாமல் நான் எழுதும் பதிவுகளைப் போன்றே சீந்துவாரின்றி கிடந்தது அந்த டிரைலர்.

நண்பர் ஒருவர் நீ முதலில் சின்ன ஆனிய புடுங்கி காட்டு அப்புறம் பெரிய ஆனி புடுங்கலாம் என ஐடியா கொடுக்க ஷாங்கும் 2008ல் Cap no.7 என்ற சிறிய ஆனியை சாரி  லோ பட்ஜெட் காமெடி படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் செம ஹிட்டடிக்க வாரியர்ஸ் ஆஃப் த ரெய்ன்போவை தயாரிக்க சிலர் முன் வந்தனர். இம்முறை ஷாங் கேட்ட பட்ஜெட் இருபத்தி ஐந்து மில்லியன். இது நம்ம எந்திரனை விட கொஞ்சம் கம்மிதான்.  படம் முழுவதும் காடு, மலை, மழைதான்.  இரு பாகமான இந்த படத்தை மொத்தம் பத்தே மாதங்களில் எடுத்துவிட்டார். நம்ம ஊரில் வருடக்கணக்கில் படம் எடுக்கும் இயக்குனர்களை கட்டிவைத்து இந்த படத்தை போட்டுக்காட்ட வேண்டும். தைவானில் இது வரை அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுதான். அதேபோல் வசூலையும் அள்ளியது கூடவே பல உலக விருதுகளையும். 2011ல் வெளிவந்த ஒரு சிறந்த காவியமான வாரியர்ஸ் ஆஃப் த ரெய்ன்போ படத்தின் கதை அடுத்த பதிவில்...

                                                                                                                           

Sunday, March 2, 2014

பிளாக்பியர்லின் சாபம்


கி.பி.15ம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டைச்சேர்ந்த ஹெர்னன் கார்டஸ் டி மென்ராய் என்பவர் தலைமையில் ஸ்பானிஷ் படைகள் மெக்ஸிகொவை தாக்கி, அங்கிருந்த அஸ்டக் இன மக்களை கொன்று குவித்து அவர்களின் தங்கங்களை கொள்ளையடித்தனர்.  பலரை பலிகொண்ட காரணத்தால் இந்த தங்கம் சபிக்கப்பட்டது. எனவே 882 தங்கபதக்கங்கள் அடங்கிய அந்த பொக்கிஷத்தை ஒரு பெட்டியில் வைத்து பூட்டி அதை கல்லறை தீவில் வைத்துவிட்டு திரும்பிகூட பார்க்காமல் சென்றுவிட்டார் கார்டஸ் டி மென்ராய்.

பல ஆண்டுகளுக்குப்பின்...

கெசுமருந்து அடிக்கும் கார்ப்பரேஷன் வண்டிக்கு பின்னால் செல்லும் வெண்புகையை போன்ற பனி சூழ்ந்த முன்பனிக்காலத்தின் காலை வேலையில் அட்லாண்டிக் கடலில் அந்த பிரிட்டிஷ் கப்பற்படை கப்பல் அலைகளை முத்தமிட்டவாரே மெதுவாக சென்றுகொண்டிருந்தது. அந்த கப்பலில் இருப்பவர்கள் கவர்னர் ஸ்வான், அவரது பத்துவயது மகள் எலிசபெத், லெப்டினன்ட் ஜேம்ஸ் நாரிங்டன் மற்றும் மாலுமி கிப்ஸ். வழியில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஒரு கப்பலை பார்கின்றனர். அதிலிருந்து ஒரு சிறுவன் மீட்கப்பட்டு அவன் பெயர் வில் டானர் என்பதை மட்டும் சொல்லிவிட்டு மயக்கமடைகிறான். அவன் கழுத்தில் அணிந்திருக்கும் ஒரு தங்கபதக்கத்தை எடுத்து மறைத்து விடுகிறால் சிறுமி எலிசபெத்.
எட்டு ஆண்டுகளுக்குப்பின் போர்ட் ராயல் துறைமுகத்தின் அருகே ஒரு சிறியபடகு மூழ்கிகொண்டிருக்கும் நிலையில் வருகிறது. அதன் பாய்மரத்தின் உச்சியில் ஏறிநின்று கரையை பார்கிறது ஓர் உருவம். படகு முழுகவும், துறைமுகத்தின் முகப்பில் அவன் காலை எடுத்து வைக்கவும் சரியாய் இருக்கிறது. யார் அவன்!?  அவன் கொள்ளையர்களால் தேடப்படும் கொள்ளைக்காரன். கடற்படையை கலங்கடிக்கும் கள்வன். ஏலு கடல்களின் இளவரன். அவன் பெயர் ஜாக் ஸ்பேரோ ( கேப்டன்னு சொல்லுங்க) ஆங் கேப்டன் ஜாக் ஸ்பேரோ. இப்படி ஒரு அறிமுக காட்சியை இதுவரை நான் எந்த ஒரு ஹீரோவிற்கும் எந்த படத்திலும் பார்த்ததில்லை. இந்த சீரிஸின் அணைத்து படங்களிலும் எனக்கு மிக பிடித்தமான காட்சியென்றால் அது ஜாக் ஸ்பேரோவின் அறிமுக காட்சிதான். இந்நிலையில் லெப்டினன்ட் நாரிங்டன் தளபதியாக பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ளும் எலிசபெத் எதிர்பாராதவிதமாக கோட்டை உச்சியிலிருந்து கடலில் விழுகிறாள். அவள் கழுத்தில் அணிந்திருக்கும் பதக்கம் நீரில் நனைந்து கடலில் ஒரு அலையை ஏற்படுத்துகிறது. இதனால் இந்த பதக்கம் இருக்குமிடம் பிளாக்பியர்ல் கப்பலுக்கு தொரிந்துவிடுகிறது. எலிசபெத்தை காப்பாற்றும் ஜாக் ஒரு கொள்ளையன் என தெரிந்துவிடுவதால் அவன் காவலர்களிடமிருந்து தப்பிவிடுகிறான். பின்னர் அவனை பிடித்து கொடுக்கிறான் தற்போது கொல்லனாக இருக்கும் வில் டானர். அன்று இரவு போர்ட் ராயல் துறைமுகத்தின் இருளை மேலும் கருமையாக்க வருகிறது பிளாக்பியர்ல். அதில் வரும் கொள்ளையர்கள் நகரையே சூரையாடுகின்றனர். அவர்கள் தேடிவந்த பதக்கம் எலிசபெத்திடம் இருப்பதாலும் மேலும் அவள் பெயர் எலிசபெத் டானர் என்றதாலும் அவளை கடத்திச்செல்கின்றனர். அங்கு பிளாக்பியர்ல் கப்பலின் படு பயங்கர கேப்டனான ஹெக்டர் பர்போசாவை சந்திக்கிறாள் எலிசபெத். அவளிடம் தன் கதையை சொல்கிறான் பர்போசா.

சில வருடங்களுக்கு முன்...

அஸ்டக் பொக்கிஷத்தை அடைவதற்காக கல்லரைத்தீவை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறது பிளாக்பியர்ல். அதன் கேப்டனான ஜாக் ஸ்பேரோவை வஞ்சகமாய் ஏமாற்றி ஒரு தீவில் இறக்கிவிட்டு கப்பலை எடுத்துச்செல்கிறான் பர்போசா. இதற்கு எதிர்ப்பு தொரிவிக்கும் ஒரே நபர் வில் டானரின் தந்தையான வில்லியம் பூஸ்ட்ரப் டானர். இதன் பின்னர் அஸ்டக் தங்கத்தை கொள்ளையடித்த பிறகுதான் தெரிகிறது பசி,தாகம் அடங்காத சாவே வராத நிலவொளியில் பேய்யாய் மாறும் சாபத்திற்கு ஆளானது. இதிலிருந்து மீண்டுவர கொள்ளையடித்த 882 பதக்கங்களையும் அவர்களின் ரத்தத்துடன் கல்லரைத்தீவில் வைக்க வேண்டும். இதற்காகவே எலிசபெத்தை கடத்திச்செல்கிறான்.

இந்நிலையில் எலிசபெத்தை காதலிக்கும் வில் டானர், ஜாக்கை விடுவித்து எலிசபெத்தை மீட்க உதவி கோருகிறான்.  இவனே வில்லியம் டானரின் உண்மையான வாரிசு என்பதையும் சாபம் தீர இவனது ரத்தம் தேவை என்பதையும் அறிந்த ஜாக், வில்லிற்கு உதவ சம்மதிக்கிறான்.
இதன்பின் எலிசபெத் மீட்கப்பட்டாளா? பர்போசாவின் சாபம் தீர்ந்ததா? ஜாக், பர்போசாவை பழி தீர்த்தானா? ஜாக்கிற்கு பிளாக்பியர்ல் கப்பல் கிடைத்ததா? இதற்கெல்லாம் விடை பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் : குருஸ் ஆஃப் த பிளாக்பியர்ல் படத்தில் உள்ளது.

