Wednesday, February 19, 2014

கரீபியன் கடற்கொள்ளையர்-2

டிஸ்னி லேன்ட் தீம் பார்க்,இது பல
நாடுகளில் உள்ள
ஒரு பொழுதுபோக்கு பூங்கா.
இங்கு நடத்தப்படும் ஒரு சாகச
நிகழ்ச்சிதான் பைரேட்ஸ் ஆஃப் த
கரீபியன் ( நம்ம ஊர் பொருட்காட்சியில்
நடக்கும் மேஜிக் ஸோ போன்றது).
இதை அடிப்படையாய்
வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்க
திட்டமிட்டிருந்தார் வால்ட்
டிஸ்னி ஸ்டூடியோவின்
தலைமை நிர்வாகியான டிக் குக்.
2001ம் ஆண்டு ஜே வெல்பர்ட் என்ற
சுமாரான ஸ்கிரிப்ட் ரைட்டரிடம் இந்த
படத்திற்கான திரைக்கதை எழுதும்
பணி கொடுக்கப்பட்டது.
அவரும் எழுதினார். டிக் குக்
வந்து படித்தார்.
பிடிக்கவில்லை.
அழித்தார்.
எழுதினார்.
இப்படியே ஒரு வருடம் ஓடியது.
பொருத்துப்பார்த்த டிஸ்னி இவரை எழுத
வைத்தால் படத்தின் பட்ஜெட்டைவிட
பேப்பர் செலவு அதிகமாகிவிடும் என
பயந்து வெல்பர்டை தூக்கிவிட்டு
ஸ்டூவர்ட்
பேத்தி என்பவரை நியமித்தது.
இந்நிலையில்தான் த ராக், கான் ஏர்,
ஆர்மகெடன் போன்ற பல
படங்களை தயாரித்த ஜெர்ரி புருகேமியர்
என்ற தயாரிப்பாளரை இந்த படத்தின்
தயாரிப்பில் சேர்த்துக்கொண்டார் குக்.
இம்முறை ஸ்கிரிப்டை ஜெர்ரி படித்தார்.
பிடிக்கவில்லை.
அழித்தார்.
எழுதினார்.
மீண்டும் பழைய குருடி கதவ தொரடி.
(இதுக்கு என்ன அர்த்தம்)
இங்க தான் திரைக்கதையில்
ஒரு திருப்பம் நிகழ்ந்தது.
த மாஸ்க் ஆஃப்
ஸோரோ படங்களுக்கு திரைக்கதை
எழுதிய டெட் எலியட் மற்றும்
டெர்ரி ரோசியோ ஆகியோரிடம் இந்த
படத்தின் ஸ்கிரிப்ட் கொடுக்கப்பட்டது.
இவ்விருவரும் பழைய
திரைக்கதையை மாற்றி எழுதி
பேய்க்கதையை புகுத்தி ஒரு ஃபேன்டஸி
வடிவம் கொடுத்தனர்.
இதுவே தயாரிப்பாளர் ஜெர்ரிக்கும்
பிடித்துப்போனது.
ரைட் இப்ப
கதை ரெடி அடுத்து ஒரு இயக்குனர்
வேண்டுமே என தேடியபோது,
இதுவரை மூன்று படங்களை மட்டுமே
இயக்கிய கோர் வெர்பின்ஸ்கி சிக்கினார்.
இக்கதையின் ஜாக்
ஸ்பேரோ பாத்திரத்திற்கு முதலில்
பரிந்துரைக்கப்பட்டவர் ஹியு ஜாக்மென்
(எக்ஸ் மென்).
நல்லவேலை எவன்செஞ்ச
செய்வினையோ பின்னர்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் ஜானி டெப்.
பின்னர் ஆர்லான்டோ புளும்,
கெய்ரா நைட்லி என்று மற்ற நடிகர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டு படபடப்புடன்
படப்பிடிப்பு ஆரம்பித்தது.
வெறும் ஆறு நாட்கள்
மட்டுமே உண்மையில் கடலில்
எடுக்கப்பட்டது.
மற்ற காட்சிகள் அணைத்தையும்
கம்ப்யூட்டர் கவனித்துகொண்டது.
ஒருவழியா படப்பிடிப்பு முடிந்து படம்
ரிலீசிற்கு ரெடி.
இப்பதான் பத்திரிக்கைகள் டிஸ்னியின்
வயிற்றில் புலியை கரைத்து ரசம்
வைத்தது.
அதன் காரணம் இதுவரை வந்த
அணைத்து கடற்கொள்ளையர் படமும்
செம ஃபிளாப்.
போதாதற்கு ஒரு மாதிரியான
வரலாற்று படங்களிளேயே
நடித்துக்கொண்டிருந்த
ஜானி டெப்பை நம்பி நூற்றி நாற்பது
மில்லியன் டாலரில் யாரும் படம்
எடுத்ததில்லை.
எனவே இந்த படமும் குப்புற
விழுந்து உப்பை கவ்வும்,
டிஸ்னிக்கு பட்டை நாமம்தான் என
பத்திரிக்கைகள் எழுதின.
போட்ட காசு டாலரில் வராவிட்டாலும்
ரூபாயிலாவது வரட்டுமென்று ஜூலை
9, 2003ல் பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் :
குருஸ் ஆஃப் த பிளாக் பியர்ல் என
பெயரிட்டு ரிலீஸ் செய்தது டிஸ்னி.
தயாரிப்பாளர் ஜெர்ரியும்
துண்டை துவைத்து
காயவைத்துக்கொண்டிருந்தார்
தலையில் போட தேவைப்படுமென்று.
சனிபகவானும் சுக்கிரனும் ஒருவரைப்
பார்த்து ஒருவர் சிரித்துக்கொண்டனர்.

0 Comments:

Post a Comment