Tuesday, August 22, 2017

INFINITY WAR


கார்டியன் ஆஃப் த கேலக்ஸி வால்யூம் 2 படத்தோட முடிவும் தோர் ராக்னரோக் படத்தோட முடிவும் சந்திக்கிற இடத்தில்தான் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படம் ஆரம்பிக்குது. இது தான் அவெஞ்சர்ஸ் படங்களின் கடைசி. கடந்த பத்து வருடங்களில் பதினாறு படங்கள் வந்தது இந்த முடிவை நோக்கித்தான்.
ப்ளானெட் ஹல்க்னு ஒரு அனிமேஷன் படம் இருக்கு ( தமிழ் டப்பிங்ளையும் இருக்கு) அந்த படத்தோட கதையையும் தோரோட கதையையும் கலந்து எடுத்ததுதான் இப்ப வரப்போர தோர் ராக்னரோக்.
ஒகே அது என்ன இன்ஃபினிடி வார்?
இந்த பிரபஞ்சத்தில் இன்ஃபினிடி ஸ்டோன்ஸ் எனப்படும் சக்திவாய்ந்த ஆறு கற்க்கள் இருக்கு.
1. ஸ்பேஸ் ஸ்டோன் - தோர், கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் படங்களில் வரும் டெசரக்ட் தான் இது. பல உலகங்களை இனைக்கும் வாசலா இது பயன்படும். இப்போதைக்கு இது அஸ்கார்டில் பத்திரமா இருக்கு.
2. மைண்ட் ஸ்டோன் – யார் மனதை வேண்டுமானாலும் மாற்றக்கூடியது. லோகியோட மந்திரக்கோளில் இருக்கும். இப்ப விஷனோட நெற்றியில் இருக்கு.
3. ரியாலிடி ஸ்டோன் – தோர் டார்க்வேல்டு படத்தில் வரும் ஈதர் எனப்படும் ஒரு திரவ வடிவ வஸ்து தான் இது. கலெக்டரோட மியூசியத்தில் இப்ப இருக்கு.
4. பவர் ஸ்டோன் – பெயருக்கு ஏத்த மாதிரி அதீத சக்தியை கொடுக்கக்கூடியது. கார்டியன் அஃப் த கேலக்ஸி முதல் பாகத்தில் வரும். இப்ப ஸாண்டர் கிரகத்தில் நோவா கார்ப்பின் பாதுகாப்பில் இருக்கு.
5. டைம் ஸ்டோன் – இத வச்சிருந்தா காலத்துக்குல்லையே புகுந்து விளையாடலாம். டாக்டர் ஸ்ட்ரேஞ்சின் டாலரான ஐ அஃப் அகமோட்டோவிற்குள் இருப்பது இது தான். இப்ப நேபாளத்தில் உள்ள காமர் தாஜ்ல இருக்கு.
6. சோல் ஸ்டோன் – இது எங்க இருக்குனே தெரியல. இனிமே வரப்போர தோர் ராக்னரோக், பிளாக் பந்தர், அவெஞ்சர் இன்ஃபினிடி வார் பாகம் 1, ஆண்ட்மேன் அன் த வாசப், கேப்டன் மார்வெல் படங்களில் ஏதேனும் ஒன்றில் வரும்.
இந்த ஆறு கற்களுமே தனித்தனியே சக்தி வய்ந்தது. இந்த ஆறு கல்லுமே ஒரே ஆளுகிட்ட இருந்து அவனுமே ஒரு எமதர்மனுக்கு நிகரானவனா இருந்தா என்ன ஆகும்? அது தான் இன்ஃபினிடி வார்.
தனோஸ் என்பவன் தான் மார்வெல் உலகத்தின் சக்திவாய்ந்த வில்லன். இவனை கார்டியன் ஆஃப் த கேலக்ஸி முதல் பாகத்தில் பார்க்கலாம். இவனிடம் இன்ஃபினிடி கன்லெட்னு ஒரு கையுறை இருக்கு. அதுல ஆறு கல்லையும் பதித்து அதன் மூலம் அவெஞ்சர்ஸோட மோதுவான். தனோஸிடம் பிளாக் ஆர்டர்னு நான்கு நபர்கள் உண்டு. அவர்களைக்கொண்டு இந்த கற்களையெல்லாம் கைப்பற்றுவது தான் இன்ஃபினிடி வார் முதல் பாகத்தில் நடக்கப்போகிறது. அதில் சிலர் இறக்கலாம். ஏன்னா மைண்ட் ஸ்டோன் வேனும்னா விஷன கொன்னா தான் எடுக்க முடியும். இதுக்கு அப்புறம் நடக்கின்ற போர் தான் இரண்டாம் பாகமா இருக்கலாம் என்பது என்னோட கனிப்பு.
ஸ்பைடர் மேன் ஹோம் கமிங் படத்தில் ஒரு புது சூட்ட அயர்ன் மேன் காட்டுவாரே அந்த சூட்ட போட்டுகிட்டுதான் இந்த படத்தில் ஸ்பைடர் மேன் வருவார். சிவில் வாருக்கு அப்புறம் தலைமறைவான கேப்டன் அமெரிக்கா ஒரு புது தோற்றத்தில் வருகிறார். இது எல்லாம் உனக்கு எப்புடி தெரியும்னு கேக்குரிங்களா? யுடியூபில் ட்ரைலர் லீக் ஆகிருக்கு போய் பாருங்க.
இந்த இன்ஃபினிடி வார் இரண்டாம் பாகத்தோட மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 22 படங்கள் அடங்கிய Phase 3 முடிவுக்கு வருது. இதுக்கு அப்புறம் Phase 4னு எடுக்கலாம். ஏன்னா டாக்டர் ஸ்ட்ரேஞ், பிளாக் பாந்தர் படங்களின் பாகங்கள் பாக்கி இருக்கு. இவங்களை போலவே யுனிவர்சல் பிக்ஸர்சும் மான்ஸ்டர் யுனிவர்ஸ் (கிங்காங்,காட்ஸில்லா, டைனோசர்ஸ்), டார்க் யுனிவர்ஸ்னு ( மம்மி, இன்விசிபில் மேன், ஃபிராங்கன்ஸ்டைன்) வரிசையா படங்களை ரிலீஸ் பன்ன போறாங்க. இதுக்கு போட்டியா டிசியும் ஜஸ்டிஸ் லீக் மூலமா போர் தொடுக்க போறாங்க தயாரா இருங்க

