ஏலியன்னா யாருங்க. விசித்திரமான விலங்குகளோ கொடூரமான இயந்திரங்களோ அல்லது இவை இரண்டும் கலந்து, மனிதனை கொல்ல கொலைவெறியுடன் அலையும் ஒரு படுபயங்கர ஜந்து (சிலருக்கு அவங்க மணைவியோ காதலியோ ஞாபகத்திற்கு வரலாம்). இப்படித்தான் காலங்காலமாக ஏலியன் படங்கள் சித்தரித்தன. இதிலிருந்து மாறுபட்டு ஏலியன்களை பலவீனமாக பூமிக்கு வந்த அகதிகளாக காட்டிய ஒரு வித்தியாசமான திரைப்படம்தான் District 9.
ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை சன்டிவியில் 'சுறா'படம் பார்த்துக்கொண்டிருக்கும் ஏகாந்தமான சூழலில் உங்கள் ஊருக்கு மேல் ஒரு ஏலியன் விண்கலம் வந்து நின்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான் தென்னாப்ரிக்காவின் ஜோகனஸ் பர்க் நகரின் மேல் ஒரு ஏலியன் வின்கலம் வந்து பழுதடைந்து அப்படியே நின்றுவிட்டது. இது ஏதோ மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு வந்த மருமகன் போல் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல் அங்கேயே தங்கி விட்டது. அதிலிருந்த வினோதமான ஏலியன்கள் இறங்கிவந்து ஜோகனஸ்பர்கிலேயே தங்கி பல்கி பெருகிவிட்டது. இந்த ஏலியன்களுக்கும் மனிதர்களுக்குமிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டதால் அரசாங்கமே ஒரு பெரிய மதிர்சுவற்றிற்குள் பல குடிசைகளை கட்டி அதில் ஏலியன்களை தங்க வைத்திருந்தது. அந்த இடத்தின் பெயர் தான் டிஸ்ட்ரிக்ட் 9.
தொன்னாப்ரிக்க அரசு MNU (miltinational united) என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் ஏலியன்களை பராமரிக்கிறது. இந்த mnu-ன் பார்ட்டைம் வேலை ஏலியன் தொழில்நுட்பத்தில் ஆயுதங்கள் செய்வது, ஏலியன்களின் மேல் பல்வேறு பரிசோதனைகள் செய்வது. இந்த MNU-ல் வேலை செய்பவர்தான் கதாநாயகன் வைகஸ். இந்த நகரத்திலிருந்து ஏலியன்களை வெகு தொலைவிற்கு இடமாற்றுவது தொடர்பாக டிஸ்ட்ரிக்ட் 9ற்குள் செல்கிறார். ஒரு ஏலியனின் வீட்டிற்குள் சேதனை செய்கையில் அங்கே மரைத்துவைக்கப்பட்ட ஒரு சிறிய குப்பி இவருக்கு கிடைக்கிறது.
அதை தவறுதலாக திறந்ததால் அதிலிருந்த திரவம் வைகஸ் முகத்தில் படுகிறது. அந்த குப்பியை mnu அலுவகத்திற்கு எடுத்துச்செல்கிறார். இதிலிருந்துதான் பிரச்சனையே அந்த திரவத்தால் வைகஸும் மெல்ல ஏலியனாக மாறத்தொடங்குகிறார். இங்க ஒரு கிளைகதையை சொல்கிறேன் (ஓடாதீங்க) இந்த ஏலியன் குரூப்பில் ஒரு சைன்டிஸ்ட் ஏலியனும் அவருக்கு ஒரு மகனும் நண்பனும் உண்டு. மேலே இருக்கும் விண்கலத்திற்குச்செல்ல இந்த மூவரணி ஒரு சிறிய கலத்தை கட்டுகின்றனர். இதனை இயக்க தேவையான எரிபொருளை 20 ஆண்டுகால உழைப்பில் உருவாக்கி ஒரு குப்பில் அடைக்கின்றனர். இப்ப அந்த குப்பி இருப்பது mnu அலுவகத்தில்.
இந்நிலையில் ஏலியனாக மாறிக்கொண்டிருக்கும் வைகஸை mnu துரத்துகிறது வேறுவழியில்லாமல் வைகஸ் ஏலியனிடமே அடைகலமாகிறார். அந்த குப்பியை எடுத்து ஏலியன்கள் விண்கலத்திற்கு சென்றார்களா? வைகஸ் மீண்டும் மனிதனாக மாறினாரா என்பதை படத்தில் பாருங்கள். இந்த படத்தை பார்க்கையில் ஏதோ ஒரு டாக்குமெண்டிரி விடியோவை பார்ப்பதைபோலவே உணர்விர்கள் அப்படித்தான் எடுத்திருப்பார்கள். அதனால்தான் இதன் உண்மை தன்மையும் அதிகரிக்கிறது. ஆனா இதை ஏதோ ஆர்ட்ஃபிளிம்னு மட்டும் நினனச்சிடாதீங்க பட்டாசை பற்றவைத்தால் எப்படி இருக்குமோ அப்படி படபடவென இருக்கும் இதன் திரைக்கதை. இந்த டிஸ்ட்ரிக்ட் 9க்குள் இருக்கும் ஒரு லோக்கல் ரௌடி கும்பலுக்கும் ஹீரோவுக்கும் இடையே நடக்கும் ஆக்ஸன் காட்சிகள் படு அட்டகாசமா எடுக்கப்பட்டிருக்கும்.அப்படி எடுத்த இயக்குனரான நெய்ல் ப்லோகாம்பிற்கு இதுதான் முதல் முழுநீல திரைப்படம். இதற்கு முன்னர் 2005ல் இவர் எடுத்த Alive in joburg என்ற குறும்படத்தின் விரிவாக்கம்தான் இந்த திரைப்படம். இதை தயாரித்தவர் இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன். இவரது வீட்டா நிறுவனம்தான் இந்த படத்தின் தத்ரூபமான ஸீஜிக்கு காரணம்.( இந்த வீட்டாதான் ஷங்கரின் ஐ படத்துக்கும் ஸிஜி). 37மில்லியன் டாலரில் எடுத்து உலகம்முழுவதும் 210 மில்லியன் வசூலித்து ஹாலிவுட்டையே ஆட்டம் காணவைத்த ஒரு தென்னாப்ரிக்க திரைப்படம் இது. இந்தப்படத்தை பார்த்ததும் உங்களுக்கு நிச்சயம் தோன்றும் ஒன்று, மனிதர்களை விட ஏலியன்கள் தேவலாம் என்று.
Saturday, October 5, 2013
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment