Saturday, January 2, 2016

முன்னோட்டம் - 2


இந்த வருசமாவது உலகத்துக்கு நாம ஏதாவது சொல்லியே ஆகனுமேனு கடந்த ஒரு வருடமா (நேத்து நைட்டுலேருந்துதான்)  என்ன எழுதலாம்னு அதி தீவிரமா யோசிச்சி(!) நீங்க ஆவலுடன் எதிர்பார்க்காத இந்த பதிவ கண்டுபிடிச்சேன். எப்படியும் மொக்கையாதான் இருக்கும் அதனால நீங்க வேற ஏதாவது செல்ஃபிக்கு லைக்போட போகலாம் ரைட்…..

இனிமே வரப்போற சில படங்களின் முன்னோட்டத்தை பார்க்கலாம்.

1. DEADPOOL
எக்ஸ்மென் ஆர்ஜின்: வால்வரைன் படம் பார்த்தவங்களுக்கு அதில் ஆரம்பத்தில் சுழல்கத்தி வீரனாகவும் கடைசியில் வில்லனாகவும் வருபவன் தான் இந்த டெட்பூல். இவன் ஒரு ஆண்ட்டி ஹீரோ ( ஆண்ட்டின உடனே என்னமாரியே யோசிக்காதிங்க, இது வேற). இன்னும் சிலபல சூப்பர் பவர் ஆசாமிகளோட ஃபிப்ரவரில இந்த படம் ரிலீஸ் ஆகுது. இதுல ஹீரோவா நடிச்சவரு DC காமிக் படமான க்ரீன் லாண்டர்ன்ல நடிச்ச ரேய்ன் ரெனால்ட்ஸ்தான்.

2. Batman vs Superman – Dawn of justice
Man of steel படம் பார்த்தீங்களா? அதுல மக்கள காப்பாத்துரேனு சொல்லிகிட்டு அந்த நகரத்தையே சண்டைபோட்டு நாசமாக்கிருவாரு நம்ம சூப்பர்மேன். இந்தாளுகிட்டேருந்து நம்மள காப்பாத்த யாருமே வரமாட்டாங்களானு மக்கள் நினைக்கும்போது, பேட்மேனோட புது அயன்சூட்ட மாட்டிகிட்டு தொபுக்கடிர்னு குதிக்கிறாரு பென் அஃப்லெக். பேட்மேனுக்கும் சூப்பர்மேனுக்கும் நடக்குற சண்டைல Wonderwomen, Aquaman, Flashனு நிறைய சூப்பர்ஹீரேஸோட அறிமுகமும் இருக்கு. மார்வெல் காமிக்ஸ்கு அவெஞ்சர்ஸ் போல டிசி காமிக்ஸ்கு ஜஸ்டிஸ் லீக். 2017ல வரப்போற ஜஸ்டிஸ் லீக் படத்துக்கான அறிமுகந்தான் இந்த கும்பல்ஸ். இது பத்தாதுனு சூப்பர்மேனோட ஃபேவரிட் வில்லனான லெக்ஸ் லூதரும், சூப்பர்மேன சாகடிச்ச டூம்ஸ்டே என்ற படு பயங்கர ஜந்துவும் இந்தபடத்துல உண்டு. மார்ச் 25 ரிலீஸ்.

3. The Juncle book
நூற்றி ஐம்பது வருசத்துகு முன்னாடி ஒரு வெள்ளக்கார தொர எழுதிய கதைதான் ஜங்கிள் புக். இந்திய காட்டில் நடக்கிற கதை. இதன் கார்டூன் தொடரை சின்ன வயசுல (வேற எந்த சேனலும் வராத காரணத்தால்) தூர்தர்ஸனில் பார்த்திருக்கிறேன். ஹாலிவுட் ராமநாராயணன் எடுத்த இந்த படம் ஏப்ரலில் ரிலீஸ்.

4. Captain America – Civil war
தோரும் ஹல்க்கும் தலையகாட்டிருந்தா இந்த படத்துக்கு அவெஞ்சர்ஸ்னு தான் பெயர் வச்சிருக்கனும். அந்த அளவுக்கு பாக்கி எல்லாரும் இருக்காங்க பக்கி பான்ஸ் வுட்பட. அடுத்து வரப்போற பிளாக்பனிதர் இதுலையெ அறிமுகம் ஆகிறார். கேப்டன் விஜயகாந்தும் அயர்ன்மேனும் இரண்டு அணியா பிரிந்து ஏன் அடிச்சிகிறாங்கனு வரப்போற மே மாத எலக்சன்ல தெரிஞ்சிடும்.

5. X-men Apocalypse
வால்வரின் இல்லாத இந்த X-men படம் ச்சார்ல்ஸ் மற்றும் மேக்னடோவின் இளமை காலத்துல நடக்குது. பல ஆயிரக்கணக்கான வருசமா வாழ்ந்து வரும் உலகின் முதல் மியூட்டண்டான அபோகலிப்ஸ்தான் இதுல வில்லன். நீல நிறத்தவனான இவந்தான் நம்ம ராமனும் கிருஸ்ணனும். அப்புடினு நான் சொல்லல அவரே ட்ரைலர்ல சொல்றாரு. அவெஞ்சர்ஸ்ல மொக்கையா காட்டிய குயிக்சில்வர இதுல வழக்கம்போல நல்லா காட்டிருப்பாங்கனு நினைக்கிறேன். மே 27 ரிலீஸ் ஆகுது.

6. Warcraft
பிரபல விடியோ கேமான வார்க்ராஃப்ட அட்டகாசமான ஸிஜில லைவ் ஆக்ஸன் படமா எடுத்துருக்காங்க. ஆர்க் எனும் பூத இனத்துக்கும் மனித இனத்துக்கும் இடையெ நடக்கும் கதைதான் இது.

7. Suicide Squad
ஜெயில்ல இருக்கிற டிசி காமிக்ஸ் பொறுக்கிகளை எல்லாம்  பொருக்கி எடுத்து ஒரு டீம் உருவாக்குறாங்க. எதுக்குனா வேற வில்லன்களை போட்டுதள்றதுக்கு. அந்த டீம்ல நம்ம ஜோக்கரும் ஒருத்தரு. இதுல டெட்ஸாட் கேரக்ட்டர்ல வில் ஸ்மித் நடிச்சிருக்காரு.

இவைமட்டுமில்லாமல் The legend of Tarzan, Kungfu panda-3, Gods of Egypt நிறைய வந்துகிட்டே இருக்கும். பார்த்து சுஹானுபவம் அடையவும்.

பின் குறிப்பு:


மேலே உள்ள அனைத்தும் எனக்கு இல்லாத மூளையில் யோசித்து எழுதியது அல்ல, நெட்டிலிருந்தே சுட்டது.