Monday, April 27, 2020

பச்சை குத்திய பைங்கிளி.



2004 நவம்பர், சுவீடனில் ஸ்டிக் லார்சன் என்ற பத்திரிக்கையாலர் இறந்து போய்ட்டாரு. அதுக்கு அடுத்த வருடம் அவர் எழுதிய ஒரு நாவல் வெளிவந்தது. அதுக்கு அவர் வச்சிருந்த பெயர் Men who hate women. 2008ல் இந்த நாவல் ஆங்கிலத்தில் வேறு ஒரு பெயரில் வெளியிடப்பட்டு உலகம் முழுவதும் பயங்கர வரவேற்பை பெற்றது. அந்த பெயர நீங்களும் கேள்விப்பட்டுருக்கலாம். The Girl with the Dragon Tattoo தான் அது.
இதோட தொடர்ச்சியா மேலும் இரு கதைகள் எழுதி இருக்காரு அது,  The Girl Who Played with Fire மற்றும் The Girl Who Kicked the Hornets' Nest.
இந்த கதைகளில் வரும் முக்கியமான இரு கதாபாத்திரங்கள் மிக்கேல் ப்ளாங்விஸ்ட், லிஸ்பெத் ஸலாண்டர்.
மிக்கேல் ப்ளாங்விஸ்ட்  ஒரு புலனாய்வு பத்திரிக்கையாளர். மில்லினியம் என்ற பத்திரிக்கையை நடத்துபவர். அதனால தான் இந்த கதைகளுக்கு மில்லினியம் ட்ரையாலஜினு பேரு.
லிஸ்பெத் ஸலாண்டர் ஒரு ஹேக்கர். மில்டன் செக்கியூரிட்டி கம்பெனில வேலை. அதுவும் இல்லாம லைட்டா மெண்ட்டல்னு சொல்லப்படுபவள். அதனால எப்பவும் ஒரு கார்டியனோட பராமரிப்புலதான் இவ வாழனும். 20 வயசுக்கு மேல இருந்தாலும் சரி அவ தனியா இருக்க முடியாது அது தான் அங்க சட்டம்.  அதனால இவளோட சம்பளப் பணம்கூட அந்த கார்டியன் வழியாதான் இவளுக்கு வரும்.  அந்த பணத்த கொடுக்குறதுக்கு ஒவ்வொரு தடவையும் அந்த கார்டியன் என்ன பன்னுவான்னு படத்தில் பாருங்க.

ஸ்டிக் லார்சனோட மறைவுக்குப் பிறகு இதே கதாபாத்திரங்களை மையமா வச்சி டேவிட் லாகர்கிராண்ட்ஸ் என்பவர் 2015லிருந்து தொடர்ந்து மூன்று கதைகள் எழுதி இருக்காரு. அது The Girl in the Spider's Web,
The Girl Who Takes an Eye for an Eye,
The Girl Who Lived Twice. இதில் நான்கு திரைப்படங்களா வந்திருக்கு.

