Sunday, March 2, 2014

பிளாக்பியர்லின் சாபம்


கி.பி.15ம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டைச்சேர்ந்த ஹெர்னன் கார்டஸ் டி மென்ராய் என்பவர் தலைமையில் ஸ்பானிஷ் படைகள் மெக்ஸிகொவை தாக்கி, அங்கிருந்த அஸ்டக் இன மக்களை கொன்று குவித்து அவர்களின் தங்கங்களை கொள்ளையடித்தனர்.  பலரை பலிகொண்ட காரணத்தால் இந்த தங்கம் சபிக்கப்பட்டது. எனவே 882 தங்கபதக்கங்கள் அடங்கிய அந்த பொக்கிஷத்தை ஒரு பெட்டியில் வைத்து பூட்டி அதை கல்லறை தீவில் வைத்துவிட்டு திரும்பிகூட பார்க்காமல் சென்றுவிட்டார் கார்டஸ் டி மென்ராய்.

பல ஆண்டுகளுக்குப்பின்...

கெசுமருந்து அடிக்கும் கார்ப்பரேஷன் வண்டிக்கு பின்னால் செல்லும் வெண்புகையை போன்ற பனி சூழ்ந்த முன்பனிக்காலத்தின் காலை வேலையில் அட்லாண்டிக் கடலில் அந்த பிரிட்டிஷ் கப்பற்படை கப்பல் அலைகளை முத்தமிட்டவாரே மெதுவாக சென்றுகொண்டிருந்தது. அந்த கப்பலில் இருப்பவர்கள் கவர்னர் ஸ்வான், அவரது பத்துவயது மகள் எலிசபெத், லெப்டினன்ட் ஜேம்ஸ் நாரிங்டன் மற்றும் மாலுமி கிப்ஸ். வழியில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஒரு கப்பலை பார்கின்றனர். அதிலிருந்து ஒரு சிறுவன் மீட்கப்பட்டு அவன் பெயர் வில் டானர் என்பதை மட்டும் சொல்லிவிட்டு மயக்கமடைகிறான். அவன் கழுத்தில் அணிந்திருக்கும் ஒரு தங்கபதக்கத்தை எடுத்து மறைத்து விடுகிறால் சிறுமி எலிசபெத்.
எட்டு ஆண்டுகளுக்குப்பின் போர்ட் ராயல் துறைமுகத்தின் அருகே ஒரு சிறியபடகு மூழ்கிகொண்டிருக்கும் நிலையில் வருகிறது. அதன் பாய்மரத்தின் உச்சியில் ஏறிநின்று கரையை பார்கிறது ஓர் உருவம். படகு முழுகவும், துறைமுகத்தின் முகப்பில் அவன் காலை எடுத்து வைக்கவும் சரியாய் இருக்கிறது. யார் அவன்!?  அவன் கொள்ளையர்களால் தேடப்படும் கொள்ளைக்காரன். கடற்படையை கலங்கடிக்கும் கள்வன். ஏலு கடல்களின் இளவரன். அவன் பெயர் ஜாக் ஸ்பேரோ ( கேப்டன்னு சொல்லுங்க) ஆங் கேப்டன் ஜாக் ஸ்பேரோ. இப்படி ஒரு அறிமுக காட்சியை இதுவரை நான் எந்த ஒரு ஹீரோவிற்கும் எந்த படத்திலும் பார்த்ததில்லை. இந்த சீரிஸின் அணைத்து படங்களிலும் எனக்கு மிக பிடித்தமான காட்சியென்றால் அது ஜாக் ஸ்பேரோவின் அறிமுக காட்சிதான். இந்நிலையில் லெப்டினன்ட் நாரிங்டன் தளபதியாக பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ளும் எலிசபெத் எதிர்பாராதவிதமாக கோட்டை உச்சியிலிருந்து கடலில் விழுகிறாள். அவள் கழுத்தில் அணிந்திருக்கும் பதக்கம் நீரில் நனைந்து கடலில் ஒரு அலையை ஏற்படுத்துகிறது. இதனால் இந்த பதக்கம் இருக்குமிடம் பிளாக்பியர்ல் கப்பலுக்கு தொரிந்துவிடுகிறது. எலிசபெத்தை காப்பாற்றும் ஜாக் ஒரு கொள்ளையன் என தெரிந்துவிடுவதால் அவன் காவலர்களிடமிருந்து தப்பிவிடுகிறான். பின்னர் அவனை பிடித்து கொடுக்கிறான் தற்போது கொல்லனாக இருக்கும் வில் டானர். அன்று இரவு போர்ட் ராயல் துறைமுகத்தின் இருளை மேலும் கருமையாக்க வருகிறது பிளாக்பியர்ல். அதில் வரும் கொள்ளையர்கள் நகரையே சூரையாடுகின்றனர். அவர்கள் தேடிவந்த பதக்கம் எலிசபெத்திடம் இருப்பதாலும் மேலும் அவள் பெயர் எலிசபெத் டானர் என்றதாலும் அவளை கடத்திச்செல்கின்றனர். அங்கு பிளாக்பியர்ல் கப்பலின் படு பயங்கர கேப்டனான ஹெக்டர் பர்போசாவை சந்திக்கிறாள் எலிசபெத். அவளிடம் தன் கதையை சொல்கிறான் பர்போசா.