Post credits என்ற ஒரு மிகச்சிறிய காட்சி ஹாலிவுட்டின் சில படங்களின் கட்டக்கடைசியில் வரும். படத்தில் வேலை பார்த்தவர் சூட்டிங்கை வேடிக்கை பார்த்தவரென்று ஒரு இரண்டாயிரம் பெயர்களை போடுவார்களே அதன் பின்னர் வரும் பத்து வினாடி காட்சிதான் அது. ( அவஞ்சர்ஸ் ஹீரோக்களின் அணைத்து படங்களிலும் இது உண்டு) அதைப்போல் இந்த பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன்  படங்களிலும் உண்டு அதையும் காத்திருந்து பாருங்கள்.

                                                                                                             
                                                                                                           

Wednesday, February 19, 2014

கரீபியன் கடற்கொள்ளையர்-2

டிஸ்னி லேன்ட் தீம் பார்க்,இது பல
நாடுகளில் உள்ள
ஒரு பொழுதுபோக்கு பூங்கா.
இங்கு நடத்தப்படும் ஒரு சாகச
நிகழ்ச்சிதான் பைரேட்ஸ் ஆஃப் த
கரீபியன் ( நம்ம ஊர் பொருட்காட்சியில்
நடக்கும் மேஜிக் ஸோ போன்றது).
இதை அடிப்படையாய்
வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்க
திட்டமிட்டிருந்தார் வால்ட்
டிஸ்னி ஸ்டூடியோவின்
தலைமை நிர்வாகியான டிக் குக்.
2001ம் ஆண்டு ஜே வெல்பர்ட் என்ற
சுமாரான ஸ்கிரிப்ட் ரைட்டரிடம் இந்த
படத்திற்கான திரைக்கதை எழுதும்
பணி கொடுக்கப்பட்டது.
அவரும் எழுதினார். டிக் குக்
வந்து படித்தார்.
பிடிக்கவில்லை.
அழித்தார்.
எழுதினார்.
இப்படியே ஒரு வருடம் ஓடியது.
பொருத்துப்பார்த்த டிஸ்னி இவரை எழுத
வைத்தால் படத்தின் பட்ஜெட்டைவிட
பேப்பர் செலவு அதிகமாகிவிடும் என
பயந்து வெல்பர்டை தூக்கிவிட்டு
ஸ்டூவர்ட்
பேத்தி என்பவரை நியமித்தது.
இந்நிலையில்தான் த ராக், கான் ஏர்,
ஆர்மகெடன் போன்ற பல
படங்களை தயாரித்த ஜெர்ரி புருகேமியர்
என்ற தயாரிப்பாளரை இந்த படத்தின்
தயாரிப்பில் சேர்த்துக்கொண்டார் குக்.
இம்முறை ஸ்கிரிப்டை ஜெர்ரி படித்தார்.
பிடிக்கவில்லை.
அழித்தார்.
எழுதினார்.
மீண்டும் பழைய குருடி கதவ தொரடி.
(இதுக்கு என்ன அர்த்தம்)
இங்க தான் திரைக்கதையில்
ஒரு திருப்பம் நிகழ்ந்தது.
த மாஸ்க் ஆஃப்
ஸோரோ படங்களுக்கு திரைக்கதை
எழுதிய டெட் எலியட் மற்றும்
டெர்ரி ரோசியோ ஆகியோரிடம் இந்த
படத்தின் ஸ்கிரிப்ட் கொடுக்கப்பட்டது.
இவ்விருவரும் பழைய
திரைக்கதையை மாற்றி எழுதி
பேய்க்கதையை புகுத்தி ஒரு ஃபேன்டஸி
வடிவம் கொடுத்தனர்.
இதுவே தயாரிப்பாளர் ஜெர்ரிக்கும்
பிடித்துப்போனது.
ரைட் இப்ப
கதை ரெடி அடுத்து ஒரு இயக்குனர்
வேண்டுமே என தேடியபோது,
இதுவரை மூன்று படங்களை மட்டுமே
இயக்கிய கோர் வெர்பின்ஸ்கி சிக்கினார்.
இக்கதையின் ஜாக்
ஸ்பேரோ பாத்திரத்திற்கு முதலில்
பரிந்துரைக்கப்பட்டவர் ஹியு ஜாக்மென்
(எக்ஸ் மென்).
நல்லவேலை எவன்செஞ்ச
செய்வினையோ பின்னர்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் ஜானி டெப்.
பின்னர் ஆர்லான்டோ புளும்,
கெய்ரா நைட்லி என்று மற்ற நடிகர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டு படபடப்புடன்
படப்பிடிப்பு ஆரம்பித்தது.
வெறும் ஆறு நாட்கள்
மட்டுமே உண்மையில் கடலில்
எடுக்கப்பட்டது.
மற்ற காட்சிகள் அணைத்தையும்
கம்ப்யூட்டர் கவனித்துகொண்டது.
ஒருவழியா படப்பிடிப்பு முடிந்து படம்
ரிலீசிற்கு ரெடி.
இப்பதான் பத்திரிக்கைகள் டிஸ்னியின்
வயிற்றில் புலியை கரைத்து ரசம்
வைத்தது.
அதன் காரணம் இதுவரை வந்த
அணைத்து கடற்கொள்ளையர் படமும்
செம ஃபிளாப்.
போதாதற்கு ஒரு மாதிரியான
வரலாற்று படங்களிளேயே
நடித்துக்கொண்டிருந்த
ஜானி டெப்பை நம்பி நூற்றி நாற்பது
மில்லியன் டாலரில் யாரும் படம்
எடுத்ததில்லை.
எனவே இந்த படமும் குப்புற
விழுந்து உப்பை கவ்வும்,
டிஸ்னிக்கு பட்டை நாமம்தான் என
பத்திரிக்கைகள் எழுதின.
போட்ட காசு டாலரில் வராவிட்டாலும்
ரூபாயிலாவது வரட்டுமென்று ஜூலை
9, 2003ல் பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் :
குருஸ் ஆஃப் த பிளாக் பியர்ல் என
பெயரிட்டு ரிலீஸ் செய்தது டிஸ்னி.
தயாரிப்பாளர் ஜெர்ரியும்
துண்டை துவைத்து
காயவைத்துக்கொண்டிருந்தார்
தலையில் போட தேவைப்படுமென்று.
சனிபகவானும் சுக்கிரனும் ஒருவரைப்
பார்த்து ஒருவர் சிரித்துக்கொண்டனர்.

