Saturday, October 5, 2013

District 9

ஏலியன்னா யாருங்க.  விசித்திரமான விலங்குகளோ கொடூரமான இயந்திரங்களோ அல்லது இவை இரண்டும் கலந்து, மனிதனை கொல்ல கொலைவெறியுடன் அலையும் ஒரு படுபயங்கர ஜந்து (சிலருக்கு அவங்க மணைவியோ காதலியோ ஞாபகத்திற்கு வரலாம்). இப்படித்தான் காலங்காலமாக ஏலியன் படங்கள் சித்தரித்தன. இதிலிருந்து மாறுபட்டு ஏலியன்களை பலவீனமாக பூமிக்கு வந்த அகதிகளாக காட்டிய ஒரு வித்தியாசமான திரைப்படம்தான் District 9.
ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை சன்டிவியில் 'சுறா'படம் பார்த்துக்கொண்டிருக்கும் ஏகாந்தமான சூழலில் உங்கள் ஊருக்கு மேல் ஒரு ஏலியன் விண்கலம் வந்து நின்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான் தென்னாப்ரிக்காவின் ஜோகனஸ் பர்க் நகரின் மேல் ஒரு ஏலியன் வின்கலம் வந்து பழுதடைந்து அப்படியே நின்றுவிட்டது. இது ஏதோ மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு வந்த மருமகன் போல் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல் அங்கேயே தங்கி விட்டது. அதிலிருந்த வினோதமான ஏலியன்கள் இறங்கிவந்து ஜோகனஸ்பர்கிலேயே தங்கி பல்கி பெருகிவிட்டது. இந்த ஏலியன்களுக்கும் மனிதர்களுக்குமிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டதால் அரசாங்கமே ஒரு பெரிய மதிர்சுவற்றிற்குள் பல குடிசைகளை கட்டி அதில் ஏலியன்களை தங்க வைத்திருந்தது. அந்த இடத்தின் பெயர் தான் டிஸ்ட்ரிக்ட் 9.
தொன்னாப்ரிக்க அரசு MNU (miltinational united) என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் ஏலியன்களை பராமரிக்கிறது. இந்த mnu-ன் பார்ட்டைம் வேலை ஏலியன் தொழில்நுட்பத்தில் ஆயுதங்கள் செய்வது, ஏலியன்களின் மேல் பல்வேறு பரிசோதனைகள் செய்வது. இந்த MNU-ல் வேலை செய்பவர்தான் கதாநாயகன் வைகஸ். இந்த நகரத்திலிருந்து ஏலியன்களை வெகு தொலைவிற்கு இடமாற்றுவது தொடர்பாக டிஸ்ட்ரிக்ட் 9ற்குள் செல்கிறார். ஒரு ஏலியனின் வீட்டிற்குள் சேதனை செய்கையில் அங்கே மரைத்துவைக்கப்பட்ட ஒரு சிறிய குப்பி இவருக்கு கிடைக்கிறது.
அதை தவறுதலாக திறந்ததால் அதிலிருந்த திரவம் வைகஸ் முகத்தில் படுகிறது.  அந்த குப்பியை mnu அலுவகத்திற்கு எடுத்துச்செல்கிறார். இதிலிருந்துதான் பிரச்சனையே அந்த திரவத்தால் வைகஸும் மெல்ல ஏலியனாக மாறத்தொடங்குகிறார். இங்க ஒரு கிளைகதையை சொல்கிறேன் (ஓடாதீங்க) இந்த ஏலியன் குரூப்பில் ஒரு சைன்டிஸ்ட் ஏலியனும் அவருக்கு ஒரு மகனும் நண்பனும் உண்டு. மேலே இருக்கும் விண்கலத்திற்குச்செல்ல இந்த மூவரணி ஒரு சிறிய கலத்தை கட்டுகின்றனர். இதனை இயக்க தேவையான எரிபொருளை 20 ஆண்டுகால உழைப்பில் உருவாக்கி ஒரு குப்பில் அடைக்கின்றனர்.  இப்ப அந்த குப்பி இருப்பது mnu அலுவகத்தில்.
இந்நிலையில் ஏலியனாக மாறிக்கொண்டிருக்கும் வைகஸை mnu துரத்துகிறது வேறுவழியில்லாமல் வைகஸ் ஏலியனிடமே அடைகலமாகிறார்.  அந்த குப்பியை எடுத்து ஏலியன்கள் விண்கலத்திற்கு சென்றார்களா? வைகஸ் மீண்டும் மனிதனாக மாறினாரா என்பதை படத்தில் பாருங்கள். இந்த படத்தை பார்க்கையில் ஏதோ ஒரு டாக்குமெண்டிரி விடியோவை பார்ப்பதைபோலவே உணர்விர்கள் அப்படித்தான் எடுத்திருப்பார்கள். அதனால்தான் இதன் உண்மை தன்மையும் அதிகரிக்கிறது. ஆனா இதை ஏதோ ஆர்ட்ஃபிளிம்னு மட்டும் நினனச்சிடாதீங்க பட்டாசை பற்றவைத்தால் எப்படி இருக்குமோ அப்படி படபடவென இருக்கும் இதன் திரைக்கதை. இந்த டிஸ்ட்ரிக்ட் 9க்குள் இருக்கும் ஒரு லோக்கல் ரௌடி கும்பலுக்கும் ஹீரோவுக்கும் இடையே நடக்கும் ஆக்ஸன் காட்சிகள் படு அட்டகாசமா எடுக்கப்பட்டிருக்கும்.அப்படி எடுத்த இயக்குனரான நெய்ல் ப்லோகாம்பிற்கு இதுதான் முதல் முழுநீல திரைப்படம். இதற்கு முன்னர் 2005ல் இவர் எடுத்த Alive in joburg என்ற குறும்படத்தின் விரிவாக்கம்தான் இந்த திரைப்படம். இதை தயாரித்தவர் இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன். இவரது வீட்டா நிறுவனம்தான் இந்த படத்தின் தத்ரூபமான ஸீஜிக்கு காரணம்.( இந்த வீட்டாதான் ஷங்கரின் ஐ படத்துக்கும் ஸிஜி). 37மில்லியன் டாலரில் எடுத்து உலகம்முழுவதும் 210 மில்லியன் வசூலித்து ஹாலிவுட்டையே ஆட்டம் காணவைத்த ஒரு தென்னாப்ரிக்க திரைப்படம் இது. இந்தப்படத்தை பார்த்ததும் உங்களுக்கு நிச்சயம் தோன்றும் ஒன்று, மனிதர்களை விட ஏலியன்கள் தேவலாம் என்று.

Wednesday, October 2, 2013

Indiana Jones-ஓர் அறிமுகம்

ஜூன் 12, 1981ல் அந்த திரைப்படம் வெளியானது. அவர் ஒரு சாதாரண ஹீரோதான் ஆனால் எந்த ஒரு சூப்பர் ஹீரோவுக்கும் சற்றும் குறையாத சிறப்பை அவர் அடையப்போவதை அப்போது யாரும் உணரவில்லை அதன் இயக்குனரான ஸ்பீல்பெர்கும் கூட. அந்த திரைப்படம் Raiders of the Last Ark. இத்தனைக்கும் இந்த கதாபாத்திரத்தை உருவாக்கியவர் ஸ்டார் வார்ஸ் படங்களை இயக்கி புகழ்பெற்றவரான ஜார்ஜ் லூகாஸ்.ஆரம்பத்தில் இக்கதாபாத்திரதிற்கு லூகாஸ் வைத்த பெயர் இண்டியானா ஸ்மித், இது ஸ்பீல்பெர்கிற்கு பிடிக்காததால் பின்னர் மாற்றப்பட்டதே இந்த இண்டியானா ஜோன்ஸ்.
சரி யாருயா இந்தாளுனா ஒரு ஆர்க்கியாலஜி புரபசர். பல்வேறு இனங்களின் நாகரிக வளர்ச்சி பற்றி ஆழ்ந்த ஞானம் உள்ளவர்.இரண்டாம் உலகப்போர் சமயத்தில் CIA-ன் Office of Strategic Services என்ற பிரிவில் பார்ட்டைமாக உளவாளியாகவும் இருப்பவர். கவ்பாய் தொப்பியும் லெதர் ஜாக்கெட்டுடனும் சாட்டையை சுழற்றியபடி இவர் செய்யும் சாகசங்களே இவரின் பிரதான அடையாளம். இவரின் எல்லா கதைகளுமே எனக்கு மிகப்பிடித்தமான ஜானரான புதையல் தேடும் கதைதான். பில்டப் போதும் இனி படத்தைப்பற்றி .

கிருஸ்துவத்தில் உள்ள பத்து கட்டளைகளுள் சொல்லப்பட்ட சக்திவாய்ந்த ஒரு ஒளியை(Ark) பற்றிய கதையே டாக்டர் ஜோன்ஸின் முதல் படமான ரைடர்ஸ் ஆப் த லாஸ்ட் ஆர்க். இந்த ஆர்க்கை தங்களுக்கு சாதகமாக்கி இரண்டாம் உலகயுத்ததில் வெல்ல நினைக்கும் நாஜிக்களை எப்படி ஜோன்ஸ் முறியடிக்கிறார் என்பதை படத்தில் பாருங்கள்.
இவரது பெரும்பாலான கதைகள் 1930களின் மத்தியில் ஹிட்லர் பின்னனியில் நடப்பவை. இதிலிருந்து மாறுபட்டு இந்தியாவை பின்புலமாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் Indiana jones and the Temple of Doom (1984). விலைமதிப்பற்ற ஒரு மரகதக்கல்லை தேடி இந்தியாவிற்கு வரும் ஜோன்ஸ், ஒரு பயங்கர சாமியாரால் நரபலியிடப்படும் சிறுவர்களை காப்பதே இப்படத்தின் கதை. இந்த படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் "தளபதி" புகழ் அம்ப்ரிஷ் பூரி.
மீண்டும் ஹிட்லர் பின்னனியில் இந்த சீரிசில் மூன்றாவதாக வந்த திரைப்படம் Indiana jones and the Last Crusade (1989). ஏசுவின் கடைசி விருந்தில் பயன் படுத்தப்பட்ட Holy Grail எனும் ஒரு ஓயின் கின்னத்தை தேடிச்சென்று தொலைந்துபோன தனது தந்தையை தேடிச்செல்லும் ஜோன்ஸின் பயணம்தான் இந்தப்படம். இதில் இவரின் தந்தையாக நடித்திருப்பவர் சீன் கானரி. ஹிட்லரிடம் ஜோன்ஸ் ஆட்டோகிராஃப் வாங்கும்படியான ஒரு ரசமான காட்சியும் இதில் உண்டு. அது எப்படினு படத்தில் பாருங்கள்.
இதன் பின்னர் இக்கதைகளை மறந்துவிட்டு ஏலியன் மற்றும் ரோபோக்களின் பக்கம் சென்றுவிட்டார் ஸ்பீல்பெர்க். கிட்டத்தட்ட பத்தொன்பது வருடங்கள் கழித்து தன் மகனின் ஆசைக்கினங்க மீண்டும் இண்டியானா ஜோன்ஸ் கதையை புதையலைப்போல தோண்டியெடுத்தார். அதுவே 2008ல் வெளியான Indiana jones and the Kingdom of the Crystal skull. இது 1940ல் ரஷ்யாவின் ஸ்டாலினை பின்னனியாக கொண்ட கதை. ஏலியன் சக்தியை பெற நினைக்கும் ஸ்டாலின் ஆட்களை தடுக்கும் முயற்சியின் நடுவே மாயன் நாகரீகம்,  தொலைந்துபோன தங்கநகரமான எல் டொரடோ ( இதைபற்றி பல கதைகள் வந்துள்ளன), ஏலியன்கள் என பல சுவாரஸ்யங்களை தொட்டுச்செல்கிறது.
இந்த படங்கள் எல்லாமே ஒரேமாதிரியான டெம்பிளேட்டை கொண்டிருந்தாலும் ஒரு நிமிடம்கூட அலுக்காமல் உங்களை படம்பார்க்க வைப்பது இதன் ஜெட்வேக திரைக்கதைதான்.  இண்டியானா ஜோன்ஸ் கதாபாத்திரத்திலேயே நடித்து ஒரு கிளாஸிக் ஐகானாக மாறியவர் நடிகர் ஹாரிசன் ஃபோர்ட். இது போன்ற படங்களை எடுப்பதில் ஸ்பீல்பெர்க் ஒரு ஜித்தர். மொத்தத்தில் இந்த படங்களை பார்ப்பது, காந்தி ஜொயந்தி அன்று சரக்கை தேடியலையும் அட்வெஞ்சரை போன்று ஒரு ஜாலியான அனுபவம் கிடைக்கும்.