Friday, July 21, 2017

Dial M for Murder


க்ரைம் த்ரில்லர் படங்களில் பொதுவா இரண்டு வகைதான் இருக்கு. ஒன்னு கொலைகாரன முன்னாடியே காட்டிடுவாங்க. அவன் எப்படி மாட்டிக்கிறான் என்பதுதான் படமே. இரண்டாவது வகை கொலைகாரன் யார்னு கண்டுபிடிக்குறது. எனக்கு பிடிச்சது இரண்டாவது வகை.

டோனி ஒரு டென்னிஸ் பிளேயர். அவரோட மனைவி மார்கோ. பெரிய கோடிஸ்வரி. அவங்க சொத்தையெல்லாம் கனவர் பேர்ல எழுதி வச்சிடுராங்க. டோனி பொறுப்பில்லாம சுத்திகிட்டே இருப்பதனால மார்கோ தனது பழைய கல்லூரி நண்பனான மார்க் ஹாலிடே என்பவர காதலிக்கிறாங்க. அவர் ஒரு மர்மக்கதை எழுத்தாளர். இந்த கள்ளக்காதலை தெரிஞ்சிகிட்ட டோனி மார்கோவ கொல்ல நினைக்கிறார். ஒரு லோக்கல் ஆசாமிய கூப்பிட்டு திட்டம் போடுகிறார். அதன்படி டோனியும் காதலன் மார்க் ஹாலிடேவும் ஒரு பார்ட்டிக்கு போய்டுவாங்க. கொலைகாரண்ட்ட வீட்டு சாவிய தருகிறார். அவன் வீட்டுக்குள் வந்து ஒழிஞ்சிக்கனும். நைட் பதினோரு மணிக்கு ஃபோன் வரும் அதை எடுக்கவரும் மார்கோவ கொன்னுட்டு அந்த ஃபோனை கொலைகாரன் எடுக்கனும் இதுதான் திட்டம்.

அந்த நாளும் வருது.
டோனியும் மார்க்கும் பார்ட்டிக்கு போறாங்க.
கொலைகாரன் வீட்டுக்குள் ஒழிஞ்சிக்கிறான்.
சரியா பதினோரு மணி.
ஃபோன் அடிக்குது.
மார்கோ ஃபோன எடுக்க வருகிறாள்.
ஆனா அங்கு நடப்பது…..

