2004 நவம்பர், சுவீடனில் ஸ்டிக் லார்சன் என்ற பத்திரிக்கையாலர் இறந்து போய்ட்டாரு. அதுக்கு அடுத்த வருடம் அவர் எழுதிய ஒரு நாவல் வெளிவந்தது. அதுக்கு அவர் வச்சிருந்த பெயர் Men who hate women. 2008ல் இந்த நாவல் ஆங்கிலத்தில் வேறு ஒரு பெயரில் வெளியிடப்பட்டு உலகம் முழுவதும் பயங்கர வரவேற்பை பெற்றது. அந்த பெயர நீங்களும் கேள்விப்பட்டுருக்கலாம். The Girl with the Dragon Tattoo தான் அது.
இதோட தொடர்ச்சியா மேலும் இரு கதைகள் எழுதி இருக்காரு அது, The Girl Who Played with Fire மற்றும் The Girl Who Kicked the Hornets' Nest.
இந்த கதைகளில் வரும் முக்கியமான இரு கதாபாத்திரங்கள் மிக்கேல் ப்ளாங்விஸ்ட், லிஸ்பெத் ஸலாண்டர்.
மிக்கேல் ப்ளாங்விஸ்ட் ஒரு புலனாய்வு பத்திரிக்கையாளர். மில்லினியம் என்ற பத்திரிக்கையை நடத்துபவர். அதனால தான் இந்த கதைகளுக்கு மில்லினியம் ட்ரையாலஜினு பேரு.
லிஸ்பெத் ஸலாண்டர் ஒரு ஹேக்கர். மில்டன் செக்கியூரிட்டி கம்பெனில வேலை. அதுவும் இல்லாம லைட்டா மெண்ட்டல்னு சொல்லப்படுபவள். அதனால எப்பவும் ஒரு கார்டியனோட பராமரிப்புலதான் இவ வாழனும். 20 வயசுக்கு மேல இருந்தாலும் சரி அவ தனியா இருக்க முடியாது அது தான் அங்க சட்டம். அதனால இவளோட சம்பளப் பணம்கூட அந்த கார்டியன் வழியாதான் இவளுக்கு வரும். அந்த பணத்த கொடுக்குறதுக்கு ஒவ்வொரு தடவையும் அந்த கார்டியன் என்ன பன்னுவான்னு படத்தில் பாருங்க.
ஸ்டிக் லார்சனோட மறைவுக்குப் பிறகு இதே கதாபாத்திரங்களை மையமா வச்சி டேவிட் லாகர்கிராண்ட்ஸ் என்பவர் 2015லிருந்து தொடர்ந்து மூன்று கதைகள் எழுதி இருக்காரு. அது The Girl in the Spider's Web,
The Girl Who Takes an Eye for an Eye,
The Girl Who Lived Twice. இதில் நான்கு திரைப்படங்களா வந்திருக்கு.
The Girl with the Dragon Tattoo
சுவீடனின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான ஹென்றிக் வாங்கர் என்பவர் ஒரு இக்கட்டான நிலையில் இருக்கும் ப்ளாங்விஸ்டை தன்னை சந்திக்க வரும்படி அழைப்பு விடுக்கிறார். அந்த சந்திப்பில் நாற்பது வருடங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட தனது தம்பி மகளான ஹாரியட் வாங்கரை கொலை செய்த கொலைகாரனை கண்டுபிடித்துத் தரும்படி கேட்கிறார். அந்த கொலைகாரனை மிக்கேல் ப்ளாங்விஸ்ட் கண்டுபிடித்தாரா இல்லையா என்பது தான் இந்த படம். இதில் லிஸ்பெத் ஸலாண்டரின் கதையும் ப்ளாங்விஸ்ட்டின் கதையும் தனித்தனியா ஆரம்பித்து பின்னர் ஒன்றாக இணைந்து செல்லும்படி எடுத்திருப்பாங்க. இந்த கதை சுவீடனில் 2009திலும் ஹாலிவுட்டில் 2011னிலும் எடுக்கப்பட்டது. சுவீடன் வெர்ஷனில் உள்ள ப்ளாங்விஸ்டின் சிறு வயது காட்சிகள் ஹாலிவுட் வெர்ஷனில் இருக்காது. இந்த படத்தை ஹாலிவுட்டில் எடுத்தது க்ரைம் திரில்லர் படங்களை எடுப்பதற்காகவே பிறவி எடுத்த டேவிட் ஃபின்ச்சர். இது வரைக்கும் மூன்று பேர் லிஸ்பெத் ஸலாண்டரா நடிச்சிருந்தாலும் எனக்கு பிடிச்சது ரூனி மாரா தான். சுவீஸ் வெர்ஷன்ல நடிச்சது நூமி ராப்பேஸ். இவங்க வாட் ஹாப்பன் டு மண்டே, ப்ரமோதியஸ் படங்களில் அட்டகாசமா நடிச்சிருந்தாலும் ரூனி மாராவை எனக்கு பிடிச்சதுக்கு காரணம் டேவிட் ஃபின்ச்சரா தான் இருக்கனும். ஹாலிவுட்லையும் இந்த மூன்று பாகங்களும் வரவேண்டியது ஆன சில காரனங்களால் அது கைவிடப்பட்டு முதல் கதையும் நான்காவது கதையும் மட்டுமே வந்தது.
