Wednesday, April 24, 2013

மாயாவி


பொதுவாக சூப்பர்ஹீரோக்களில் இருவகை உண்டு, தன்னகத்தே பல சக்திகள் கொண்டு அதன்மூலம் இவ்வுலகை காப்பதுஒருவகை ( சூப்பர்மேன்,ஸ்பைடர்மேன் வகையரா...). சாதாரன மனிதனாக இருந்துகொண்டு பல்வேறு உபகரணங்களின் உதவிகொண்டு இவ்வுலகை(உங்களிடமிருந்து தான்) காப்பது மற்றொறு வகை (பேட்மேன்,அயன்மேன் வகையரா...). இதில் நம் நாயகன் இரண்டாம் வகை.  என் சிறுவயதில் படித்த ராணிகாமிக்ஸில் என்னை பெரிதும் கவர்ந்திருந்த முகமுடி வீரர் மாயாவிதான் அந்த உலகநாயகன். இவர் முத்துகாமிக்ஸில் வேதாளராக வருவார். இவர்கதைகளில் வரும் குதிரை,ஓநாய்,பங்கல்லா காடு,பந்தர் குள்ளர்கள்,மன்டைஓடு குகை,முத்திரை மோதிரம்  இவற்றைப்போல் இவரது குத்தும் படு பிரசித்தம்.
லீ ஃபாக் என்ற அமெரிக்க காமிக் ரைட்டர் உருவாக்கிய இந்த கதாபாத்திரத்தை வைத்து 1996ல் The Phantom என்றொரு திரைப்படம் வந்துள்ளது.

இந்த படத்தோட கதை என்னன்னா, சக்திவாய்ந்த மூன்று மன்டைஓடுகள் இருக்கு. முதலாவது பங்கல்லா காட்டிலுல்ல குகையிலும் இரண்டாவது நியூயார்க்கிலுல்ல அருங்காட்சியகத்திலும், மூன்றாவது ஒரு கடற்கொள்ளையனிடமும் உள்ளது. இந்த மூன்று மன்டைஓடுகளையும் ஒன்று சேர்த்து சக்தியைபெற முயற்சிக்கும் வில்லனை எப்படி மாயாவி முறியடிக்கிறார் என்பதுதான் கதை.
பங்கல்லா காட்டிலுல்ள மன்டைஓடை எடுக்கவரும் வில்லனின் ஆட்களுடன் ் மோதுவதில் ஆரம்பிக்கும் படத்தின் ஆரம்பக்காட்சி, அதனை தொடர்ந்து மரப்பாலத்தில் தலைகீழாய் தொங்கும் காரில் உள்ள சிறுவனை மீட்கும் காட்சிகளும் அட்டகாசம். பின்னர் நியூயர்க் பயணம், டயானாவின் அறிமுகம், இன்னபிற சேசிங் காட்சிகளும் சூப்பர். இறுதியில் வில்லனையும் கடற்கொள்ளைகாரனையும் மாயாவி என்ன செய்தார் என்பதை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
காமிக் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்.