நிறைய உலகங்களை ஆக்கிரமித்துக்கொண்டுவரும் ஒரு தீயசக்தி(!?)
பூமியையும் ஆக்கிரமிக்க வருது.( நான் pjpயையோ மோடியையோ சொல்லவில்லை). அது கிட்டேருந்து
பூமியை எப்படி Guardians of the Galaxy காப்பாத்துறாங்க என்பதுதான் இந்த படத்தோட கதை.
அந்த தீயசக்தி எதுனு படத்த பார்த்து தெரிஞ்சிக்கங்க. படத்தோட
முக்கியமான ட்விஸ்டும் அதுதான், கதாநாயகன் பீட்டர் க்வில்லோட பிறப்பின் ரகசியமும் அதுதான்.
இது காமெடி அதிகம் உள்ள ஒரு ஜாலியான ஆக்ஷன் படம். இந்த படத்துல
உங்கள முதல்ல கவர்வது பேபி க்ரூட் தான். படு சீரியசான நேரங்களில் இது பன்னும் முட்டாள்தனமான
சேட்டைகளையெல்லாம் லேடிஸ் காலேஜ் வாசல்ல கடை வச்சிருப்பவன் மாறி பார்த்துக்கிட்டே இருக்கலாம்.
இந்த பேபி க்ரூட்டே அடுத்த பாகத்திலும் வந்தா நல்லாருக்குமேனு நினைக்கும்போதே படத்தோட
மூனாவது போஸ்ட் க்ரடிட் சீன்ல வளர்ந்த டீன்ஏஜ் க்ரூட்ட காட்டி கடுப்பேத்திடானுங்க.
அடுத்தது ராக்கெட். இது ஒரு ஹைபிரிட் நரி. இப்படி மட்டும் யாராவது
அதுக்கு முன்னாடி சொல்லிட்டா போதும் கொலைவெரி கொள்ளும். ராக்கெட்டோட திமிரான கேரக்டருக்கு
ப்ரட்லி கூப்பரோட நக்கலான குரல் தேர்வு கணக்கச்சிதம். ராக்கெட், கொள்ளைகூட்ட தலைவனான
யாண்டு மற்றும் போபி க்ரூட் இவங்க காம்பினேஷன்ல செமத்தையான காட்சிகள்லாம் படத்தி உண்டு.
ராக்கெட்டா மோஷன்கேப்சர்ல நடிச்ச நடிகர் ஷீன் கன் தான், யாண்டுவோட அஸிஸ்டெண்டா மற்றொரு
கதாபாத்திரமா நடிச்சிருக்காரு. இவருக்கு இந்த படத்தின் மூன்றாம் பாகத்தில் ஒரு முக்கிய
இடம் உண்டு.
கர்ட் ரஸல் இந்த படத்தில் பீட்டர் க்வில்லோட தந்தையா நடிச்சிருக்காரு.
பார்ப்பதற்கு மோஸஸ் மாறியே (டென்கமான்மெண்ட்) இருக்காரு. ஒரு குட்டி கடவுளாதன் படத்தில்
வருகிறார். “ நான் ஒரு ஸ்மால் ஜீஸஸ்”னு இவருக்கு
ஒரு வசனம்கூட படத்தில் உண்டு. இவரால் புதிய உலகங்களை உருவாக்க முடியும். லிவ்விங் ப்ளானெட்னு
இவர சொல்லுவாங்க.
இந்த படத்தில் மூன்று போஸ்ட் க்ரடிட் சீன்கள் இருக்கு.
முதல் சீன்ல, ஸ்டாக்கர் ஒகார்ட் என்ற பாத்திரத்தில் சில்வஸ்டர்
ஸ்டலோன் நடிச்சிருக்காரு. இவரும் ஒரு விண்வெளி கொள்ளைக்கூட்ட தலைவர்தான். இவரைப்போலவே
இன்னும் நிறைய தலைவர்கள் இருக்காங்க. எல்லாரும் மூன்றாம் பாகத்தில் வரப்போறாங்க.
இரண்டாவது சீன்ல காட்டப்படுவது ஒரு மெஷின். அதைவைத்து பாகுபலி(!?)
போன்ற சூப்பர்ஹீரோக்களை உருவாக்கலாம். அதன் முதல் தயாரிப்பு ஆடம் வார்லாக் என்பவன்.
இவன் மூன்றாம் பாக வில்லனாகவோ அல்லது அவெஞ்சர்ஸ்-இன்ஃபினிட்டி வார் படத்திலோ வரலாம்.
அப்புறம் இந்த படத்தில் ஒரு புதிய கதாபத்திரத்தின் அறிமுகமும்
ஒரு முக்கிய கதாபத்திரத்தின் இறப்பும் உண்டு.
0 Comments:
Post a Comment