ஜாங் வூ அப்புடினு தொன் கொரியால ஒரு மாமா இருந்தாரு. என்னடா மாமாங்குறேனு பாக்குறீங்களா என்ன பன்றது அவர் பன்ற தொழில் அப்படி. ரெண்டாம் நம்பர் பிஸ்னஸ் பன்னுகிற நம்பர் ஒன் ஆளு. கொஞ்ச நாளாவே அவரிடம் இருந்த இரு பெண்களை காணவில்லை. இந்நிலையில் 4885 என்ற நம்பரிலிருந்து ஒருவன் அழைத்து தன் சொல்லுமிடத்திற்கு ஒரு பெண்ணை அனுப்பும்படி கூறுகிறான். ஜாங் வூவும் சரினு மி ஜின் என்ற பெண்ணை அனுப்புகிறார். பின்னர் இந்த பொண்ணும் திரும்பிவருவதில்லை. என்னடா இது என அவர் தன் ரிஜிஸ்டரை எடுத்துப்பார்க்க அதில் தொலைந்த மூன்று பெண்களும் 4885 என்ற நம்பரிலிருந்தே அழைக்கப்பட்டிருப்பதை காண்கிறார்.
அந்த நம்பரை தேடிச்செல்கையில் வழியில் ஒருவன் ஜாங் வூவின் காரை இடித்து விடுகிறான். அவனிடம் சண்டையிடும் ஜாங் வூ அவன் போன் நம்பரை கேட்கிறார். தரமறுக்கும் அவன் மேல் சந்தேகம் கொண்டு 4885க்கு அழைக்கிறார். அவன் செல்போன் ஒலிக்க வண்டியை விட்டு இறங்கி ஓடுகிறான். அவனை விரட்டிப்பிடிக்கையில் இருவரும் போலிசிடம் மாட்டுகின்றனர். தனது மூன்று பெண்களை அழைத்துச்சென்று வேறு இடத்தில் விற்று விட்டதாக அவன்மேல் குற்றம்சாட்டுகிறார் ஜாங் வூ. விசாரிக்கும் போலிசிடம் தான் மூன்று பெண்களையும் விற்கவில்லை எனவும் கொன்று விட்டதாகவும் மேலும் இதுவரை பன்னிரென்டு பெண்களை கொன்றிருப்பதாகவும் அவன் கூறுகிறான்.
எங்கு தேடியும் அவன் கொன்றதாக கூறிய பெண்களின் சடலம் கிடைக்காததால் போலிஸ் அவனை விட்டுவிடுகிறது. இதனை நம்பாமல் அவனை பின் தொடர்கிறான் ஜாங் வூ. இதன்பின்னர் என்ன ஆனது என்பதை சேஸர் என்ற இந்த கொரிய திரைப்படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
இதுவரை வந்த எல்லா சைக்கோ த்ரில்லர் திரைப்படங்களிலும் கொலைகாரன் கட்டக்கடைசியில் தான் தன் முகத்தை காட்டுவான். அதை வைத்துதான் பார்வையாளர்களை பரபரப்பாக பல்லைகடிக்க வைப்பார்கள். ஆனால் இந்த படத்தில் அதற்கு நேர் எதிராக ஆரம்பத்திலேயே கொலைகாரன் போலிசிடமே மாட்டிக் கொள்வான் இருந்தாலும் படபடப்பாய் நம்மை பார்க்க வைப்பது இதன் நேர்த்தியான திரைக்கதைதான். இன்றைய காலகட்டத்தில் ஹாலிவுட்டை விட தரத்தில் சிறந்த படங்களை கொடுப்பது கொரியாதான். இருந்தாலும் ஹாலிவுட் அளவிற்கு யாராலும் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாய் படம் எடுக்க முடியாவிட்டாலும் நல்ல திரைப்படத்திற்கு பணம் ஒரு பொருட்டல்ல என்பதற்கு இந்த படமும் ஒரு உதாரணம்.