Showing posts with label world movies. Show all posts
Showing posts with label world movies. Show all posts

Tuesday, March 25, 2014

The Chesar ( south korea) 2008

ஜாங் வூ அப்புடினு தொன் கொரியால ஒரு மாமா இருந்தாரு. என்னடா மாமாங்குறேனு பாக்குறீங்களா என்ன பன்றது அவர் பன்ற தொழில் அப்படி. ரெண்டாம் நம்பர் பிஸ்னஸ் பன்னுகிற நம்பர் ஒன் ஆளு. கொஞ்ச நாளாவே அவரிடம் இருந்த இரு பெண்களை காணவில்லை.  இந்நிலையில் 4885 என்ற நம்பரிலிருந்து ஒருவன் அழைத்து தன் சொல்லுமிடத்திற்கு ஒரு பெண்ணை அனுப்பும்படி கூறுகிறான்.  ஜாங் வூவும் சரினு மி ஜின் என்ற பெண்ணை அனுப்புகிறார்.  பின்னர் இந்த பொண்ணும் திரும்பிவருவதில்லை. என்னடா இது என அவர் தன் ரிஜிஸ்டரை எடுத்துப்பார்க்க அதில் தொலைந்த மூன்று பெண்களும் 4885 என்ற நம்பரிலிருந்தே அழைக்கப்பட்டிருப்பதை காண்கிறார்.

அந்த நம்பரை தேடிச்செல்கையில் வழியில் ஒருவன்  ஜாங் வூவின் காரை இடித்து விடுகிறான். அவனிடம்  சண்டையிடும் ஜாங் வூ அவன் போன் நம்பரை கேட்கிறார். தரமறுக்கும் அவன் மேல் சந்தேகம் கொண்டு 4885க்கு அழைக்கிறார். அவன் செல்போன் ஒலிக்க  வண்டியை விட்டு இறங்கி ஓடுகிறான்.  அவனை விரட்டிப்பிடிக்கையில் இருவரும் போலிசிடம்  மாட்டுகின்றனர். தனது மூன்று பெண்களை அழைத்துச்சென்று வேறு இடத்தில் விற்று விட்டதாக அவன்மேல் குற்றம்சாட்டுகிறார் ஜாங் வூ. விசாரிக்கும் போலிசிடம் தான் மூன்று பெண்களையும் விற்கவில்லை எனவும் கொன்று விட்டதாகவும் மேலும் இதுவரை பன்னிரென்டு பெண்களை கொன்றிருப்பதாகவும் அவன் கூறுகிறான்.

எங்கு தேடியும் அவன் கொன்றதாக கூறிய பெண்களின் சடலம் கிடைக்காததால்  போலிஸ் அவனை விட்டுவிடுகிறது. இதனை நம்பாமல் அவனை பின் தொடர்கிறான் ஜாங் வூ. இதன்பின்னர் என்ன ஆனது என்பதை சேஸர் என்ற இந்த கொரிய திரைப்படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதுவரை வந்த எல்லா சைக்கோ த்ரில்லர் திரைப்படங்களிலும் கொலைகாரன் கட்டக்கடைசியில் தான் தன் முகத்தை காட்டுவான்.  அதை வைத்துதான் பார்வையாளர்களை பரபரப்பாக பல்லைகடிக்க வைப்பார்கள். ஆனால் இந்த படத்தில் அதற்கு நேர் எதிராக ஆரம்பத்திலேயே கொலைகாரன் போலிசிடமே மாட்டிக் கொள்வான் இருந்தாலும் படபடப்பாய் நம்மை பார்க்க வைப்பது இதன் நேர்த்தியான திரைக்கதைதான். இன்றைய காலகட்டத்தில் ஹாலிவுட்டை விட தரத்தில் சிறந்த படங்களை கொடுப்பது கொரியாதான்.  இருந்தாலும் ஹாலிவுட் அளவிற்கு யாராலும் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாய் படம் எடுக்க முடியாவிட்டாலும் நல்ல திரைப்படத்திற்கு பணம் ஒரு பொருட்டல்ல என்பதற்கு இந்த படமும் ஒரு உதாரணம்.


                                                                                                 

Wednesday, March 12, 2014

வாரியர்ஸ் ஆஃப் த ரெய்ன்போ : சீட்டிக் பேல்

இந்த உலகில் உள்ள விலங்குகளுள் மிகவும் பயங்கரமானதும் தலையாயதுமான ஒரு மிருகம் மனிதன்.  அவன் அழித்தொழிக்காத உயிரினமே இல்லை தன் இனம் உட்பட. அப்படிப்பட்ட நாகரீக மனிதன் ஒரு பழங்குடி இனத்தையே அழித்த கதைதான் இந்த வாரியர்ஸ் ஆஃப் த ரெய்ன்போ.

இது தைவானில் 1930ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த படத்தைப்போல் படம் எடுக்கப்பட்ட கதையும் சுவாரஸ்யமானது முதலில் அதைப்பார்ப்போம்.