அது என்னனு படத்தில் பாருங்க. 1954ல் எடுத்த படம் 63 வருடம் கழித்தும் நம்மை சஸ்பென்ஸின் உச்சிக்கே கொண்டுபோக முடியுமா? அது ஒருவரால் முடியும். அவர் பெயர் ஆல்ஃபிரட் ஹிட்ச்சாக்.
இந்த படத்தை 1998ல எ பெர்ஃபெக்ட் மர்டர்னு மைக்கேல் டக்ளஸ் நடிச்சி ரீமேக் பன்னிருக்காங்க. ஹிந்திலையும் கொத்துகறி போட்டுருக்காங்க. நாம மட்டும் என்ன இளிச்ச வாயலுவா? நம்ம பங்குக்கு சத்தியராஜ் நடிப்புல சாவி-னு எடுத்துருக்கோம்.


ஹிட்ச்சாக்கோட படங்களில் தி பேர்ட்ஸ், நார்த் பை நார்த் வெஸ்ட், ரியர் விண்டோ பார்த்துருக்கேன் ஆன இந்த படம் வேற லெவல். படத்தில் ஹிட்ச்சாக்கும் ஒரே ஒரு காட்சியில் வருகிறார். நல்ல தமில் டப்பிங்லையே இருக்கு, பாருங்க.

Sunday, July 9, 2017

Spiderman Homecoming



1977லிருந்தே அந்த அந்த காலத்துக்கு ஏத்தமாதிரி ஸ்பைடர்மேன் திரைப்படங்கள் எடுத்துகிட்டுதான் இருக்காங்க. பிரபல பேய்க்கதை மன்னன் சாம் ரெய்மி எடுத்த ஸ்பைடர்மேன்தான் உலகம் முழுக்க ஸ்பைடர்மேன கொண்டுபோனது. எனக்கு பர்ஸ்னலா பிடிச்ச ஒரு சூப்பர்ஹீரோவும் ஸ்பைடர்மேன் தான். அதுவரைக்கும் கிழவர்களால் நிரம்பிவழிந்த சூப்பர்ஹீரோ ஏரியால டீன் ஏஜ் பசங்களுக்காக ஒரு டீன் ஏஜ் ஹீரோவாகவே உருவாக்கப்பட்டவன் தான் ஸ்பைடர்மேன். ஸ்பைடர்மேன நமக்கு இன்னும் நெருக்கமா காட்டியது 2012ல் வந்த அமேஸிங் ஸ்பைடர்மேன் தான். இத்தனை படங்களில் அவரோட பின்னனிய சொல்லிட்டதால இந்த ஹோம் கமிங் படத்தில் நேரடியா அவர் அவஞ்சர்ல சேருவதைப்பற்றி மட்டும் எடுத்துருக்காங்க. அதனால வில்லனோட பின்னனிலேருந்து படத்த ஆரம்பிச்சிருக்காங்க.

முதலில் இந்த படத்தோட பெயரே ஒரு காரணப்பெயர்தான். ஸ்பைடர்மேன் கதாபாத்திர உரிமை சோனி நிறுவனத்திடமிருந்து மீண்டும் மார்வெலுக்கே வந்திருப்பதுகூட ஒரு ஹோம்கமிங்தான். இந்த படத்துல முதலில் எனக்கு பிடிச்சது அவரோட சூட். அதுல இல்லாத அம்சங்களே இல்லை. ஸ்பைடர்மேனோட ஆயுதமே அவரோட வலைதான்  அத இந்த படத்தில் கச்சிதமா காட்டி இருக்காங்க. ஸ்பைடர்மேனோட ஆர்வக்கோளாரினால் ஒரு விபத்து ஏற்படுது அதனால கடுப்பான அயர்ன்மேன் இந்த சூட் இல்லனா நீ ஒரு வேஸ்டுனு சொல்லி அவர் தயாரிச்சி கொடுத்த ஹைடெக் சூட்ட புடிங்கிட்டு போய்டுரார். அந்த சூட் இல்லனாலும் தான் ஒரு ஸ்பைடர்மேன்தானு நிரூபிக்கிறதுதான் இந்த படம். ஏற்கனவே பல படங்கள்ல பிரமாண்டமான சண்டைகாட்சியலாம் பார்த்துட்டதால இந்த படத்தோட சண்டைகாட்சி ரொம்ப சாதாரணமா இருக்கு. மத்தபடி மார்வெலுக்கே உரிய ஜாலியான காட்சிகள் நிறைய இருக்கு. ஒரு மார்வெல் ரசிகனா எனக்கு படம் பிடிச்சிருக்கு ஆனா எல்லாருக்கும் பிடிக்கும்னு சொல்லமுடியாது.