Saturday, February 15, 2014

கரீபியன் கடற்கொள்ளையர்

உங்களுக்கு ஏதாவது திருடிய அனுபவம் உண்டா? நிச்சயம் நம் எல்லோருக்கும் இருக்கும். அட்லிஸ்ட் ஒரு பேனாவாவது திருடியிருப்போம். திருட்டுக்கும் கொள்ளைக்கும் என்ன வித்தியாசம்?
கேங்கா சேர்ந்து திருடுனா அது கொள்ளை. தனியா ஒருத்தன் கொள்ளையடிச்சா அது திருட்டு (இப்ப  எதுக்கு இந்த 'திருடபுராணம்' ).
ரொம்ப நாளாவே பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் படங்களைப்பற்றிய ஒரு தொடரை எழுதவேண்டும் என நினைத்து, அது நினைவுடனே நின்றுவிட்டது. இப்பையாவது எழுதலாமே என்று இந்த பதிவை ஆரம்பித்துவிட்டேன்.
இந்த படங்களைபற்றி தெரியாதவங்க யாருமே இருக்கமுடியாது (ய்யோவ் எங்க தாத்தாவுக்கு அதெல்லாம் தெரியாதுய்யா).இருந்தாலும்
இந்த பதிவ யாராவது ஒருத்தர் படிச்சி பயனடஞ்சாகூட எனக்கு போதும்.

1700களின் ஆரம்ப வருடங்களில் கரீபியன் கடற்பகுதிகளில்  குடிசைத்தொழிலைப்போல பலர் கடற்கொள்ளையில் ( நீச்சல் தெரியாவிட்டாலும்) இறங்கிவிட்டனர்.
அதில் சற்றே செல்வாக்கானவர் கேப்டன் பெஞ்சமின் ஹார்னிகோல்ட். அவர் கொள்ளைக்கூட்டத்தின் ஒரு சாதாரண ஆசாமிதான் எட்வர்ட் டீச்.
இவர் முன்னர் மாலுமியாக இருந்து பின்னர் கொள்ளையனாக மாறிவர். 
ஐரோப்பா, அமெரிக்க வணிக கப்பல்களை தாக்கி கொள்ளையடிப்பதே இவர்களின் முழுநேர வேலை.
பகுதி நேரமாக தங்கள் கப்பற்படையை கொள்ளையில் ஈடுபடுத்திய நாடுகளும் உண்டு.
இந்நிலையில்தான் கேப்டன் பெஞ்சமின் ஹார்னிகோல்டிற்கு பிறகு அந்த கப்பலுக்கு கேப்டன் ஆனார் (கேப்டன் விஜயகாந்த்) எட்வர்ட் டீச்.
இந்த சாதாரண வரிதான் பின்னாட்களில் வரலாறாக மாறியது. எதற்கும் துணிந்தவரான எட்வர்ட் டீச் , லா கான்கர்ட் என்ற மிகப்பெரிய வணிகக்கப்பலை கைப்பற்றினார்.  அதுவே பின்னாட்களில் குயின் அன்னா ரிவன்ஞ்ச் என்ற பெயரில் நாற்பது பீரங்கிகளும் நூறுக்கும் மேலான மாலுமிகளையும் கொண்ட பிரம்மாண்டமான கொள்ளை கப்பலாக மாறி அட்லாண்டிக் கடலையே அலரவிட்டது.

குயின் அன்னா ரிவஞ்சிற்கு கேப்டன் ஆனதும் எட்வர்ட் செய்த முதல் காரியம் தனது தோற்றத்தையும் பெயரையும் மாற்றிக்கொண்டதுதான்.
நீண்ட தாடி, ஓவர் கோட், இடையில் சொருகிய வாள், மார்பின் குறுக்கே துப்பாக்கியுடைய பெல்ட் இதுதான் இவரின் தோற்றம்.
இவருடையது மட்டுமல்ல கடற்கொள்ளையன் என்றாலே நினைவுக்கு வரும் உருவமும் இதுதான்.
அதன்பின்னர் இவரின் பெயரை கேட்டாலே ச்சும்மா அட்லாண்டிக்கடலே அதிரும்
கப்பற்படையே கதரும்  வரலாறிலே வாழும் அந்த பெயர்தான்' பவர் ஸ்டார். '
இப்படி சொல்லனும்னுதான் எனக்கு ஆசை ஆன உண்மை அது இல்லை என்பதால் அந்த இடத்தில் எட்வர்ட் டீச்சின்  புதிய பெயரான "BLACK BEARD "( கருந்தாடி) என்பதை போட்டுக்கொள்ளுங்கள்.
இங்லாந்து கடற்படைக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய இந்த பிளாக்பியர்ட் தான் பைரேட்ஸ் ஆஃப் த கரீபியனின் நான்காம் பாகமான ஆன் ஸ்டேஞ்சர்ஸ் டைடின் வில்லன்.
இனிவரும் பதிவுகளில் படத்தைப்பற்றி விரிவா பார்க்கலாம்.

Friday, January 10, 2014

Desperado (1995)

என் பதின்ம வயதின் மத்திய காலத்தில் தொலைக்காட்சியில் எதேச்சையாய் ஒரு திரைப்படத்தின் சில காட்சிகளை மட்டும் பார்க்க நேர்ந்தது. ஒரு ஆசாமி மேசையில் அமர்ந்து எதையோ சாப்பிட்டுக்கொண்டிருப்பார் அவருக்கு எதிரே ஒரு உருவம் வந்து துப்பாக்கியை நீட்டிக்கொண்டிருக்கும். அந்த சாப்பாட்டு ஆசாமியின் இரு கைகளும் மேசைமீது இருக்கும்போதே உள்ளே இருந்து மற்றோரு கை வெளியே வந்து அந்த உருவத்தை சுட்டுத்தள்ளும். இதில் மற்றொருவர் கிட்டாரில் துப்பாக்கியை வைத்து சுட்டுக்கொண்டிருப்பார்.படு ஸ்டைலாக எடுக்கப்பட்டிருக்கும் அந்த திரைப்படத்தின் பெயரை சில ஆண்டுகள் வரை தேடிக்கொண்டிருந்தேன்.

அது 1990களின் ஆரம்ப வருடம். க்வண்டின் டரன்டினோவும் கிரிஸ்டோபர் நோலனும் ஹாலிவுட்டை அணுகுண்டை போல தாக்கி வளர்ந்து வந்த அதே நேரத்தில் திடீரென ஒரு பொட்டு வெடி வெடித்து ஹாலிவுட்டே திரும்பி பார்த்து திகைத்தது. ஒரு 24 வயது இளைஞன் எடுத்த லோ பட்ஜட் வீடியோ படமான எல் மரியாச்சி தான் அது. அதன் தொடர்ச்சியாக 1995ல் டெஸ்பரடோ என்ற அணுகுண்டை வீசினான் அந்த இளைஞன். இத்திரைப்படம் அமெரிக்க பட்டி தொட்டி எங்கும் அதிரி புதிரி ஹிட் அடிக்க அவர் உலகமெங்கும் பிரபலமானார். அவர் பெயர் ராபர்ட் ரோட்ரிகஸ்.

இவரது படங்கள் பெரும்பாலும் ஜாலியாக பார்க்கும்படி இருக்கும். வன்முறை அதிகம் இருந்தாலும் ரசிக்கும்படி எடுப்பவர்.
ரோட்ரிகஸும் க்வன்டினும் சேர்ந்து வேண்டுமென்றே சில படங்களை ( From dusk till down, Planat terror, Grindhouse)  எடுத்துள்ளனர். இவருக்கு இயக்கம், திரைக்கதை, எடிட்டிங், இசை, ஒளிப்பதிவுனு சினிமாவின் அணைத்து வித்தைகளும் அத்துபடி. சுருக்கமா செல்லனும்னா ரோட்ரிகஸ் ஒரு ஹாலிவுட் டி.ஆர்.

டெஸ்பரடோ படத்தின் கதை திருக்குறளை விட சிறியது. வில்லனை அழிக்கும் ஹீரோ அவ்ளோதான். அது ஏன் எதற்கு எப்படி அப்புடினு எடுத்திருக்கும் விதத்தில்தான் ரோட்ரிகஸ் தனித்து நிற்கிறார். இந்த ஒரு படத்திலிருந்து மட்டும் எத்தனை காட்சிகளை உருவி தமிழ்படங்களில் வைத்திருக்கிறார்கள் என்பதை படம்பார்கும்போது உங்களுக்கே தெரியும். இந்த படத்தின் டைட்டில் போடும்போது ஒரு அருமையான மெக்ஸிகன் பாடல் ஒலிக்கும் நம்ம காப்பி பேஸ்டில் அதுவும் உண்டு.
இது எதுவுமே இல்லனாலும் இந்த படத்தை உங்களை பார்க்கவைப்பது கதாநாயகி ஹாலிவுட் சில்க் ஸ்மிதா சல்மா ஹெக் தான். ( கில்மா ஹெக்னு வச்சிருக்கலாம் அம்மனிய பார்த்தா பல்லுபோன கெழவனுக்குகூட நட்டுக்கும் முடியெல்லாம்). என்னது சல்மா யாரா? ய்யோவ் இப்புடி மட்டும் யாராவது கேட்டீங்க உங்களுக்கு ஃபஸ்ட்நைட்டே நடக்காதுயா.
உயிர் மண்ணுக்கு
உடல் சல்மா ஹெக்கிற்கு
வாழ்க அவரது புகழ்
வளர்க அவரது.......!

இந்த படத்திற்கு மூன்றாம் பாகம் ஒன்று உண்டு. அதில்தான் நான் முதல் பத்தியில் குறிப்பிட்ட அந்த சாப்பாட்டு காட்சி வரும் படு அட்டகாசமான அந்த படத்தின் பெயர் ஒன்ஸ் அபான்ய டைம் ன் மெக்ஸிகோ.
இந்த மூன்று படங்களிலும் பொதுவாக மர்ம மனிதர்  ஒருவர் வருவார்.  உடலெங்கும் பச்சை குத்திக்கொண்டு கையில் கத்தியுடன் ஹீரோவை கொல்ல துரத்திக்கொண்டிருப்பார். இந்த கதாபாத்திரத்தை மட்டும் வைத்து ரோட்ரிகஸ் இரு படங்களை எடுத்துள்ளார் அது மாச்சிடே மற்றும் மாச்சிடே கில்ஸ்.
நான் முன்பே சொன்ன அந்த சாப்பாட்டு ஆசாமி எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஹீரோ அது யார்னு சொல்லுங்க பார்ப்போம் (அது பவர் ஸ்டார் கிடையாது).