இந்த கதை ஆரம்பமானது 1996ல். வெய் டி ஷாங் அப்புடிங்குற ஒரு தைவான் இயக்குனர் Wushe Incident எனப்படும்  சம்பவத்தை அடிப்படையாய் வைத்து எழுதப்பட்ட ஒரு காமிக் புக்கை படித்தார். அது பிடித்துப்போகவே அதை படமாய் எடுக்க முடிவு செய்து இரண்டு வருடம் உட்கார்ந்து நீண்ட திரைக்கதை ஒன்றை எழுதினார்.  இந்த திரைக்கதையை எடுத்துக்கொண்டு ஒரு தயாரிப்பாளரை அணுகி  படத்தைப்பற்றிய ஒரு டிரைலர் வீடியோ எடுக்க இரண்டரை மில்லியன் அமெரிக்க டாலர் கேட்டார். முழு படத்தின் பட்ஜெட் ஏழு மில்லியன்.  அரண்டுபோன தயாரிப்பாளர் புத்தர் கோவிலில் மந்திரிச்ச டாலரை வாங்கி கொடுத்து இயக்குனரை அணுப்பிவிட்டார். வேறு வழியில்லாமல் தனது மனைவியின் நகை நட்டு எல்லாவற்றையும் விற்று அந்த டிரைலரை எடுத்து பல நிறுவனங்களிடம் காட்டினார். பெரிய பட்ஜெட் காரணமாக எந்த நிறுவனமும்  கண்டுகொள்ளாமல் நான் எழுதும் பதிவுகளைப் போன்றே சீந்துவாரின்றி கிடந்தது அந்த டிரைலர்.

நண்பர் ஒருவர் நீ முதலில் சின்ன ஆனிய புடுங்கி காட்டு அப்புறம் பெரிய ஆனி புடுங்கலாம் என ஐடியா கொடுக்க ஷாங்கும் 2008ல் Cap no.7 என்ற சிறிய ஆனியை சாரி  லோ பட்ஜெட் காமெடி படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் செம ஹிட்டடிக்க வாரியர்ஸ் ஆஃப் த ரெய்ன்போவை தயாரிக்க சிலர் முன் வந்தனர். இம்முறை ஷாங் கேட்ட பட்ஜெட் இருபத்தி ஐந்து மில்லியன். இது நம்ம எந்திரனை விட கொஞ்சம் கம்மிதான்.  படம் முழுவதும் காடு, மலை, மழைதான்.  இரு பாகமான இந்த படத்தை மொத்தம் பத்தே மாதங்களில் எடுத்துவிட்டார். நம்ம ஊரில் வருடக்கணக்கில் படம் எடுக்கும் இயக்குனர்களை கட்டிவைத்து இந்த படத்தை போட்டுக்காட்ட வேண்டும். தைவானில் இது வரை அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுதான். அதேபோல் வசூலையும் அள்ளியது கூடவே பல உலக விருதுகளையும். 2011ல் வெளிவந்த ஒரு சிறந்த காவியமான வாரியர்ஸ் ஆஃப் த ரெய்ன்போ படத்தின் கதை அடுத்த பதிவில்...

                                                                                                                           