The Girl with the Dragon Tattoo
சுவீடனின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான ஹென்றிக் வாங்கர் என்பவர் ஒரு இக்கட்டான நிலையில் இருக்கும் ப்ளாங்விஸ்டை தன்னை சந்திக்க வரும்படி அழைப்பு விடுக்கிறார். அந்த சந்திப்பில் நாற்பது வருடங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட தனது தம்பி மகளான ஹாரியட் வாங்கரை கொலை செய்த கொலைகாரனை கண்டுபிடித்துத் தரும்படி கேட்கிறார்.  அந்த கொலைகாரனை மிக்கேல் ப்ளாங்விஸ்ட் கண்டுபிடித்தாரா இல்லையா என்பது தான் இந்த படம். இதில்  லிஸ்பெத் ஸலாண்டரின் கதையும் ப்ளாங்விஸ்ட்டின் கதையும் தனித்தனியா ஆரம்பித்து பின்னர் ஒன்றாக இணைந்து செல்லும்படி  எடுத்திருப்பாங்க. இந்த கதை சுவீடனில் 2009திலும் ஹாலிவுட்டில் 2011னிலும் எடுக்கப்பட்டது. சுவீடன் வெர்ஷனில் உள்ள ப்ளாங்விஸ்டின் சிறு வயது காட்சிகள் ஹாலிவுட் வெர்ஷனில் இருக்காது. இந்த படத்தை ஹாலிவுட்டில் எடுத்தது க்ரைம் திரில்லர் படங்களை எடுப்பதற்காகவே பிறவி எடுத்த  டேவிட் ஃபின்ச்சர். இது வரைக்கும் மூன்று பேர் லிஸ்பெத் ஸலாண்டரா நடிச்சிருந்தாலும் எனக்கு பிடிச்சது ரூனி மாரா தான். சுவீஸ் வெர்ஷன்ல நடிச்சது நூமி ராப்பேஸ். இவங்க வாட் ஹாப்பன் டு மண்டே, ப்ரமோதியஸ் படங்களில் அட்டகாசமா நடிச்சிருந்தாலும் ரூனி மாராவை எனக்கு பிடிச்சதுக்கு காரணம் டேவிட் ஃபின்ச்சரா தான் இருக்கனும். ஹாலிவுட்லையும் இந்த மூன்று பாகங்களும் வரவேண்டியது ஆன சில காரனங்களால் அது கைவிடப்பட்டு முதல் கதையும் நான்காவது கதையும் மட்டுமே வந்தது.

The Girl Who Played with Fire
ஸலாண்டரோட கார்டியனான பியூர்மென் கொலை செய்யப்படுகிறார். அவரை சுட்ட துப்பாக்கியில் இருப்பது லிஸ்பெத் ஸலாண்டரோட கை ரேகை. மில்லினியம் பத்திரிக்கையில் பெண்களை கடத்தி விபச்சாரத்தில் தள்ளும் ஒரு கும்பலைப் பற்றிய செய்தியை வெளியிட ப்ளாங்விஸ்ட் தனது குழுவுடன் ஆலோசனை செய்கிறார். அதில் ஒரு ரிப்போர்ட்டர் சில ஆதாரங்களை சேகரிக்கும் போது கொல்லப்படுகிறார். அந்த கொலைப் பழியும் ஸலாண்டர் மேல் விழுது. அதிலிருந்து அவள் தப்பித்தாளா, அந்த கும்பல் யாரு என்பது தான் இந்த படம். இதில் ஸலாண்டரோட பூர்வீகம் கொஞ்சம் சொல்லப்பட்டிருக்கும்.

The Girl Who Kicked the Hornets' Nest
மேல உள்ள கதையோட தொடர்ச்சிதான் இது. ஸலாண்டர் தலையில் குண்டு துளைத்து ஹாஸ்பிட்டலில் இருக்கா. ஸலாண்டரினால் தங்களோட வண்டவாளம் வெளியே வந்துடும்னு பயந்த அந்த கும்பல் அவளை கொல்ல பாக்குறாங்க. கொலை செய்வதற்கு யார் வராங்கனு பார்த்தா நாளைக்கு சாகப்போர நிலையில் உள்ள நாலு கெழவனுங்க ஒரு கையில் துப்பாக்கியும் மறு கையில் குச்சியையும் புடிச்சிகிட்டு தட்டு தடுமாறி வராங்க.  அவனுங்க கை நடுக்கத்த பார்த்து நாமளே அவள கொன்னாத்தான் உண்டு. ஏதோ ஜேஸன் பார்ன் அளவுக்கு போலிஸ், பத்திரிக்கை, வில்லனுங்களாம் பில்டப் பன்ற ஸலாண்டர் இந்த படத்தில் என்ன பன்றாங்கனு பார்த்தா நாம போய் படுத்து தூங்குற வரைக்கும் அவங்க பெட்ட விட்டு எழுந்திரிக்கவே மாட்டேங்குறாங்க. மரண மொக்க. The Girl Who Kicked the watchers ass.

