Sunday, July 9, 2017

Spiderman Homecoming



1977லிருந்தே அந்த அந்த காலத்துக்கு ஏத்தமாதிரி ஸ்பைடர்மேன் திரைப்படங்கள் எடுத்துகிட்டுதான் இருக்காங்க. பிரபல பேய்க்கதை மன்னன் சாம் ரெய்மி எடுத்த ஸ்பைடர்மேன்தான் உலகம் முழுக்க ஸ்பைடர்மேன கொண்டுபோனது. எனக்கு பர்ஸ்னலா பிடிச்ச ஒரு சூப்பர்ஹீரோவும் ஸ்பைடர்மேன் தான். அதுவரைக்கும் கிழவர்களால் நிரம்பிவழிந்த சூப்பர்ஹீரோ ஏரியால டீன் ஏஜ் பசங்களுக்காக ஒரு டீன் ஏஜ் ஹீரோவாகவே உருவாக்கப்பட்டவன் தான் ஸ்பைடர்மேன். ஸ்பைடர்மேன நமக்கு இன்னும் நெருக்கமா காட்டியது 2012ல் வந்த அமேஸிங் ஸ்பைடர்மேன் தான். இத்தனை படங்களில் அவரோட பின்னனிய சொல்லிட்டதால இந்த ஹோம் கமிங் படத்தில் நேரடியா அவர் அவஞ்சர்ல சேருவதைப்பற்றி மட்டும் எடுத்துருக்காங்க. அதனால வில்லனோட பின்னனிலேருந்து படத்த ஆரம்பிச்சிருக்காங்க.

முதலில் இந்த படத்தோட பெயரே ஒரு காரணப்பெயர்தான். ஸ்பைடர்மேன் கதாபாத்திர உரிமை சோனி நிறுவனத்திடமிருந்து மீண்டும் மார்வெலுக்கே வந்திருப்பதுகூட ஒரு ஹோம்கமிங்தான். இந்த படத்துல முதலில் எனக்கு பிடிச்சது அவரோட சூட். அதுல இல்லாத அம்சங்களே இல்லை. ஸ்பைடர்மேனோட ஆயுதமே அவரோட வலைதான்  அத இந்த படத்தில் கச்சிதமா காட்டி இருக்காங்க. ஸ்பைடர்மேனோட ஆர்வக்கோளாரினால் ஒரு விபத்து ஏற்படுது அதனால கடுப்பான அயர்ன்மேன் இந்த சூட் இல்லனா நீ ஒரு வேஸ்டுனு சொல்லி அவர் தயாரிச்சி கொடுத்த ஹைடெக் சூட்ட புடிங்கிட்டு போய்டுரார். அந்த சூட் இல்லனாலும் தான் ஒரு ஸ்பைடர்மேன்தானு நிரூபிக்கிறதுதான் இந்த படம். ஏற்கனவே பல படங்கள்ல பிரமாண்டமான சண்டைகாட்சியலாம் பார்த்துட்டதால இந்த படத்தோட சண்டைகாட்சி ரொம்ப சாதாரணமா இருக்கு. மத்தபடி மார்வெலுக்கே உரிய ஜாலியான காட்சிகள் நிறைய இருக்கு. ஒரு மார்வெல் ரசிகனா எனக்கு படம் பிடிச்சிருக்கு ஆனா எல்லாருக்கும் பிடிக்கும்னு சொல்லமுடியாது.

இந்த படத்துல 2 போஸ்ட் க்ரடிட் காட்சிகள் இருக்கு. முதல் காட்சில வருபவந்தான் அடுத்தபாக வில்லனான ஸ்கார்ப்பியன். அடுத்த கட்சில வருபவர் கேப்டன் அமெரிக்கா. இவர செமையா ஓட்டிருக்காங்க.

அப்புறம் இந்த படத்தில் கடுப்பகெளப்புன இன்னொரு விசயம் எதிர்மறை வார்த்தை கொண்ட தமிழ் டப்பிங். உதாரனமா “ நீ ஒரு கொழந்த தான்” அப்புடினு சொல்றத  நீ ஒன்னும் கெழவன் இல்லனு டப் பன்னிருக்காங்க. ட்ரைலர்லையே நல்லா டப் பன்னிருப்பாங்க.       



     

Monday, May 29, 2017

Pirates of the Caribbean: Dead man tell no Tales (2017)



ஹென்றி டேனர் தன் அப்பாவான வில்லியம் டேனர ஃபிளையிங் டச்மேன் கப்பலின் சாபத்திலிருந்து மீட்பதற்கு தேவையான பொசைடனின் சூலத்த அடைவதற்கு ஜாக் ஸ்பேரோவின் உதவிய தேடி போராரு. ஜாக் ஸ்பேரோவுக்கும் தன்னை கொள்ள துரத்திக்கிட்டு இருக்கும் பேயாய் மாறிய கேப்பிடன் ஸலசாரிடமிருந்து தப்பிக்க அந்த சூலம் தேவைப்படுது. கரீனா என்ற பெண்னுக்கும் தன்னோட தொலைந்துபோன அப்பா கொடுத்துட்டு போன ஒரு டைரிய வச்சி அந்த சூலத்த தேடுறாங்க. கேப்டன் பர்போசாவும் உயிர காப்பாத்திக்க அந்த சூலத்த தேடி போராரு. இதுல யாருக்கு சூலம் கிடச்சிது யார் என்ன ஆனாங்கனு தெரிஞ்சிக்க படத்த பார்க்கனும்னு அவசியம் இல்ல நீங்க வெரித்தனமான பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் ரசிகரா இருந்தா இன்னேரம் கண்டுபிடிச்சிருப்பீங்க.

முதலில் இந்த படத்துல புதுசா எதுவுமே இல்ல.( அப்ப எல்லாமே செகனாண்டா? அந்த பொண்னு? அதோட….?) அதே பார்த்த பழைய காட்சிகள். முதல் இரு பாகங்களையும் கலந்து எடுத்துருக்காங்க. 4வது பாகத்துலையாவது கடல் கன்னி இருந்துச்சி. இந்த சீரிஸ்லையே முதல் மூனு பாகம்தான் அட்டகாசமா இருக்கும். எல்லா தொடர் பாகங்களுக்கும் வரும் பிரச்சனதான் இந்த படத்துக்கும். ஒரு கட்டத்துக்குமேல் போர் அடிக்க ஆரம்பிச்சிடும். இதோட இந்த சீரிஸ நிறுத்திடலாம். அதுதான் நமக்கு நல்லது.

இந்த படங்களில் வரும் கார்ட்டரோட கிளி, குரங்கு, வழுக்க மண்டையனும் மரக்கண்ணனும், குள்ளன், மாஸ்டர் கிப்ஸ் இவங்க எல்லாருமே சின்ன கேரக்டர்தான் ஆனா அவங்களுக்கே உறிய தனித்தன்மையான காட்சிகள் மூலம் மறக்கவே முடியாத அளவுக்கு அவங்களோட கேரக்டர் உருவாக்கம் இருக்கும். அதைப்போல இந்த படத்தில் எந்த காட்சியும் இல்லை.

எல்லா பாகங்களிலுமே ஜாக் ஸ்பேரோவின் அறிமுக காட்சி எனக்கு ரொம்ப பிடிக்கும் குறிப்பா மூன்றாம் பாகம் அட்டகாசம் ஆனா இதுல நீங்களே பாருங்க.

பயங்கர எதிர்பார்ப்போட போனிங்கனா ஏமாற்றம் நிச்சயம். ஜானி டெப் அடுத்து நடிக்கப்போர த இன்விஸிபில் மேன எதிர்பார்க்கலாம்.


படத்துல ஒரு போஸ்ட் கிரடிட் சீன் இருக்கு அதுல மறுபடியும் ”அவரே” வருவாரு.


Wednesday, May 3, 2017

Guardians of the Galaxy vol.2



நிறைய உலகங்களை ஆக்கிரமித்துக்கொண்டுவரும் ஒரு தீயசக்தி(!?) பூமியையும் ஆக்கிரமிக்க வருது.( நான் pjpயையோ மோடியையோ சொல்லவில்லை). அது கிட்டேருந்து பூமியை எப்படி Guardians of the Galaxy காப்பாத்துறாங்க என்பதுதான் இந்த படத்தோட கதை.