Saturday, October 5, 2013

District 9

ஏலியன்னா யாருங்க.  விசித்திரமான விலங்குகளோ கொடூரமான இயந்திரங்களோ அல்லது இவை இரண்டும் கலந்து, மனிதனை கொல்ல கொலைவெறியுடன் அலையும் ஒரு படுபயங்கர ஜந்து (சிலருக்கு அவங்க மணைவியோ காதலியோ ஞாபகத்திற்கு வரலாம்). இப்படித்தான் காலங்காலமாக ஏலியன் படங்கள் சித்தரித்தன. இதிலிருந்து மாறுபட்டு ஏலியன்களை பலவீனமாக பூமிக்கு வந்த அகதிகளாக காட்டிய ஒரு வித்தியாசமான திரைப்படம்தான் District 9.
ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை சன்டிவியில் 'சுறா'படம் பார்த்துக்கொண்டிருக்கும் ஏகாந்தமான சூழலில் உங்கள் ஊருக்கு மேல் ஒரு ஏலியன் விண்கலம் வந்து நின்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான் தென்னாப்ரிக்காவின் ஜோகனஸ் பர்க் நகரின் மேல் ஒரு ஏலியன் வின்கலம் வந்து பழுதடைந்து அப்படியே நின்றுவிட்டது. இது ஏதோ மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு வந்த மருமகன் போல் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல் அங்கேயே தங்கி விட்டது. அதிலிருந்த வினோதமான ஏலியன்கள் இறங்கிவந்து ஜோகனஸ்பர்கிலேயே தங்கி பல்கி பெருகிவிட்டது. இந்த ஏலியன்களுக்கும் மனிதர்களுக்குமிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டதால் அரசாங்கமே ஒரு பெரிய மதிர்சுவற்றிற்குள் பல குடிசைகளை கட்டி அதில் ஏலியன்களை தங்க வைத்திருந்தது. அந்த இடத்தின் பெயர் தான் டிஸ்ட்ரிக்ட் 9.
தொன்னாப்ரிக்க அரசு MNU (miltinational united) என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் ஏலியன்களை பராமரிக்கிறது. இந்த mnu-ன் பார்ட்டைம் வேலை ஏலியன் தொழில்நுட்பத்தில் ஆயுதங்கள் செய்வது, ஏலியன்களின் மேல் பல்வேறு பரிசோதனைகள் செய்வது. இந்த MNU-ல் வேலை செய்பவர்தான் கதாநாயகன் வைகஸ். இந்த நகரத்திலிருந்து ஏலியன்களை வெகு தொலைவிற்கு இடமாற்றுவது தொடர்பாக டிஸ்ட்ரிக்ட் 9ற்குள் செல்கிறார். ஒரு ஏலியனின் வீட்டிற்குள் சேதனை செய்கையில் அங்கே மரைத்துவைக்கப்பட்ட ஒரு சிறிய குப்பி இவருக்கு கிடைக்கிறது.
அதை தவறுதலாக திறந்ததால் அதிலிருந்த திரவம் வைகஸ் முகத்தில் படுகிறது.  அந்த குப்பியை mnu அலுவகத்திற்கு எடுத்துச்செல்கிறார். இதிலிருந்துதான் பிரச்சனையே அந்த திரவத்தால் வைகஸும் மெல்ல ஏலியனாக மாறத்தொடங்குகிறார். இங்க ஒரு கிளைகதையை சொல்கிறேன் (ஓடாதீங்க) இந்த ஏலியன் குரூப்பில் ஒரு சைன்டிஸ்ட் ஏலியனும் அவருக்கு ஒரு மகனும் நண்பனும் உண்டு. மேலே இருக்கும் விண்கலத்திற்குச்செல்ல இந்த மூவரணி ஒரு சிறிய கலத்தை கட்டுகின்றனர். இதனை இயக்க தேவையான எரிபொருளை 20 ஆண்டுகால உழைப்பில் உருவாக்கி ஒரு குப்பில் அடைக்கின்றனர்.  இப்ப அந்த குப்பி இருப்பது mnu அலுவகத்தில்.
இந்நிலையில் ஏலியனாக மாறிக்கொண்டிருக்கும் வைகஸை mnu துரத்துகிறது வேறுவழியில்லாமல் வைகஸ் ஏலியனிடமே அடைகலமாகிறார்.  அந்த குப்பியை எடுத்து ஏலியன்கள் விண்கலத்திற்கு சென்றார்களா? வைகஸ் மீண்டும் மனிதனாக மாறினாரா என்பதை படத்தில் பாருங்கள். இந்த படத்தை பார்க்கையில் ஏதோ ஒரு டாக்குமெண்டிரி விடியோவை பார்ப்பதைபோலவே உணர்விர்கள் அப்படித்தான் எடுத்திருப்பார்கள். அதனால்தான் இதன் உண்மை தன்மையும் அதிகரிக்கிறது. ஆனா இதை ஏதோ ஆர்ட்ஃபிளிம்னு மட்டும் நினனச்சிடாதீங்க பட்டாசை பற்றவைத்தால் எப்படி இருக்குமோ அப்படி படபடவென இருக்கும் இதன் திரைக்கதை. இந்த டிஸ்ட்ரிக்ட் 9க்குள் இருக்கும் ஒரு லோக்கல் ரௌடி கும்பலுக்கும் ஹீரோவுக்கும் இடையே நடக்கும் ஆக்ஸன் காட்சிகள் படு அட்டகாசமா எடுக்கப்பட்டிருக்கும்.அப்படி எடுத்த இயக்குனரான நெய்ல் ப்லோகாம்பிற்கு இதுதான் முதல் முழுநீல திரைப்படம். இதற்கு முன்னர் 2005ல் இவர் எடுத்த Alive in joburg என்ற குறும்படத்தின் விரிவாக்கம்தான் இந்த திரைப்படம். இதை தயாரித்தவர் இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன். இவரது வீட்டா நிறுவனம்தான் இந்த படத்தின் தத்ரூபமான ஸீஜிக்கு காரணம்.( இந்த வீட்டாதான் ஷங்கரின் ஐ படத்துக்கும் ஸிஜி). 37மில்லியன் டாலரில் எடுத்து உலகம்முழுவதும் 210 மில்லியன் வசூலித்து ஹாலிவுட்டையே ஆட்டம் காணவைத்த ஒரு தென்னாப்ரிக்க திரைப்படம் இது. இந்தப்படத்தை பார்த்ததும் உங்களுக்கு நிச்சயம் தோன்றும் ஒன்று, மனிதர்களை விட ஏலியன்கள் தேவலாம் என்று.