The Girl in the Spider's Web
ஃபிரான்ஸ் பால்டார் என்ற சைண்டிஸ்ட் அமெரிக்க அரசாங்கத்துக்காக புராஜெக்ட் ஃபயர்ஃபால்னு ஒரு சாஃப்ட்வேர உருவாக்குகிறார். அதன் மூலம் உலகில் உள்ள அனைத்து நியூக்ளியர் மிசைல்களையும் கண்ட்ரோல் பன்ன முடியும். ஆனா அதனால் வரும் ஆபத்தை உணர்ந்த பால்டார் அந்த சாஃப்ட்வேர அமெரிக்காவிடமிருந்து ஹேக் பன்றதுக்கு ஸலாண்டரின் உதவிய கேட்கிறார். அப்படி ஹேக் பன்னதுக்கு அப்புறம் ஸலாண்டரிடமிருந்து ஸ்பைடர் என்ற தீவிரவாத அமைப்பு அந்த சாஃப்ட்வேர திருடி விடுகிறார்கள். அந்த சைண்டிஸ்ட்டையும் கொன்னுடுறாங்க. இதுக்கு அப்புறம் என்ன ஆகுது, படத்தில் பாருங்க. முதல் பாகத்துக்கு அப்புறம் அட்டகாசமான படம் இது தான்.

Saturday, April 28, 2018

அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிடி வார்






மார்வெலோட  திட்டமிடல் திறமை எந்த அளவுக்கு இருக்கும் என்பதற்கு உதாரணம் இந்த படம். கடந்த பத்து வருடங்களா ஒவ்வொரு ஹிரோவா அறிமுக படுத்தியது இந்த கதையை எடுப்பதற்குத்தான்.  அந்த கதையோ தனோஸ் கெஸ்ட், இன்ஃபினிடி கன்லெட், இன்ஃபினிடி வார்னு மிகப்பெரியது. அதனால் இரண்டு பாகமா எடுத்துருக்காங்க. இரண்டாவது பாகம் அடுத்த வருடம் வருகிறது. ஓகே இந்த படம் எப்படி இருக்கு?

ஒரு முழு படமே கிளைமேக்ஸா இருந்தா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு இந்த படம். படத்தோட முதல் நிமிடத்திலிருந்து கடைசி நிமிடம் வரை எல்லா கட்சிகள்லையும் நீக்கமற நிறைந்திருப்பவர் தனோஸ், தனோஸ், தனோஸ் மட்டுமே. ஆரம்பத்தில் இருந்தே அவெஞ்சர்ஸ்கு, லோகி, ச்சிடாரி படை, ரோனன்னு ஒவ்வொரு ஆட்களா அனுப்பி தொல்லை கொடுத்தது இந்த தனோஸ் தான். இத்தனை வருடமா அவ்ளோ பில்டப் கொடுத்த அளவுக்கு இந்த வில்லன் இருக்கானா என்றால் இல்லை. அதுக்கும் மேலையே இருக்கான்.

ஆ வூனு கத்த மாட்டான். இடி இடினு சிரிக்க மாட்டான். அமைதியா நிதானமா  எதுக்கும் அலட்டிக்காம எல்லாவற்றையும் செய்யக்கூடியவன். ரொம்ப செண்டிமெண்டானவன். அழக்கூடியவன் அதே வேலை சூப்பர் ஹீரோக்களே பயந்து பதுங்கிக்கொள்ளக்கூடிய அளவுக்கு படு பயங்கரமானவன். இந்த பிரபஞ்சத்துக்கே நல்லது செய்யக்கூடிய அளவுக்கு இவனுக்கு ஒரு தீவிரமான சித்தாந்தமும் உண்டு. அத்தனை ஹீரோக்களையும் கதற விடுவான். சூப்பர் ஹீரோக்களுக்கான வில்லன் இப்படித்தான் இருக்க வேண்டும்.

இத்தனை ஹீரோக்களையும் கட்டி மேய்க்கிறதே பெரிய வேலை அதை கச்சிதமா ருஸோ சகோதரர்கள் செஞ்சிருக்காங்க. அந்தந்த ஹீரோவுக்கே உரிய தனித்தன்மையான காட்சிகள நல்லாவே எடுத்திருக்காங்க. குறிப்பா ஒரு ஹீரோவுக்கான அறிமுகம் எப்ப இருக்கனுமோ அப்ப இருக்கும் கேப்டன் அமெரிக்காவின் அறிமுகம்.

