Sunday, July 9, 2017

Spiderman Homecoming



1977லிருந்தே அந்த அந்த காலத்துக்கு ஏத்தமாதிரி ஸ்பைடர்மேன் திரைப்படங்கள் எடுத்துகிட்டுதான் இருக்காங்க. பிரபல பேய்க்கதை மன்னன் சாம் ரெய்மி எடுத்த ஸ்பைடர்மேன்தான் உலகம் முழுக்க ஸ்பைடர்மேன கொண்டுபோனது. எனக்கு பர்ஸ்னலா பிடிச்ச ஒரு சூப்பர்ஹீரோவும் ஸ்பைடர்மேன் தான். அதுவரைக்கும் கிழவர்களால் நிரம்பிவழிந்த சூப்பர்ஹீரோ ஏரியால டீன் ஏஜ் பசங்களுக்காக ஒரு டீன் ஏஜ் ஹீரோவாகவே உருவாக்கப்பட்டவன் தான் ஸ்பைடர்மேன். ஸ்பைடர்மேன நமக்கு இன்னும் நெருக்கமா காட்டியது 2012ல் வந்த அமேஸிங் ஸ்பைடர்மேன் தான். இத்தனை படங்களில் அவரோட பின்னனிய சொல்லிட்டதால இந்த ஹோம் கமிங் படத்தில் நேரடியா அவர் அவஞ்சர்ல சேருவதைப்பற்றி மட்டும் எடுத்துருக்காங்க. அதனால வில்லனோட பின்னனிலேருந்து படத்த ஆரம்பிச்சிருக்காங்க.

முதலில் இந்த படத்தோட பெயரே ஒரு காரணப்பெயர்தான். ஸ்பைடர்மேன் கதாபாத்திர உரிமை சோனி நிறுவனத்திடமிருந்து மீண்டும் மார்வெலுக்கே வந்திருப்பதுகூட ஒரு ஹோம்கமிங்தான். இந்த படத்துல முதலில் எனக்கு பிடிச்சது அவரோட சூட். அதுல இல்லாத அம்சங்களே இல்லை. ஸ்பைடர்மேனோட ஆயுதமே அவரோட வலைதான்  அத இந்த படத்தில் கச்சிதமா காட்டி இருக்காங்க. ஸ்பைடர்மேனோட ஆர்வக்கோளாரினால் ஒரு விபத்து ஏற்படுது அதனால கடுப்பான அயர்ன்மேன் இந்த சூட் இல்லனா நீ ஒரு வேஸ்டுனு சொல்லி அவர் தயாரிச்சி கொடுத்த ஹைடெக் சூட்ட புடிங்கிட்டு போய்டுரார். அந்த சூட் இல்லனாலும் தான் ஒரு ஸ்பைடர்மேன்தானு நிரூபிக்கிறதுதான் இந்த படம். ஏற்கனவே பல படங்கள்ல பிரமாண்டமான சண்டைகாட்சியலாம் பார்த்துட்டதால இந்த படத்தோட சண்டைகாட்சி ரொம்ப சாதாரணமா இருக்கு. மத்தபடி மார்வெலுக்கே உரிய ஜாலியான காட்சிகள் நிறைய இருக்கு. ஒரு மார்வெல் ரசிகனா எனக்கு படம் பிடிச்சிருக்கு ஆனா எல்லாருக்கும் பிடிக்கும்னு சொல்லமுடியாது.

இந்த படத்துல 2 போஸ்ட் க்ரடிட் காட்சிகள் இருக்கு. முதல் காட்சில வருபவந்தான் அடுத்தபாக வில்லனான ஸ்கார்ப்பியன். அடுத்த கட்சில வருபவர் கேப்டன் அமெரிக்கா. இவர செமையா ஓட்டிருக்காங்க.

அப்புறம் இந்த படத்தில் கடுப்பகெளப்புன இன்னொரு விசயம் எதிர்மறை வார்த்தை கொண்ட தமிழ் டப்பிங். உதாரனமா “ நீ ஒரு கொழந்த தான்” அப்புடினு சொல்றத  நீ ஒன்னும் கெழவன் இல்லனு டப் பன்னிருக்காங்க. ட்ரைலர்லையே நல்லா டப் பன்னிருப்பாங்க.       



     

0 Comments:

Post a Comment