இந்த படத்துல 2 போஸ்ட் க்ரடிட் காட்சிகள் இருக்கு. முதல் காட்சில வருபவந்தான் அடுத்தபாக வில்லனான ஸ்கார்ப்பியன். அடுத்த கட்சில வருபவர் கேப்டன் அமெரிக்கா. இவர செமையா ஓட்டிருக்காங்க.

அப்புறம் இந்த படத்தில் கடுப்பகெளப்புன இன்னொரு விசயம் எதிர்மறை வார்த்தை கொண்ட தமிழ் டப்பிங். உதாரனமா “ நீ ஒரு கொழந்த தான்” அப்புடினு சொல்றத  நீ ஒன்னும் கெழவன் இல்லனு டப் பன்னிருக்காங்க. ட்ரைலர்லையே நல்லா டப் பன்னிருப்பாங்க.       



     

Monday, May 29, 2017

Pirates of the Caribbean: Dead man tell no Tales (2017)



ஹென்றி டேனர் தன் அப்பாவான வில்லியம் டேனர ஃபிளையிங் டச்மேன் கப்பலின் சாபத்திலிருந்து மீட்பதற்கு தேவையான பொசைடனின் சூலத்த அடைவதற்கு ஜாக் ஸ்பேரோவின் உதவிய தேடி போராரு. ஜாக் ஸ்பேரோவுக்கும் தன்னை கொள்ள துரத்திக்கிட்டு இருக்கும் பேயாய் மாறிய கேப்பிடன் ஸலசாரிடமிருந்து தப்பிக்க அந்த சூலம் தேவைப்படுது. கரீனா என்ற பெண்னுக்கும் தன்னோட தொலைந்துபோன அப்பா கொடுத்துட்டு போன ஒரு டைரிய வச்சி அந்த சூலத்த தேடுறாங்க. கேப்டன் பர்போசாவும் உயிர காப்பாத்திக்க அந்த சூலத்த தேடி போராரு. இதுல யாருக்கு சூலம் கிடச்சிது யார் என்ன ஆனாங்கனு தெரிஞ்சிக்க படத்த பார்க்கனும்னு அவசியம் இல்ல நீங்க வெரித்தனமான பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் ரசிகரா இருந்தா இன்னேரம் கண்டுபிடிச்சிருப்பீங்க.

முதலில் இந்த படத்துல புதுசா எதுவுமே இல்ல.( அப்ப எல்லாமே செகனாண்டா? அந்த பொண்னு? அதோட….?) அதே பார்த்த பழைய காட்சிகள். முதல் இரு பாகங்களையும் கலந்து எடுத்துருக்காங்க. 4வது பாகத்துலையாவது கடல் கன்னி இருந்துச்சி. இந்த சீரிஸ்லையே முதல் மூனு பாகம்தான் அட்டகாசமா இருக்கும். எல்லா தொடர் பாகங்களுக்கும் வரும் பிரச்சனதான் இந்த படத்துக்கும். ஒரு கட்டத்துக்குமேல் போர் அடிக்க ஆரம்பிச்சிடும். இதோட இந்த சீரிஸ நிறுத்திடலாம். அதுதான் நமக்கு நல்லது.

இந்த படங்களில் வரும் கார்ட்டரோட கிளி, குரங்கு, வழுக்க மண்டையனும் மரக்கண்ணனும், குள்ளன், மாஸ்டர் கிப்ஸ் இவங்க எல்லாருமே சின்ன கேரக்டர்தான் ஆனா அவங்களுக்கே உறிய தனித்தன்மையான காட்சிகள் மூலம் மறக்கவே முடியாத அளவுக்கு அவங்களோட கேரக்டர் உருவாக்கம் இருக்கும். அதைப்போல இந்த படத்தில் எந்த காட்சியும் இல்லை.

எல்லா பாகங்களிலுமே ஜாக் ஸ்பேரோவின் அறிமுக காட்சி எனக்கு ரொம்ப பிடிக்கும் குறிப்பா மூன்றாம் பாகம் அட்டகாசம் ஆனா இதுல நீங்களே பாருங்க.

பயங்கர எதிர்பார்ப்போட போனிங்கனா ஏமாற்றம் நிச்சயம். ஜானி டெப் அடுத்து நடிக்கப்போர த இன்விஸிபில் மேன எதிர்பார்க்கலாம்.


படத்துல ஒரு போஸ்ட் கிரடிட் சீன் இருக்கு அதுல மறுபடியும் ”அவரே” வருவாரு.


Wednesday, May 3, 2017

Guardians of the Galaxy vol.2



நிறைய உலகங்களை ஆக்கிரமித்துக்கொண்டுவரும் ஒரு தீயசக்தி(!?) பூமியையும் ஆக்கிரமிக்க வருது.( நான் pjpயையோ மோடியையோ சொல்லவில்லை). அது கிட்டேருந்து பூமியை எப்படி Guardians of the Galaxy காப்பாத்துறாங்க என்பதுதான் இந்த படத்தோட கதை.

அந்த தீயசக்தி எதுனு படத்த பார்த்து தெரிஞ்சிக்கங்க. படத்தோட முக்கியமான ட்விஸ்டும் அதுதான், கதாநாயகன் பீட்டர் க்வில்லோட பிறப்பின் ரகசியமும் அதுதான்.

இது காமெடி அதிகம் உள்ள ஒரு ஜாலியான ஆக்‌ஷன் படம். இந்த படத்துல உங்கள முதல்ல கவர்வது பேபி க்ரூட் தான். படு சீரியசான நேரங்களில் இது பன்னும் முட்டாள்தனமான சேட்டைகளையெல்லாம் லேடிஸ் காலேஜ் வாசல்ல கடை வச்சிருப்பவன் மாறி பார்த்துக்கிட்டே இருக்கலாம். இந்த பேபி க்ரூட்டே அடுத்த பாகத்திலும் வந்தா நல்லாருக்குமேனு நினைக்கும்போதே படத்தோட மூனாவது போஸ்ட் க்ரடிட் சீன்ல வளர்ந்த டீன்ஏஜ் க்ரூட்ட காட்டி கடுப்பேத்திடானுங்க.

அடுத்தது ராக்கெட். இது ஒரு ஹைபிரிட் நரி. இப்படி மட்டும் யாராவது அதுக்கு முன்னாடி சொல்லிட்டா போதும் கொலைவெரி கொள்ளும். ராக்கெட்டோட திமிரான கேரக்டருக்கு ப்ரட்லி கூப்பரோட நக்கலான குரல் தேர்வு கணக்கச்சிதம். ராக்கெட், கொள்ளைகூட்ட தலைவனான யாண்டு மற்றும் போபி க்ரூட் இவங்க காம்பினேஷன்ல செமத்தையான காட்சிகள்லாம் படத்தி உண்டு. ராக்கெட்டா மோஷன்கேப்சர்ல நடிச்ச நடிகர் ஷீன் கன் தான், யாண்டுவோட அஸிஸ்டெண்டா மற்றொரு கதாபாத்திரமா நடிச்சிருக்காரு. இவருக்கு இந்த படத்தின் மூன்றாம் பாகத்தில் ஒரு முக்கிய இடம் உண்டு.

கர்ட் ரஸல் இந்த படத்தில் பீட்டர் க்வில்லோட தந்தையா நடிச்சிருக்காரு. பார்ப்பதற்கு மோஸஸ் மாறியே (டென்கமான்மெண்ட்) இருக்காரு. ஒரு குட்டி கடவுளாதன் படத்தில் வருகிறார்.  “ நான் ஒரு ஸ்மால் ஜீஸஸ்”னு இவருக்கு ஒரு வசனம்கூட படத்தில் உண்டு. இவரால் புதிய உலகங்களை உருவாக்க முடியும். லிவ்விங் ப்ளானெட்னு இவர சொல்லுவாங்க.

இந்த படத்தில் மூன்று போஸ்ட் க்ரடிட் சீன்கள் இருக்கு.
முதல் சீன்ல, ஸ்டாக்கர் ஒகார்ட் என்ற பாத்திரத்தில் சில்வஸ்டர் ஸ்டலோன் நடிச்சிருக்காரு. இவரும் ஒரு விண்வெளி கொள்ளைக்கூட்ட தலைவர்தான். இவரைப்போலவே இன்னும் நிறைய தலைவர்கள் இருக்காங்க. எல்லாரும் மூன்றாம் பாகத்தில் வரப்போறாங்க.

இரண்டாவது சீன்ல காட்டப்படுவது ஒரு மெஷின். அதைவைத்து பாகுபலி(!?) போன்ற சூப்பர்ஹீரோக்களை உருவாக்கலாம். அதன் முதல் தயாரிப்பு ஆடம் வார்லாக் என்பவன். இவன் மூன்றாம் பாக வில்லனாகவோ அல்லது அவெஞ்சர்ஸ்-இன்ஃபினிட்டி வார் படத்திலோ வரலாம்.


அப்புறம் இந்த படத்தில் ஒரு புதிய கதாபத்திரத்தின் அறிமுகமும் ஒரு முக்கிய கதாபத்திரத்தின் இறப்பும் உண்டு.