அந்த தீயசக்தி எதுனு படத்த பார்த்து தெரிஞ்சிக்கங்க. படத்தோட முக்கியமான ட்விஸ்டும் அதுதான், கதாநாயகன் பீட்டர் க்வில்லோட பிறப்பின் ரகசியமும் அதுதான்.

இது காமெடி அதிகம் உள்ள ஒரு ஜாலியான ஆக்‌ஷன் படம். இந்த படத்துல உங்கள முதல்ல கவர்வது பேபி க்ரூட் தான். படு சீரியசான நேரங்களில் இது பன்னும் முட்டாள்தனமான சேட்டைகளையெல்லாம் லேடிஸ் காலேஜ் வாசல்ல கடை வச்சிருப்பவன் மாறி பார்த்துக்கிட்டே இருக்கலாம். இந்த பேபி க்ரூட்டே அடுத்த பாகத்திலும் வந்தா நல்லாருக்குமேனு நினைக்கும்போதே படத்தோட மூனாவது போஸ்ட் க்ரடிட் சீன்ல வளர்ந்த டீன்ஏஜ் க்ரூட்ட காட்டி கடுப்பேத்திடானுங்க.

அடுத்தது ராக்கெட். இது ஒரு ஹைபிரிட் நரி. இப்படி மட்டும் யாராவது அதுக்கு முன்னாடி சொல்லிட்டா போதும் கொலைவெரி கொள்ளும். ராக்கெட்டோட திமிரான கேரக்டருக்கு ப்ரட்லி கூப்பரோட நக்கலான குரல் தேர்வு கணக்கச்சிதம். ராக்கெட், கொள்ளைகூட்ட தலைவனான யாண்டு மற்றும் போபி க்ரூட் இவங்க காம்பினேஷன்ல செமத்தையான காட்சிகள்லாம் படத்தி உண்டு. ராக்கெட்டா மோஷன்கேப்சர்ல நடிச்ச நடிகர் ஷீன் கன் தான், யாண்டுவோட அஸிஸ்டெண்டா மற்றொரு கதாபாத்திரமா நடிச்சிருக்காரு. இவருக்கு இந்த படத்தின் மூன்றாம் பாகத்தில் ஒரு முக்கிய இடம் உண்டு.

கர்ட் ரஸல் இந்த படத்தில் பீட்டர் க்வில்லோட தந்தையா நடிச்சிருக்காரு. பார்ப்பதற்கு மோஸஸ் மாறியே (டென்கமான்மெண்ட்) இருக்காரு. ஒரு குட்டி கடவுளாதன் படத்தில் வருகிறார்.  “ நான் ஒரு ஸ்மால் ஜீஸஸ்”னு இவருக்கு ஒரு வசனம்கூட படத்தில் உண்டு. இவரால் புதிய உலகங்களை உருவாக்க முடியும். லிவ்விங் ப்ளானெட்னு இவர சொல்லுவாங்க.

இந்த படத்தில் மூன்று போஸ்ட் க்ரடிட் சீன்கள் இருக்கு.
முதல் சீன்ல, ஸ்டாக்கர் ஒகார்ட் என்ற பாத்திரத்தில் சில்வஸ்டர் ஸ்டலோன் நடிச்சிருக்காரு. இவரும் ஒரு விண்வெளி கொள்ளைக்கூட்ட தலைவர்தான். இவரைப்போலவே இன்னும் நிறைய தலைவர்கள் இருக்காங்க. எல்லாரும் மூன்றாம் பாகத்தில் வரப்போறாங்க.

இரண்டாவது சீன்ல காட்டப்படுவது ஒரு மெஷின். அதைவைத்து பாகுபலி(!?) போன்ற சூப்பர்ஹீரோக்களை உருவாக்கலாம். அதன் முதல் தயாரிப்பு ஆடம் வார்லாக் என்பவன். இவன் மூன்றாம் பாக வில்லனாகவோ அல்லது அவெஞ்சர்ஸ்-இன்ஃபினிட்டி வார் படத்திலோ வரலாம்.


அப்புறம் இந்த படத்தில் ஒரு புதிய கதாபத்திரத்தின் அறிமுகமும் ஒரு முக்கிய கதாபத்திரத்தின் இறப்பும் உண்டு.


