Thursday, July 18, 2013

வாலி

இவர்
புவியில் பாடினார்
எவன் எவனுக்கோ
இன்று
கவிபாடச்சென்றுவிட்டார்
எமனுக்கோ!

இவர்பாட்டால்
ஒருவர் மந்திரியானார்
ஒருவர் மன்மதன்ஆனார்
முன்னவர் MGR
பின்னவர் STR
இவர்

கிருஷ்ணவிஜயம் எழுதினால்
கிருஷ்ணரேகூட
எட்டிப்பார்ப்பார்
தன்னையும் விஜயம் செய்யென
சிவனும் இவரிடம்
முட்டிப்பார்ப்பார்

இவர் பக்திப்பாடலால்
காமனுக்கும்
அருள்வரும்
இவர் காதல்பாடலால்
கந்தனுக்கும்
காதல்வரும்

அகவை என்பதிலும்
இவர்
இளமை நீரூற்று
எந்த காலத்திற்கும்
பாட்டெழுதுவதில்
நீர் ஊற்று

அண்ணார் உதித்ததோ
திருவரங்கம்
வெள்ளுடை வெண்தாடியில்
சினிமாவில் வாழ்ந்த
கவிச்சுரங்கம்

பாமாலையால் பூமாலை
கட்டியவருக்கு இன்று
மரணம் வைத்தது
மலர்வளையம்
உன்னுடன் உடன்கட்டை ஏரலாமா
என்ற யேசனையில்
தாழ்ந்திருக்கிறது
தமிழ்மகளின் தலையும்.
 ்

Monday, July 15, 2013

நூலகம்-2

நாவல்களைப்போல் பெருத்தும் சிறுகதைகள் போல் சிறுத்தும் இல்லாமல் இவை இரண்டிற்குமிடையில் கட்டுரை வடிவில் சுவைபட கதைசொல்வதில் கைதேர்ந்த எழுத்தாளர் கார்டூனிஸ்ட் மதன்.இவரின் வந்தார்கள் வென்றார்கள் அணைவரும் அறிந்ததே, அதனால் இவரின் மற்ற நூல்களைபற்றி எழுதலாம் என நினைக்கிறேன்.

மனிதனும் மர்மங்களும்

அந்த பிரபல மனோதத்துவ மருத்துவர் தனது வழக்கமான நோயாளியை காண அந்த மருத்துவமணை வராண்டாவில் நடந்து கொண்டிருந்தார். எதிரில் வந்த ஒரு நர்ஸ் அவருக்கு வணக்கம் வைத்துவிட்டு மறைந்துவிட்டார்(?!). இத்தனை வருடங்களில் அந்த நர்ஸை பார்த்திராத மருத்துவர் அவரைபற்றி விசாரித்தார். பல வருடங்களுக்கு முன்பே அந்த நர்ஸ் மருத்துவமனையில் தூக்கில் தொங்கிய உண்மை அப்போதுதான் அவருக்கு தெரியவந்தது. அப்புடினா அவர் பார்த்த அந்த அது? அதுவேதான்!
இதுபோன்ற பேய்கதைகளை சற்று பயந்துகொண்டே படிப்பது எனக்கு பிடித்தவிசயங்களில் ஒன்று. இதைப்போலவே பல 'பிரபல' பேய்கதைகள் இந்த புக்கில் உண்டு.

மனிதன் மல்லாக்க படுத்து வானத்தை பார்க்க ஆரம்பித்த அன்றுமுதல் இன்றுவரை தொடரும் ஒரு தொடர்கதை ஏலியன்.  ஹாலிவுட்டில் பொழப்பு ஓடுவதே இந்த பயபுள்ளைகளாலதான். பறக்கும் தட்டு முதல் பட்டர்ஃபிளை வரை வானத்தில் பார்த்தவர்கள் அனேகம்பேர் அமெரிக்காவில் இன்றும் உள்ளனர். ஏலியனை பேட்டி எடுத்தவர் ஏலியனுடன் சம்பந்தம் பேசியவர்னு இந்த புக்ல நிரையபேர் இருக்காங்க ஜாக்கிரதை.

ஒரு பொருளை கண்ணால்பார்த்தே நகர்த்தவோ வலைக்கவோ பறக்கவோ வைக்க முடியுமா? அப்படியும் ஒருவர் இருந்தார். அவர் பெயர் யூரி கெல்லர். இவரை பல மருத்துவர்கள் சோதனைசெய்து பார்த்ததில் அசந்துபோன ஒரு விசயம் இவர் தனது உயரத்தை கூட்டியும் குறைத்தும் காண்பித்ததுதான். இந்த வகையராக்களும் இதில் உண்டு.

என்னதான் மனிதன்  கிளிஜோசியத்திலிருந்து கம்ப்யூட்டர் ஜோசியத்திற்கு பரிணாமவளர்ச்சி அடைந்திருந்தாலும் இவை அணைத்தும் எதிர்காலத்தை தெரிந்துகொள்ளும் ஆசையையே காட்டுகிறது. பலநூரு ஆண்டுகள் கழித்து நடக்கப்போவதை முன்னரே எழுதிவைத்த மனிதர்களும் தன் மரணத்தை முன்பே தெரிந்துகொண்ட ஆப்ரஹாம் லிங்கனும் மற்றொறு அதிசய சிறுமியும் இந்நூலில் வருகின்றனர். முடிந்தால் அவர்களிடம் உங்கள் எதிர்காலத்தை கேட்டுபாருங்க. மொத்தத்தில் இதுஒரு ரகளையான கலவையான புக்

Friday, July 5, 2013

முன்னோட்டம் - Trailer

கடந்த சில நாட்களில் இந்த ஹாலிவுட்காரர்கள் அயன்மேன் மற்றும் சூப்பர்மேனை வைத்து உங்கள் பணத்தையும் மனத்தையும் பதம்பார்த்து விட்டனர். இது போதாதென்று தலைவரின் லோன் ரேஞ்சர் வேறு. இவற்றிற்கெல்லாம் மாற்று மருந்தாய் அமைந்தது நம்ம சிங்கம்-2 என்பது தனிக்கதை. இதோடு பொலச்சிபோங்கடா என்று விட்டார்களா என்றால் அதுதான் இல்லை. அடுத்த ஆறு மாதங்களிலும் 2014லிலும் வெளிவந்து வசூலை வாரிகுவிக்கவோ வாய்பிளக்க வைக்கவோ அல்லது வசைமாரி பொழியவோ வைக்க இருக்கும் ஹாலிவுட் படங்களை பற்றிய டிரைலர் பதிவுதான் இது.

1.Thor:The dark world
ஏற்கனவே இவர் தனியாகவும் Avangerல் கூட்டாகவும் வந்து பூமியை கதிகலங்கச்செய்தவர். நோர்ஸ் கடவுளின் மகனும் இடியின் அதிபதியான இந்த தோர் இம்முறை பூமியையும் அவர் கிரகத்தையும் எப்படி காக்கிறார் என்பதை சுத்தியல் முழங்க கண்டுமகிழுங்கள். இந்த பகுதியிலும் பங்காளி லோகி உண்டு.

2.300:Raise of an Empire
300 படத்தின் வெற்றிக்கு பிறகு கிரேக்கநாட்டிற்கு என்ன ஆனது என்பதை நாம் மறந்துவிட்டோம் ஆனால் ஹாலிவுட்டில் மறப்பார்களா?. ஸ்பார்டா மன்னர் லியனோடசும் 300 வீரர்களும் இறந்தபின் , பெர்ஸிய மன்னர் ஸெர்ஸிஸ்கும் கிரேக்க தளபதி தெமிஸ்டோக்ளஸ்கும் நடக்கும் யுத்தமே இத்திரைப்படம். வரலாற்றில் மிக நெருக்கமாக நடந்த ஒரு போரை அதே நெருக்கத்துடன் உங்களமீதே ரத்தம் தெரிக்கும் அளவுக்கு 300ல் காட்டியவர்கள் இதில் கிரேக்க கடற்போரை கடல்நீர் தெரிக்கும் அளவுக்கு அருமையாய் எடுத்துள்ளனர்.இப்படமும் ஃபிராங்க் மில்லரின் கிராபிக் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

3.Riddick:Rule the Dark
2000 மற்றும் 2004ல் வந்த ரிட்டிக் சீரிசில் இது மூன்றாம் பகுதி. இந்த பிரபஞ்சம் முழுதும் உள்ள பல கிரகங்களால் தேடப்படும் ஒரு கெரகம்புடிச்ச பயபுள்ளதான் இந்த ரிட்டிக். Bounty hunterகளால் பிடித்துவரப்பட்டு பல ஏலியன்கள் இருக்கும் கிரகத்தில் விடப்படும் ரிட்டிக் அங்கிருந்து எப்படி தப்பித்து எதிரிகளுக்கு ரிவிட் அடிக்கிறான் என்பதுதான் கதை. கிராஃபிக்ஸ் கலக்கலாக உள்ளது.

4.The Wolverine
தொடந்து X-manல் நடித்து அங்கிருந்து ரிடயர்ராகி வால்வரைனாக வந்தவர் இப்போது மீண்டும் வந்துள்ளார். டோக்கியோவிற்கு அமைதியாக "வாளை"சுருட்டிக்கொண்டு வாழப்போகிரார் வால்வரைன். அங்க ஒரு பக்கி சும்மா இல்லாம அண்ணாத்த கத்தியில சொனையிருக்கானு சொறிஞ்சிபார்க்க வால்வரைன் வகுந்தெடுக்கும் கதையை படத்தில் பாருங்க.

5.The Hobbit:The Desolation of Smaug
ட்வர்ப் எனப்படும் குள்ள மனிதர்களுக்கு உதவச்செல்லும் மற்றொறு சித்திரகுள்ளரான பில்போ பேகின்ஸ் எனும் ஹாபிட்டின் அட்வெஞ்சர்தான் இந்த இரண்டாம் பாகம். வழக்கம்போல் கர்மசிரத்தையுடன் பீட்டர் ஜாக்சன் எடுத்துள்ளார். இந்த பாகத்தில் புதிதாக வருபவர் நமக்கு LOTRல்  ஏற்கனவே பரிச்சயமான எல்ப் இனத்தைசேர்ந்த லெகோலஸ். வில்வித்தையில் நமது அர்ஜுனனை இவரைப்போல்தான் காட்டவேண்டும். எனக்கு மிகவும் பிடித்த இப்படம் வரும் டிசம்பரில் ரிலீஸ்.
6.Machete kills
ராபர்ட் ரோட்ரிகஸ் என்ற இயக்குனரை உங்களுக்கு தெரிந்திருந்தால் பிடித்திருந்தால் இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். இவர் Spykids, Once upon a time in mexsico படங்களின் இயக்குனர். ஜெசிகா ஆல்பா, அலெக்ஸா வேகா உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட அழகிகளை வைத்துக்கொண்டு வெரும் ஆக்ஸன் படமா எடுத்திருக்கமாட்டார் என நினைக்கிறேன். ஏனெனில் முந்தைய Machete படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும். அப்புறம் இந்த படத்தில் மெல் கிப்சன்தான் வில்லன்.

இவை அனைத்தும் யுடியூபில் வெளியான டிரைலரை வைத்து எழுதப்பட்டது.  இவற்றைதவிர வரவிருக்கும் மேலும் சில திரைப்படங்கள
1.Captian America:winter solder
2.Pacific Rim
3.Red 2
4.The Amezing Spiderman 2
5.CinCity 2
6.Juracik park 4
7.Avengers 2

........Wait n see......