இந்த படத்திலிருந்து நான் ஒரு காட்சியைகூட சொல்லமாட்டேன் ஏன்னா ஒவ்வொரு காட்சியுமே விசில் சத்தத்தோட இருக்கையே அதிரும்படி தியேடர்ல கிடைக்கும் அனுபவத்தை ஒரு தடவையாவது அனுபவிங்க. இந்த படம் எல்லா வசூல் சாதனைகளையும் அடிச்சி நொருக்க போகுது அது மட்டும் நிச்சயம்.

படத்தில் ஒரே ஒரு போஸ்ட் கிரடிட் காட்சி உண்டு அதில் கேப்டன் மர்வெலுக்கான ஆரம்பம் காட்டப்படும்.

அப்புறம் ட்ரைலர்ல வந்த சில காட்சிகள் படத்தில் இருக்காது இது மார்வெலோட வழக்கமான வேலை தான். அடுத்த பாகத்துக்காக இனி ஒரு வருடம் கத்திருக்கனும் .








Wednesday, January 10, 2018

The Shape of Water – இது மனித காதல் அல்ல



இதுவரைக்கும் நான் எடுத்த படங்களெல்லாம் ஒரு சிறுவனின் மனநிலையில் எடுத்தது ஆனா இந்த படம்தான் ஒரு அடல்டா, உணர்ந்து எடுத்தது – இது சமீபத்திய பேட்டி ஒன்றில் கியர்மோ டெல் டோரா சொன்னது.
சொன்னதைப்போலவே இதுவரை அவர் படங்களில் இல்லாத நிர்வாண, உடலுறவு, பெண்னின் சுய இன்பக்காட்சிகள் இந்த படத்தில் உண்டு. ஆனா இதுக்காக மட்டும் அவர் அப்படி சொல்லல, இது ஒரு காதல்கதை என்பதால் சொல்லிருக்காரு. அதுவும் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல.

எலிசா ஒரு அனாதை ஊமைப் பெண். சினிமா தியேடரின் மாடியில் ஒரு அறையில் வசிப்பவள். பக்கத்து அறையில் ஒரு வயதான ஓவியர். அரசாங்கத்தின் ரகசிய ஆராய்ச்சிக்கூடத்தில் கூட்டி,பெருக்கி சுத்தம் செய்யும் ஒரு சாதாரண நைட்ஷிப்ட் பனிப்பெண்.
அந்த ஆரய்ச்சிக்கூடத்தில் ஒரு நாள் ஒரு பெட்டி வருவதை பார்க்கிறாள். அதற்குள் ஏதோ ஒன்று அசைவதை கண்டு பயந்து சென்றுவிடுகிறாள். மறுநாள் அந்த அறையில் சிந்திக்கிடக்கும் ரத்தத்தை சுத்தம் செய்ய வரும்போதுதான் ’அதை’ முழுதும் பார்க்கிறாள். அது மீனும் மனிதனும் கலந்ததைப்போன்ற ஒரு விசித்திர ஜந்து. தென் அமெரிக்காவின் ஏதோ ஒரு ஆற்றிலிருந்து அதை பிடித்து வந்து ஆராய்ச்சி என்ற பெயரில் வதைத்துக் கொண்டிருந்தார்கள். அதை பார்ப்பதற்காகவே அந்த அறைக்கு அடிக்கடி வருகிறாள். அது சாப்பிட முட்டை தருகிறாள். இசை தட்டுக்களை ஒலிக்கச் செய்கிறாள். நடனமாடுகிறாள். அது கூடவே இருக்க விரும்புகிறாள்.

இந்த கதை நடப்பது அமெரிக்க-ரஷ்ய பனிப்போர் நடந்த 1960களில். அந்த ஆராய்ச்சிகூடதில் இருந்த மருத்துவர்களில் ஒருவர் ரஷ்ய ஒற்றர். இந்த ஆரய்ச்சிய பத்தி அடிக்கடி ரஷ்யாவிற்கு தகவல் கொடுக்கிறார். அந்த ஜந்துவ கடத்தனும் இல்லனா கொல்லனும்னு ரஷ்யா திட்டமிடுது. அமெரிக்காவும் அந்த ஜந்துவ கொன்னு பாகங்களை வெட்டி எடுத்து ஆராய முடிவு செய்றாங்க. எப்படியாவது அந்த ஜந்துவ காப்பாத்தனும்னு எலிசாவும் ஒரு திட்டம் போடுறா. இதுக்கு அப்புறம் என்ன ஆகுதுனு படத்தில் பாருங்க.

ஹெல்பாய் படத்தில் வரும் ஏப்ரஹாம் செப்பியனை போலதான் இந்த ஜந்துவும் இருக்கு. அதில் நடிச்ச டக் ஜோன்ஸ் தான் இதுலையும் நடிச்சிருக்காரு. இவர் டெல் டோராவின் ஆஸ்தான நடிகர். பான்’ஸ் லிபரிந்த் படத்தில் வரும் Faun மற்றும் பேல்மேனும் இவர் தான்.
யுனிவர்சல் பிக்சர்ட்ட அவங்களோட கிரியேச்சர் ஆஃப் பிளாக் லகூன ரீமேக் பன்ன டெல் டோரா கேட்டிருக்கிறார். (அதுவும் இந்த மீன் மனிதனைப் போன்ற ஒரு ஜந்து தான்) இவரோட ஸ்கிரிப்டு அவங்களுக்கு பிடிக்காததால் நிராகரிச்சிட்டாங்க. அதனால space between us என்ற குறும்படத்தோட கதைய வச்சி இந்த படத்தை டெல் டோரா எடுத்துருக்காரு. இதனால இழப்பு யுனிவர்சல் பிக்சர்க்குதான். இரண்டு கோல்டன் குலோப் விருது வாங்கிருக்கு சிறந்த இயக்கம் மற்றும் இசைக்கு. ஆஸ்கர்லையும் விருது நிச்சயம்.

இந்த படம் கியர்மோ டெல் டோராவின் சிறந்த படம் கிடையாது. அவரோட பெஸ்டுனா அது Pan's.Labyrinth தான். அது ஒரு காவியம். மறுபடியும் அந்த படத்தைதான் பார்க்கத்தோனுது.




Tuesday, August 22, 2017

INFINITY WAR


கார்டியன் ஆஃப் த கேலக்ஸி வால்யூம் 2 படத்தோட முடிவும் தோர் ராக்னரோக் படத்தோட முடிவும் சந்திக்கிற இடத்தில்தான் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படம் ஆரம்பிக்குது. இது தான் அவெஞ்சர்ஸ் படங்களின் கடைசி. கடந்த பத்து வருடங்களில் பதினாறு படங்கள் வந்தது இந்த முடிவை நோக்கித்தான்.
ப்ளானெட் ஹல்க்னு ஒரு அனிமேஷன் படம் இருக்கு ( தமிழ் டப்பிங்ளையும் இருக்கு) அந்த படத்தோட கதையையும் தோரோட கதையையும் கலந்து எடுத்ததுதான் இப்ப வரப்போர தோர் ராக்னரோக்.
ஒகே அது என்ன இன்ஃபினிடி வார்?
இந்த பிரபஞ்சத்தில் இன்ஃபினிடி ஸ்டோன்ஸ் எனப்படும் சக்திவாய்ந்த ஆறு கற்க்கள் இருக்கு.
1. ஸ்பேஸ் ஸ்டோன் - தோர், கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் படங்களில் வரும் டெசரக்ட் தான் இது. பல உலகங்களை இனைக்கும் வாசலா இது பயன்படும். இப்போதைக்கு இது அஸ்கார்டில் பத்திரமா இருக்கு.
2. மைண்ட் ஸ்டோன் – யார் மனதை வேண்டுமானாலும் மாற்றக்கூடியது. லோகியோட மந்திரக்கோளில் இருக்கும். இப்ப விஷனோட நெற்றியில் இருக்கு.
3. ரியாலிடி ஸ்டோன் – தோர் டார்க்வேல்டு படத்தில் வரும் ஈதர் எனப்படும் ஒரு திரவ வடிவ வஸ்து தான் இது. கலெக்டரோட மியூசியத்தில் இப்ப இருக்கு.
4. பவர் ஸ்டோன் – பெயருக்கு ஏத்த மாதிரி அதீத சக்தியை கொடுக்கக்கூடியது. கார்டியன் அஃப் த கேலக்ஸி முதல் பாகத்தில் வரும். இப்ப ஸாண்டர் கிரகத்தில் நோவா கார்ப்பின் பாதுகாப்பில் இருக்கு.
5. டைம் ஸ்டோன் – இத வச்சிருந்தா காலத்துக்குல்லையே புகுந்து விளையாடலாம். டாக்டர் ஸ்ட்ரேஞ்சின் டாலரான ஐ அஃப் அகமோட்டோவிற்குள் இருப்பது இது தான். இப்ப நேபாளத்தில் உள்ள காமர் தாஜ்ல இருக்கு.
6. சோல் ஸ்டோன் – இது எங்க இருக்குனே தெரியல. இனிமே வரப்போர தோர் ராக்னரோக், பிளாக் பந்தர், அவெஞ்சர் இன்ஃபினிடி வார் பாகம் 1, ஆண்ட்மேன் அன் த வாசப், கேப்டன் மார்வெல் படங்களில் ஏதேனும் ஒன்றில் வரும்.
இந்த ஆறு கற்களுமே தனித்தனியே சக்தி வய்ந்தது. இந்த ஆறு கல்லுமே ஒரே ஆளுகிட்ட இருந்து அவனுமே ஒரு எமதர்மனுக்கு நிகரானவனா இருந்தா என்ன ஆகும்? அது தான் இன்ஃபினிடி வார்.
தனோஸ் என்பவன் தான் மார்வெல் உலகத்தின் சக்திவாய்ந்த வில்லன். இவனை கார்டியன் ஆஃப் த கேலக்ஸி முதல் பாகத்தில் பார்க்கலாம். இவனிடம் இன்ஃபினிடி கன்லெட்னு ஒரு கையுறை இருக்கு. அதுல ஆறு கல்லையும் பதித்து அதன் மூலம் அவெஞ்சர்ஸோட மோதுவான். தனோஸிடம் பிளாக் ஆர்டர்னு நான்கு நபர்கள் உண்டு. அவர்களைக்கொண்டு இந்த கற்களையெல்லாம் கைப்பற்றுவது தான் இன்ஃபினிடி வார் முதல் பாகத்தில் நடக்கப்போகிறது. அதில் சிலர் இறக்கலாம். ஏன்னா மைண்ட் ஸ்டோன் வேனும்னா விஷன கொன்னா தான் எடுக்க முடியும். இதுக்கு அப்புறம் நடக்கின்ற போர் தான் இரண்டாம் பாகமா இருக்கலாம் என்பது என்னோட கனிப்பு.
ஸ்பைடர் மேன் ஹோம் கமிங் படத்தில் ஒரு புது சூட்ட அயர்ன் மேன் காட்டுவாரே அந்த சூட்ட போட்டுகிட்டுதான் இந்த படத்தில் ஸ்பைடர் மேன் வருவார். சிவில் வாருக்கு அப்புறம் தலைமறைவான கேப்டன் அமெரிக்கா ஒரு புது தோற்றத்தில் வருகிறார். இது எல்லாம் உனக்கு எப்புடி தெரியும்னு கேக்குரிங்களா? யுடியூபில் ட்ரைலர் லீக் ஆகிருக்கு போய் பாருங்க.
இந்த இன்ஃபினிடி வார் இரண்டாம் பாகத்தோட மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 22 படங்கள் அடங்கிய Phase 3 முடிவுக்கு வருது. இதுக்கு அப்புறம் Phase 4னு எடுக்கலாம். ஏன்னா டாக்டர் ஸ்ட்ரேஞ், பிளாக் பாந்தர் படங்களின் பாகங்கள் பாக்கி இருக்கு. இவங்களை போலவே யுனிவர்சல் பிக்ஸர்சும் மான்ஸ்டர் யுனிவர்ஸ் (கிங்காங்,காட்ஸில்லா, டைனோசர்ஸ்), டார்க் யுனிவர்ஸ்னு ( மம்மி, இன்விசிபில் மேன், ஃபிராங்கன்ஸ்டைன்) வரிசையா படங்களை ரிலீஸ் பன்ன போறாங்க. இதுக்கு போட்டியா டிசியும் ஜஸ்டிஸ் லீக் மூலமா போர் தொடுக்க போறாங்க தயாரா இருங்க

