இந்த உலகில் உள்ள விலங்குகளுள் மிகவும் பயங்கரமானதும் தலையாயதுமான ஒரு மிருகம் மனிதன். அவன் அழித்தொழிக்காத உயிரினமே இல்லை தன் இனம் உட்பட. அப்படிப்பட்ட நாகரீக மனிதன் ஒரு பழங்குடி இனத்தையே அழித்த கதைதான் இந்த வாரியர்ஸ் ஆஃப் த ரெய்ன்போ.
இது தைவானில் 1930ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த படத்தைப்போல் படம் எடுக்கப்பட்ட கதையும் சுவாரஸ்யமானது முதலில் அதைப்பார்ப்போம்.
இந்த கதை ஆரம்பமானது 1996ல். வெய் டி ஷாங் அப்புடிங்குற ஒரு தைவான் இயக்குனர் Wushe Incident எனப்படும் சம்பவத்தை அடிப்படையாய் வைத்து எழுதப்பட்ட ஒரு காமிக் புக்கை படித்தார். அது பிடித்துப்போகவே அதை படமாய் எடுக்க முடிவு செய்து இரண்டு வருடம் உட்கார்ந்து நீண்ட திரைக்கதை ஒன்றை எழுதினார். இந்த திரைக்கதையை எடுத்துக்கொண்டு ஒரு தயாரிப்பாளரை அணுகி படத்தைப்பற்றிய ஒரு டிரைலர் வீடியோ எடுக்க இரண்டரை மில்லியன் அமெரிக்க டாலர் கேட்டார். முழு படத்தின் பட்ஜெட் ஏழு மில்லியன். அரண்டுபோன தயாரிப்பாளர் புத்தர் கோவிலில் மந்திரிச்ச டாலரை வாங்கி கொடுத்து இயக்குனரை அணுப்பிவிட்டார். வேறு வழியில்லாமல் தனது மனைவியின் நகை நட்டு எல்லாவற்றையும் விற்று அந்த டிரைலரை எடுத்து பல நிறுவனங்களிடம் காட்டினார். பெரிய பட்ஜெட் காரணமாக எந்த நிறுவனமும் கண்டுகொள்ளாமல் நான் எழுதும் பதிவுகளைப் போன்றே சீந்துவாரின்றி கிடந்தது அந்த டிரைலர்.
நண்பர் ஒருவர் நீ முதலில் சின்ன ஆனிய புடுங்கி காட்டு அப்புறம் பெரிய ஆனி புடுங்கலாம் என ஐடியா கொடுக்க ஷாங்கும் 2008ல் Cap no.7 என்ற சிறிய ஆனியை சாரி லோ பட்ஜெட் காமெடி படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் செம ஹிட்டடிக்க வாரியர்ஸ் ஆஃப் த ரெய்ன்போவை தயாரிக்க சிலர் முன் வந்தனர். இம்முறை ஷாங் கேட்ட பட்ஜெட் இருபத்தி ஐந்து மில்லியன். இது நம்ம எந்திரனை விட கொஞ்சம் கம்மிதான். படம் முழுவதும் காடு, மலை, மழைதான். இரு பாகமான இந்த படத்தை மொத்தம் பத்தே மாதங்களில் எடுத்துவிட்டார். நம்ம ஊரில் வருடக்கணக்கில் படம் எடுக்கும் இயக்குனர்களை கட்டிவைத்து இந்த படத்தை போட்டுக்காட்ட வேண்டும். தைவானில் இது வரை அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுதான். அதேபோல் வசூலையும் அள்ளியது கூடவே பல உலக விருதுகளையும். 2011ல் வெளிவந்த ஒரு சிறந்த காவியமான வாரியர்ஸ் ஆஃப் த ரெய்ன்போ படத்தின் கதை அடுத்த பதிவில்...

0 Comments:
Post a Comment