சில வருடங்களுக்கு முன்...

அஸ்டக் பொக்கிஷத்தை அடைவதற்காக கல்லரைத்தீவை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறது பிளாக்பியர்ல். அதன் கேப்டனான ஜாக் ஸ்பேரோவை வஞ்சகமாய் ஏமாற்றி ஒரு தீவில் இறக்கிவிட்டு கப்பலை எடுத்துச்செல்கிறான் பர்போசா. இதற்கு எதிர்ப்பு தொரிவிக்கும் ஒரே நபர் வில் டானரின் தந்தையான வில்லியம் பூஸ்ட்ரப் டானர். இதன் பின்னர் அஸ்டக் தங்கத்தை கொள்ளையடித்த பிறகுதான் தெரிகிறது பசி,தாகம் அடங்காத சாவே வராத நிலவொளியில் பேய்யாய் மாறும் சாபத்திற்கு ஆளானது. இதிலிருந்து மீண்டுவர கொள்ளையடித்த 882 பதக்கங்களையும் அவர்களின் ரத்தத்துடன் கல்லரைத்தீவில் வைக்க வேண்டும். இதற்காகவே எலிசபெத்தை கடத்திச்செல்கிறான்.

இந்நிலையில் எலிசபெத்தை காதலிக்கும் வில் டானர், ஜாக்கை விடுவித்து எலிசபெத்தை மீட்க உதவி கோருகிறான்.  இவனே வில்லியம் டானரின் உண்மையான வாரிசு என்பதையும் சாபம் தீர இவனது ரத்தம் தேவை என்பதையும் அறிந்த ஜாக், வில்லிற்கு உதவ சம்மதிக்கிறான்.
இதன்பின் எலிசபெத் மீட்கப்பட்டாளா? பர்போசாவின் சாபம் தீர்ந்ததா? ஜாக், பர்போசாவை பழி தீர்த்தானா? ஜாக்கிற்கு பிளாக்பியர்ல் கப்பல் கிடைத்ததா? இதற்கெல்லாம் விடை பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் : குருஸ் ஆஃப் த பிளாக்பியர்ல் படத்தில் உள்ளது.

Post credits என்ற ஒரு மிகச்சிறிய காட்சி ஹாலிவுட்டின் சில படங்களின் கட்டக்கடைசியில் வரும். படத்தில் வேலை பார்த்தவர் சூட்டிங்கை வேடிக்கை பார்த்தவரென்று ஒரு இரண்டாயிரம் பெயர்களை போடுவார்களே அதன் பின்னர் வரும் பத்து வினாடி காட்சிதான் அது. ( அவஞ்சர்ஸ் ஹீரோக்களின் அணைத்து படங்களிலும் இது உண்டு) அதைப்போல் இந்த பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன்  படங்களிலும் உண்டு அதையும் காத்திருந்து பாருங்கள்.

                                                                                                             
                                                                                                           

0 Comments:

Post a Comment