Friday, July 21, 2017

Dial M for Murder


க்ரைம் த்ரில்லர் படங்களில் பொதுவா இரண்டு வகைதான் இருக்கு. ஒன்னு கொலைகாரன முன்னாடியே காட்டிடுவாங்க. அவன் எப்படி மாட்டிக்கிறான் என்பதுதான் படமே. இரண்டாவது வகை கொலைகாரன் யார்னு கண்டுபிடிக்குறது. எனக்கு பிடிச்சது இரண்டாவது வகை.

டோனி ஒரு டென்னிஸ் பிளேயர். அவரோட மனைவி மார்கோ. பெரிய கோடிஸ்வரி. அவங்க சொத்தையெல்லாம் கனவர் பேர்ல எழுதி வச்சிடுராங்க. டோனி பொறுப்பில்லாம சுத்திகிட்டே இருப்பதனால மார்கோ தனது பழைய கல்லூரி நண்பனான மார்க் ஹாலிடே என்பவர காதலிக்கிறாங்க. அவர் ஒரு மர்மக்கதை எழுத்தாளர். இந்த கள்ளக்காதலை தெரிஞ்சிகிட்ட டோனி மார்கோவ கொல்ல நினைக்கிறார். ஒரு லோக்கல் ஆசாமிய கூப்பிட்டு திட்டம் போடுகிறார். அதன்படி டோனியும் காதலன் மார்க் ஹாலிடேவும் ஒரு பார்ட்டிக்கு போய்டுவாங்க. கொலைகாரண்ட்ட வீட்டு சாவிய தருகிறார். அவன் வீட்டுக்குள் வந்து ஒழிஞ்சிக்கனும். நைட் பதினோரு மணிக்கு ஃபோன் வரும் அதை எடுக்கவரும் மார்கோவ கொன்னுட்டு அந்த ஃபோனை கொலைகாரன் எடுக்கனும் இதுதான் திட்டம்.

அந்த நாளும் வருது.
டோனியும் மார்க்கும் பார்ட்டிக்கு போறாங்க.
கொலைகாரன் வீட்டுக்குள் ஒழிஞ்சிக்கிறான்.
சரியா பதினோரு மணி.
ஃபோன் அடிக்குது.
மார்கோ ஃபோன எடுக்க வருகிறாள்.
ஆனா அங்கு நடப்பது…..

அது என்னனு படத்தில் பாருங்க. 1954ல் எடுத்த படம் 63 வருடம் கழித்தும் நம்மை சஸ்பென்ஸின் உச்சிக்கே கொண்டுபோக முடியுமா? அது ஒருவரால் முடியும். அவர் பெயர் ஆல்ஃபிரட் ஹிட்ச்சாக்.
இந்த படத்தை 1998ல எ பெர்ஃபெக்ட் மர்டர்னு மைக்கேல் டக்ளஸ் நடிச்சி ரீமேக் பன்னிருக்காங்க. ஹிந்திலையும் கொத்துகறி போட்டுருக்காங்க. நாம மட்டும் என்ன இளிச்ச வாயலுவா? நம்ம பங்குக்கு சத்தியராஜ் நடிப்புல சாவி-னு எடுத்துருக்கோம்.


ஹிட்ச்சாக்கோட படங்களில் தி பேர்ட்ஸ், நார்த் பை நார்த் வெஸ்ட், ரியர் விண்டோ பார்த்துருக்கேன் ஆன இந்த படம் வேற லெவல். படத்தில் ஹிட்ச்சாக்கும் ஒரே ஒரு காட்சியில் வருகிறார். நல்ல தமில் டப்பிங்லையே இருக்கு, பாருங்க.