ஹாலிவுட்டில் எத்தனையோ
இயக்குனர்கள் இருந்தாலும் “விஷனரி” என்ற பதத்திற்கு பொருத்தமானவர் ஒருத்தர் இருக்காரு
அவர் பெயர் கியர்மோ டெல் டோரா. பழைய கதைகளில் உள்ள பூதங்கள், விசித்திர ஜந்துக்கள்,
பற்சக்கர அமைப்பில் இயங்கும் எந்திரங்கள், யுத்தகால பின்னணி இவை அணைத்தும் இவரது படத்தில்
இருக்கும். அதுவும் ஏனோதானோவென்று இருக்காது. நேர்த்தியான செட்கள், கச்சிதமான மேக்கப்,
தேவையான அளவு கிரஃபிக்ஸின் துணைக்கொண்டு உங்களால் மறக்க முடியாத ஒரு காட்சி அனுபவத்தைக்
கொடுக்கும்படி இருக்கும். ஒரு மேட்னஸ் இருக்கும். ஆனா இவரோட படங்கள் எல்லாருக்கும்
பிடிக்காது அந்த மேட்னஸ் இருக்குறவங்களுக்கு மட்டும்தான் பிடிக்கும். இவர் படங்களை
பார்க்கும்போது மட்டும்தான் நாம ஏதோ தாத்தா பாட்டிக்கிட்ட கதை கேட்ப்பதைபோலவே இருக்கும்.
ஏன்னா இவர் ஒரு கதை சொல்லி. ( சமீபத்தில் அந்த அனுபவம் எனக்கு ஸ்பில்பெர்க்கின்
The BFG படத்திலும் கிடைத்தது).
கியர்மோ டெல் டோரா
எழுத்தாளர் சக் ஹோகனுடன் சேர்ந்து The Strain என்ற மூன்றுபாக வாம்பயர் நாவலை எழுதினார்.
அதை இப்ப சீரியலாவும் எடுத்துருக்காங்க. முதல் எபிசோட இயக்கி அட்டகாசமா ஆரம்பிச்சி
வச்சது டெல் டோராதான். நியூயார்க் ஏர்போர்ட்டுக்கு ஒரு நாள் நைட்டு ஒரு விமானம் வந்து
நிக்குது. அதுல இருந்த பயணிகள்ல நாலுபேரத்தவிர மற்ற எல்லாரும் இறந்துருக்காங்க. அதுல
ஒரு சவப்பெட்டியும் வந்துருக்கு. பிழைத்த நாலுபேரும் வாம்பயரா மாறி எல்லாரையும் கடிச்சி
மொத்த நகரமே வாம்பயரா மாறிக்கிட்டு இருக்கு. இதுக்கு அப்புறம் என்ன ஆகுது, சவப்பெட்டில
என்ன இருக்கு, மக்கள் தப்பிச்சாங்களா என்பதை இதுவரை வந்த மூன்று சீசன்ல சொல்லிருக்காங்க.
அடுத்த வருஷம் வரப்போர நாலாவது சீசனோட இந்த தொடர் முடியப்போகுது.
இதுவரைக்கும் நான்
பார்த்த டீவி தொடர்களிலேயே முதல் சீசன தாண்டி என்ன பார்க்க வைத்தது ஷெர்லாக்குக்கு
அப்புறம் இந்த தெடர்தான். ( அட போய்யா நம்ம தெய்வமகளுக்கு ஈடாகுமா?) எல்லாரும் சீன்
போடுரதுக்காகவே பார்த்த கேம் ஆஃப் த்ரோன் தெடர்ல என்னதான் இருக்குன்னு நானும் பார்த்தேன்,
ஒவ்வொரு எபிசோட்லையும் எது இருக்கோ இல்லையோ கண்டிப்பா ஒரு மேட்டர் சீனு இருக்கு.
வாம்பயர்களின்
மூதாதையர்களான புராதண ஏழு வாம்பயர்களுள் ஒருவர் மாஸ்டர். இந்த மாஸ்டர் மற்ற ஆறு வாம்பயர்களையும்
கொல்ல நினைக்கிறார். அதனால மற்ற வாம்பயர்கள்லாம் மாஸ்டர கொல்றதுக்கு ஒரு கொலைகாரனை
வேலைக்கு வைக்குறாங்க. அவன் பெயர் குயின்லன். இவன் பாதி மனிதன் பாதி வாம்பயர். பிளேட்
படத்தின் ஹீரோவைப்போல. கடந்த இரண்டாயிரம் வருஷமா மாஸ்டர கொல்ல முயற்சிபன்னிகிட்டு இருப்பவன்.
இந்த தொடரின் ஹீரோனு
பார்த்த அது புரஃபஸர் செட்ராக்கியன் என்ற கிழவர்தான். ஒரு வேட்டை நாயைப்போல மாஸ்டர
கொல்றதுக்கு அழைந்துகொண்டிருப்பவர். எதுக்குமே அலட்டிக்க மாட்டாரு. இவரைப்பேன்ற கதாபாத்திரங்கள்
டெல் டோராவின் க்ரோனஸ் படத்திலும் ஹெல்பாய் படத்திலும் உண்டு. இவரிடம் ஒரு கைத்தடி
இருக்கும் அதுபோன்ற பொருட்கள்தான் டெல் டோராவின் உருவாக்கம்.
பிளேட் படத்தின்
இரண்டாம் பாகம் உங்களுக்கு பிடிக்குமென்றால் இந்த சீரியலும் நிச்சயம் பிடிக்கும். அந்த
ரீப்பர்களின் நீட்சிதான் இந்த ஸ்டிரிகோய். மத்தபடி சரக்கு அடிக்காமலே வாந்தி எடுப்பவர்கள்
இதை பார்ப்பதை தவிர்த்து அஜால் குஜால் சீரியல்களை பார்க்கவும்.
என்னைப்போன்ற கியர்மோ
டெல் டோரா ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட தொடர்தான் The Strain.
0 Comments:
Post a Comment