Saturday, February 15, 2014

கரீபியன் கடற்கொள்ளையர்

உங்களுக்கு ஏதாவது திருடிய அனுபவம் உண்டா? நிச்சயம் நம் எல்லோருக்கும் இருக்கும். அட்லிஸ்ட் ஒரு பேனாவாவது திருடியிருப்போம். திருட்டுக்கும் கொள்ளைக்கும் என்ன வித்தியாசம்?
கேங்கா சேர்ந்து திருடுனா அது கொள்ளை. தனியா ஒருத்தன் கொள்ளையடிச்சா அது திருட்டு (இப்ப  எதுக்கு இந்த 'திருடபுராணம்' ).
ரொம்ப நாளாவே பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் படங்களைப்பற்றிய ஒரு தொடரை எழுதவேண்டும் என நினைத்து, அது நினைவுடனே நின்றுவிட்டது. இப்பையாவது எழுதலாமே என்று இந்த பதிவை ஆரம்பித்துவிட்டேன்.
இந்த படங்களைபற்றி தெரியாதவங்க யாருமே இருக்கமுடியாது (ய்யோவ் எங்க தாத்தாவுக்கு அதெல்லாம் தெரியாதுய்யா).இருந்தாலும்
இந்த பதிவ யாராவது ஒருத்தர் படிச்சி பயனடஞ்சாகூட எனக்கு போதும்.

1700களின் ஆரம்ப வருடங்களில் கரீபியன் கடற்பகுதிகளில்  குடிசைத்தொழிலைப்போல பலர் கடற்கொள்ளையில் ( நீச்சல் தெரியாவிட்டாலும்) இறங்கிவிட்டனர்.
அதில் சற்றே செல்வாக்கானவர் கேப்டன் பெஞ்சமின் ஹார்னிகோல்ட். அவர் கொள்ளைக்கூட்டத்தின் ஒரு சாதாரண ஆசாமிதான் எட்வர்ட் டீச்.
இவர் முன்னர் மாலுமியாக இருந்து பின்னர் கொள்ளையனாக மாறிவர். 
ஐரோப்பா, அமெரிக்க வணிக கப்பல்களை தாக்கி கொள்ளையடிப்பதே இவர்களின் முழுநேர வேலை.
பகுதி நேரமாக தங்கள் கப்பற்படையை கொள்ளையில் ஈடுபடுத்திய நாடுகளும் உண்டு.
இந்நிலையில்தான் கேப்டன் பெஞ்சமின் ஹார்னிகோல்டிற்கு பிறகு அந்த கப்பலுக்கு கேப்டன் ஆனார் (கேப்டன் விஜயகாந்த்) எட்வர்ட் டீச்.
இந்த சாதாரண வரிதான் பின்னாட்களில் வரலாறாக மாறியது. எதற்கும் துணிந்தவரான எட்வர்ட் டீச் , லா கான்கர்ட் என்ற மிகப்பெரிய வணிகக்கப்பலை கைப்பற்றினார்.  அதுவே பின்னாட்களில் குயின் அன்னா ரிவன்ஞ்ச் என்ற பெயரில் நாற்பது பீரங்கிகளும் நூறுக்கும் மேலான மாலுமிகளையும் கொண்ட பிரம்மாண்டமான கொள்ளை கப்பலாக மாறி அட்லாண்டிக் கடலையே அலரவிட்டது.

குயின் அன்னா ரிவஞ்சிற்கு கேப்டன் ஆனதும் எட்வர்ட் செய்த முதல் காரியம் தனது தோற்றத்தையும் பெயரையும் மாற்றிக்கொண்டதுதான்.
நீண்ட தாடி, ஓவர் கோட், இடையில் சொருகிய வாள், மார்பின் குறுக்கே துப்பாக்கியுடைய பெல்ட் இதுதான் இவரின் தோற்றம்.
இவருடையது மட்டுமல்ல கடற்கொள்ளையன் என்றாலே நினைவுக்கு வரும் உருவமும் இதுதான்.
அதன்பின்னர் இவரின் பெயரை கேட்டாலே ச்சும்மா அட்லாண்டிக்கடலே அதிரும்
கப்பற்படையே கதரும்  வரலாறிலே வாழும் அந்த பெயர்தான்' பவர் ஸ்டார். '
இப்படி சொல்லனும்னுதான் எனக்கு ஆசை ஆன உண்மை அது இல்லை என்பதால் அந்த இடத்தில் எட்வர்ட் டீச்சின்  புதிய பெயரான "BLACK BEARD "( கருந்தாடி) என்பதை போட்டுக்கொள்ளுங்கள்.
இங்லாந்து கடற்படைக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய இந்த பிளாக்பியர்ட் தான் பைரேட்ஸ் ஆஃப் த கரீபியனின் நான்காம் பாகமான ஆன் ஸ்டேஞ்சர்ஸ் டைடின் வில்லன்.
இனிவரும் பதிவுகளில் படத்தைப்பற்றி விரிவா பார்க்கலாம்.

0 Comments:

Post a Comment