இதில் உள்ள சில விசயங்களைப்பற்றி ஏற்கனவே சுஜாதாவும் மதனும் எழுதிவிட்டாலும் ராஜ்சிவா அளவுக்கு யாரும் டீடெய்லா எழுதவில்லை அதனாலேயே இந்த புத்தகம் எனக்கு பிடித்தும்விட்டது.
இந்த புத்தகத்திலிருந்து சில துளிகள்..
* இதுவரை உலகத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பயிர் வட்டங்கள் உருவாகி இருக்கின்றன. அவற்றை உருவாக்குவது யார்? எப்படி? எதற்கு?
* பறக்கும் தட்டை பார்த்தவர்களின் சாட்சியம் மற்றும் புகைப்படம், வீடியோ ஆதாரங்கள்.
* பயிர்வட்டங்களின் மூலம் ஏலியன்கள் மனிதர்களுக்கு அனுப்பிய செய்தி என்ன?
* 2 மற்றும் 3 பரிமாணங்கள் தெரியும். நான்காவதாக காலத்தையும் சேர்த்து 4D தொழில்நுட்பத்தில் செய்யப்படும் டைம் ட்ராவல் சாத்தியமா?
* 11 பரிமாணங்கள் இருப்பதாக சொல்லப்படும் ஒரு தியரி.
* ஏலியன்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அதிபர்.
* ரோஸ்வெல் நகரில் விபத்துக்குள்ளான பறங்கும் தட்டையும் அதில் இருந்த ஏலியனையும் மறைக்கும் அமெரிக்கா.
* பிரமிடுக்கும் ஏலியனுக்கும் உள்ள தொடர்பு என்ன?
* ஏலியன்கள் இருக்கா? இல்லையா? அவை பூமிக்கு வந்தது உண்மையா?
* ஏலியன்கள் என நாம் நம்புவது டைம் மெஷினில் வருகைபுரியும் நமது வருங்கல சந்ததியினரா?
* நம்மை படைத்தது ஏலியன்களா?
இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடைகள் இந்த புத்தகத்தில் உள்ளது. உயிர்மை இணைய இதழில் தொடர் கட்டுரையாக வந்ததை தொகுத்து உயிர்மை பதிப்பகத்தார் ரூபாய் 175க்கு வெளியிட்டுள்ளனர். சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாத புத்தகம் இது.