The Girl Who Played with Fire
ஸலாண்டரோட கார்டியனான பியூர்மென் கொலை செய்யப்படுகிறார். அவரை சுட்ட துப்பாக்கியில் இருப்பது லிஸ்பெத் ஸலாண்டரோட கை ரேகை. மில்லினியம் பத்திரிக்கையில் பெண்களை கடத்தி விபச்சாரத்தில் தள்ளும் ஒரு கும்பலைப் பற்றிய செய்தியை வெளியிட ப்ளாங்விஸ்ட் தனது குழுவுடன் ஆலோசனை செய்கிறார். அதில் ஒரு ரிப்போர்ட்டர் சில ஆதாரங்களை சேகரிக்கும் போது கொல்லப்படுகிறார். அந்த கொலைப் பழியும் ஸலாண்டர் மேல் விழுது. அதிலிருந்து அவள் தப்பித்தாளா, அந்த கும்பல் யாரு என்பது தான் இந்த படம். இதில் ஸலாண்டரோட பூர்வீகம் கொஞ்சம் சொல்லப்பட்டிருக்கும்.
The Girl Who Kicked the Hornets' Nest
மேல உள்ள கதையோட தொடர்ச்சிதான் இது. ஸலாண்டர் தலையில் குண்டு துளைத்து ஹாஸ்பிட்டலில் இருக்கா. ஸலாண்டரினால் தங்களோட வண்டவாளம் வெளியே வந்துடும்னு பயந்த அந்த கும்பல் அவளை கொல்ல பாக்குறாங்க. கொலை செய்வதற்கு யார் வராங்கனு பார்த்தா நாளைக்கு சாகப்போர நிலையில் உள்ள நாலு கெழவனுங்க ஒரு கையில் துப்பாக்கியும் மறு கையில் குச்சியையும் புடிச்சிகிட்டு தட்டு தடுமாறி வராங்க. அவனுங்க கை நடுக்கத்த பார்த்து நாமளே அவள கொன்னாத்தான் உண்டு. ஏதோ ஜேஸன் பார்ன் அளவுக்கு போலிஸ், பத்திரிக்கை, வில்லனுங்களாம் பில்டப் பன்ற ஸலாண்டர் இந்த படத்தில் என்ன பன்றாங்கனு பார்த்தா நாம போய் படுத்து தூங்குற வரைக்கும் அவங்க பெட்ட விட்டு எழுந்திரிக்கவே மாட்டேங்குறாங்க. மரண மொக்க. The Girl Who Kicked the watchers ass.
The Girl in the Spider's Web
ஃபிரான்ஸ் பால்டார் என்ற சைண்டிஸ்ட் அமெரிக்க அரசாங்கத்துக்காக புராஜெக்ட் ஃபயர்ஃபால்னு ஒரு சாஃப்ட்வேர உருவாக்குகிறார். அதன் மூலம் உலகில் உள்ள அனைத்து நியூக்ளியர் மிசைல்களையும் கண்ட்ரோல் பன்ன முடியும். ஆனா அதனால் வரும் ஆபத்தை உணர்ந்த பால்டார் அந்த சாஃப்ட்வேர அமெரிக்காவிடமிருந்து ஹேக் பன்றதுக்கு ஸலாண்டரின் உதவிய கேட்கிறார். அப்படி ஹேக் பன்னதுக்கு அப்புறம் ஸலாண்டரிடமிருந்து ஸ்பைடர் என்ற தீவிரவாத அமைப்பு அந்த சாஃப்ட்வேர திருடி விடுகிறார்கள். அந்த சைண்டிஸ்ட்டையும் கொன்னுடுறாங்க. இதுக்கு அப்புறம் என்ன ஆகுது, படத்தில் பாருங்க. முதல் பாகத்துக்கு அப்புறம் அட்டகாசமான படம் இது தான்.
0 Comments:
Post a Comment