Wednesday, November 30, 2016

காட்டேரியும் ஒரு கதை சொல்லியும்



ஹாலிவுட்டில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும் “விஷனரி” என்ற பதத்திற்கு பொருத்தமானவர் ஒருத்தர் இருக்காரு அவர் பெயர் கியர்மோ டெல் டோரா. பழைய கதைகளில் உள்ள பூதங்கள், விசித்திர ஜந்துக்கள், பற்சக்கர அமைப்பில் இயங்கும் எந்திரங்கள், யுத்தகால பின்னணி இவை அணைத்தும் இவரது படத்தில் இருக்கும். அதுவும் ஏனோதானோவென்று இருக்காது. நேர்த்தியான செட்கள், கச்சிதமான மேக்கப், தேவையான அளவு கிரஃபிக்ஸின் துணைக்கொண்டு உங்களால் மறக்க முடியாத ஒரு காட்சி அனுபவத்தைக் கொடுக்கும்படி இருக்கும். ஒரு மேட்னஸ் இருக்கும். ஆனா இவரோட படங்கள் எல்லாருக்கும் பிடிக்காது அந்த மேட்னஸ் இருக்குறவங்களுக்கு மட்டும்தான் பிடிக்கும். இவர் படங்களை பார்க்கும்போது மட்டும்தான் நாம ஏதோ தாத்தா பாட்டிக்கிட்ட கதை கேட்ப்பதைபோலவே இருக்கும். ஏன்னா இவர் ஒரு கதை சொல்லி. ( சமீபத்தில் அந்த அனுபவம் எனக்கு ஸ்பில்பெர்க்கின் The BFG படத்திலும் கிடைத்தது).

கியர்மோ டெல் டோரா எழுத்தாளர் சக் ஹோகனுடன் சேர்ந்து The Strain என்ற மூன்றுபாக வாம்பயர் நாவலை எழுதினார். அதை இப்ப சீரியலாவும் எடுத்துருக்காங்க. முதல் எபிசோட இயக்கி அட்டகாசமா ஆரம்பிச்சி வச்சது டெல் டோராதான். நியூயார்க் ஏர்போர்ட்டுக்கு ஒரு நாள் நைட்டு ஒரு விமானம் வந்து நிக்குது. அதுல இருந்த பயணிகள்ல நாலுபேரத்தவிர மற்ற எல்லாரும் இறந்துருக்காங்க. அதுல ஒரு சவப்பெட்டியும் வந்துருக்கு. பிழைத்த நாலுபேரும் வாம்பயரா மாறி எல்லாரையும் கடிச்சி மொத்த நகரமே வாம்பயரா மாறிக்கிட்டு இருக்கு. இதுக்கு அப்புறம் என்ன ஆகுது, சவப்பெட்டில என்ன இருக்கு, மக்கள் தப்பிச்சாங்களா என்பதை இதுவரை வந்த மூன்று சீசன்ல சொல்லிருக்காங்க. அடுத்த வருஷம் வரப்போர நாலாவது சீசனோட இந்த தொடர் முடியப்போகுது.
இதுவரைக்கும் நான் பார்த்த டீவி தொடர்களிலேயே முதல் சீசன தாண்டி என்ன பார்க்க வைத்தது ஷெர்லாக்குக்கு அப்புறம் இந்த தெடர்தான். ( அட போய்யா நம்ம தெய்வமகளுக்கு ஈடாகுமா?) எல்லாரும் சீன் போடுரதுக்காகவே பார்த்த கேம் ஆஃப் த்ரோன் தெடர்ல என்னதான் இருக்குன்னு நானும் பார்த்தேன், ஒவ்வொரு எபிசோட்லையும் எது இருக்கோ இல்லையோ கண்டிப்பா ஒரு மேட்டர் சீனு இருக்கு.

வாம்பயர்களின் மூதாதையர்களான புராதண ஏழு வாம்பயர்களுள் ஒருவர் மாஸ்டர். இந்த மாஸ்டர் மற்ற ஆறு வாம்பயர்களையும் கொல்ல நினைக்கிறார். அதனால மற்ற வாம்பயர்கள்லாம் மாஸ்டர கொல்றதுக்கு ஒரு கொலைகாரனை வேலைக்கு வைக்குறாங்க. அவன் பெயர் குயின்லன். இவன் பாதி மனிதன் பாதி வாம்பயர். பிளேட் படத்தின் ஹீரோவைப்போல. கடந்த இரண்டாயிரம் வருஷமா மாஸ்டர கொல்ல முயற்சிபன்னிகிட்டு இருப்பவன்.

இந்த தொடரின் ஹீரோனு பார்த்த அது புரஃபஸர் செட்ராக்கியன் என்ற கிழவர்தான். ஒரு வேட்டை நாயைப்போல மாஸ்டர கொல்றதுக்கு அழைந்துகொண்டிருப்பவர். எதுக்குமே அலட்டிக்க மாட்டாரு. இவரைப்பேன்ற கதாபாத்திரங்கள் டெல் டோராவின் க்ரோனஸ் படத்திலும் ஹெல்பாய் படத்திலும் உண்டு. இவரிடம் ஒரு கைத்தடி இருக்கும் அதுபோன்ற பொருட்கள்தான் டெல் டோராவின் உருவாக்கம்.

பிளேட் படத்தின் இரண்டாம் பாகம் உங்களுக்கு பிடிக்குமென்றால் இந்த சீரியலும் நிச்சயம் பிடிக்கும். அந்த ரீப்பர்களின் நீட்சிதான் இந்த ஸ்டிரிகோய். மத்தபடி சரக்கு அடிக்காமலே வாந்தி எடுப்பவர்கள் இதை பார்ப்பதை தவிர்த்து அஜால் குஜால் சீரியல்களை பார்க்கவும்.

என்னைப்போன்ற கியர்மோ டெல் டோரா ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட தொடர்தான் The Strain.

Wednesday, August 31, 2016

6174




அது கணிக்கவே முடியாத ஒரு யுகம். லெமூரியா கண்டத்தின் ஒன்பது அடி உயர மனிதர்கள் சிலர் அங்கே நிற்கின்றனர். அவர்களின் முன்பு லெமூரியாவின் சக்தி பீடமான சிறிய பிரமிட் ஒன்று உள்ளது. பின்னால் தோன்றப்போகும் மோசமான மனித இனத்தின் கையில் அது கிடைக்கக்கூடாது என்பதற்காக அதை இரு பகுதியாக வெட்டி உலகின் இருவேறு பகுதிகளில் மறைத்துவிட்டு லெமூரியன்கள் அழிந்துவிடுகின்றனர்.

தற்காலத்தில் அந்த லெமூரியன் பிரமிடை தோடி பல குழுக்கள் அழைகின்றன. அதை அடைய ஏகப்பட்ட புதிர்களை அவிழ்க்கவேண்டியுள்ளது. கடைசியில் அந்த பிரமிட் என்ன ஆனது என்று இந்த 6174 என்ற கதையை படித்து தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு டாவின்ஸி கோட் நாவலும் திரைப்படமும் பிடிக்குமெனில் நிச்சயம் இந்த நாவலும் பிடிக்கும். சரி இந்த நாவலுக்கு ஏன் 6174 னு பெயர் வச்சாங்க. அதுக்கான காரணம் தெரியும்போது நீங்க வாய்பிளப்பது நிச்சயம். கணிதத்தில் இந்த 6174 நம்பரை ஒரு கருங்குழினு (Black hole) சொல்லப்படுவது ஏன்? விடை புக்கில்.

லெமூரியாவில் ஆரம்பிக்கும் கதை அமெரிக்கா, கொரியா, ரஷ்யா, சென்னை,கேரளா,காஞ்சிபுரம், மஹாராஷ்ட்ரா,ஒரிசா, பர்மானு கடைசில பெர்முடா முக்கோணத்துல வந்து முடியும்.
இந்த புக்க ஒரு வருடத்திற்கு முன்பு வாங்கியபோது ஆரம்ப இருபது பக்கங்களைகூட தாண்டமுடியல அவ்ளோ குழப்பமா இருந்தது. மூடிவச்சிட்டேன். நேற்று மறுபடிம் எடுத்து புரட்டினேன் இருபது பக்கங்களுக்கு பிறகு புக்கு என்னை புரட்டிபோட்டுவிட்டது அவ்ளோ வேகம். இந்த கதைய எழுதிய க.சுதாகருக்கு இதுதான் முதல் கதை.
வம்சி பதிப்பகம். விலை ரூபாய்.300.