Tuesday, May 10, 2016

Capitain America : Civil War


அவெஞ்சர்ஸ் படம் மட்டும் பார்த்துவிட்டு இந்த படத்தை பார்த்தால் நிச்சயம் உங்களுக்கு படம் பிடிக்காது. குறிப்பா விண்டர் சோல்ஜர் படத்தோட தொடர்ச்சிதான் இந்த படம். பக்கி பான்ஸ் என்பவன் யார், அவனுக்கும் கேப்டன் அமெரிக்காவிற்கும் உள்ள உறவு என்ன என்று தெரிந்தால்தான் படத்தை முழுதும் ரசிக்கமுடியும். கேப்டன் அமெரிக்கா ஃபர்ஸ்ட் அவெஞ்சர் படம் ஹிட் ஆகலனாலும் 2014ல இதன் இரண்டாம் பாகமான விண்டர் சோல்ஜர், ரூஸோ பிரதர்ஸ் ( அந்தொனி ரூஸோ & ஜொய் ரூஸோ ) இயக்கத்தில் வெளிவந்து பெருவெற்றி பெற்றது. இது வழக்கமான சூப்பர்ஹீரோ பாணியில் இருந்து விலகி திடிர் திருப்பங்கள் நிறைந்த ஒரு துப்பறியும் கதையைப்போல இருந்தது. அதே ரூஸோ பிரதர்ஸ் தான் இந்த சிவில் வாரையும் அட்டகாசமா இயக்கிருக்காங்க. இவங்க திறமைக்கு கிடைத்த பரிசுதான் 2018 & 2019-ல் வரப்போகும் அவெஞ்சர்ஸ் – இன்ஃபினிடி வார் படங்களை இயக்கும் வாய்ப்பு.

வெறும் அடிதடி மட்டும் இல்லாம சற்றே உணர்வுபூர்வமா எழுதப்பட்ட கதைதான் இந்த சிவில் வார். அதனாலதான் கேப்டன் அமெரிக்கா படங்களிலேயே இது சிறந்த படமா இருக்கு.

இதுக்கு முன்னாடி வந்த படங்களில் எல்லாம் அவெஞ்சர்ஸ், பொதுமக்கள் பலரை காப்பாற்றினாலும் சிலர் அவர்களால் இறந்துடுறாங்க. அதனால அவெஞ்சர்ஸ் இனிமே ஐ.நா. சபைக்கு கட்டுப்பட்டுதான் நடக்கனும்னு ஒரு தீர்மானம் போடுறாங்க. அதுக்கு டோனி ஸ்டார்க், பிளாக்விடோ, விஸன் இவங்களாம் ஒத்துக்கொண்டு கையெழுத்து போடுறாங்க. ஆனா, மக்களை காப்பாத்துறதுக்கு நாம எதுக்கு இந்த வெண்ணைங்ககிட்ட அனுமதி வாங்கனும்னு கேப்டன் அமெரிக்கா இதை எதிர்க்கிறார். இதற்காக கூடும் உலக நாடுகள் சபையில் குண்டு வெடித்து நிறைய தலைவர்கள் இறந்துடுறாங்க அதுல வகாண்டா என்ற ஆப்ரிக்க நாட்டு அரசர் டி’ச்சக்காவும் ஒருத்தர். இந்த குண்டுவெடிப்புக்கு காரணமான பக்கி பான்ஸ அரசாங்கம் கைது பன்னவும், டி’ச்சக்காவோட மகனான இளவரசன் டி’ச்சல்லா ( பிளாக் பந்தர் ) பழிவாங்கவும் வர்றாங்க. பக்கி பான்ஸ பிடிக்க அயர்ன்மேன் டீமும், பக்கிய காப்பாற்ற கேப்டன் அமெரிக்கா டீமும் களத்தில் குதிக்க, அப்புறம் என்ன ஆகுதுனு படத்த பார்த்து தெரிஞ்சிகங்க.

இந்த படத்துல புதுச அறிமுகம் ஆகுற இரண்டுபேர்ல ஒருத்தர் பிளாக் பந்தர். வகாண்டா நாட்டு அரசர். இவர் நாட்டுல மட்டும்தான் வைப்ரேனியம் என்ற வஸ்து கிடைக்குது. இதனால் செய்யப்பட்டதுதான் இவரோட பிளாக்சூட், கேப்டன் அமெரிக்காவோட கேடயம், விஸனோட உடல். பிளாக் பந்தரோட முக்கியமான எதிரியன யுலிஸிஸ் க்ளா ஏற்கனவே அவெஞ்சர்ஸ் ஏஜ் ஆஃப் அல்ட்ரான்லையே அறிமுகம் ஆகிட்டதால 2018ல வர்ற பிளாக் பந்தர் படத்த பார்த்தா மட்டும் போதும்.

இரண்டாவதா அறிமுகம் ஆகிறவர் நமக்கு நல்லா தெரிஞ்ச பீட்டர் பார்க்கர். ( என்னாது பீட்டர் யாரா? இதுக்குமேல நீங்க படிக்கவே வேண்டாம்) வர்ற எல்லா சீன்லையும் கைதட்டல் வாங்குற ஒரே ஹீரோ இவர்தான். இவர அயர்ன்மேன் சண்டைக்கு கூப்பிடும்போது, ஹோம் ஒர்க் இருக்கு நான் வரலனு சொல்ற இடம்லாம் செம. இவரோட புது சூட்ட அயர்ன்மேன் தான் உருவாக்கி தருகிறார். பீட்டரோட அடுத்த படமான ஸ்பைடர்மேன் – ஹோம் கமிங்க ஆவலோட எதிர்பார்க்கலாம்.

இந்த படத்துல கொஞ்சம்கூட எதிர்பார்க்காம உங்கள ஆச்சர்யபடுத்தும் அடுத்த ஆத்மா ஆண்ட்மேன் தான். எப்படினு படத்தில் பாருங்க.

சகட்டுமேனிக்கு எல்லாரும் இருக்குற இந்த படத்துல தோரும் ஹல்க்கும் இல்லாம எங்க போனாங்க. அத தெரிஞ்சிக்க யு டியூப்ல Thor : Ragnarok –னு தேடி பாருங்க.

இனிமே வரப்போற
Doctor strange(2016)
Guardians Of the Galaxy-2(2017)
Antman and wasp(2018)
Capitain Marvel(2019)

எல்லா படத்தையும் பாருங்க. அப்பதான் இவங்க எல்லாரும் ஒன்னா சேரப்போற பிரமாண்ட போரான அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார் ஏன்னு புரியும்.


1 comment: