எதிரிகள் சுற்றிவளைத்து
சுட்டுக்கொண்டிருக்கும்போது, ஹீரோ பேண்டுக்குள்ள கையவிட்டு தனது வெள்ளை நிற ஜட்டியை
கிழித்து எடுத்து “சமாதானம்” என்று ஜட்டியை ஆட்டினால் எப்படி இருக்கும்?
அப்படிதான் இருக்கும்
இந்த படம் முழுவதும்.
நக்கல், நையாண்டி,
குசும்போட ஒரு சூப்பர் ஹீரோ படம் பார்த்திருக்கீங்களா?
இல்லை, இல்லை இது
ஒரு சூப்பர் ஹீரோ படம் இல்லை ( இது படமே இல்லை). “ நான் சூப்பரா இருக்கலாம் ஆனா ஹீரோ
இல்லைனு” அவரே சொல்லுவாரு. இந்த படத்துல உங்களோடத(!), மன்னிக்கவும், உங்கள தூக்கி நிறுத்துவது
இதன் வசனம் தான். ஹீரோ பேசுவாரு பேசுவாரு பேசிகிட்……………………………………………………………………………………………………………………………டே
இருப்பாரு. ஆனா ஆக்ஸன் காட்சிகளிடையே குபீர் சிரிப்ப வரவழைக்கும்படி ஒரு நிமிடம்கூட
அலுக்காத அளவிற்கு வசனம் இருக்கும். இயக்குனர் டிம் மில்லர் நக்கல் மன்னனாதான் இருக்கனும்.
அட்டகாசமா எடுத்திருக்கிறார். அடிப்படையில் இவர் ஒரு கிராஃபிக்ஸ் அனிமேட்டர் என்பதால்
விசுவல் எஃபெக்ட் பக்காவா இருக்கு.
டெட்பூலா நடிச்ச
ரேன் ரெனால்ஸ் தான் படம்பூரா எல்லா காட்சிகளிலும் நீக்கமற நிறஞ்சிருக்கிறார். படத்த
ரசிக்க வைக்கிறதும் அவரோட ஸ்கிரின் பிரசன்ஸ்தான். ஒருத்தர் விடாம எல்லாரையும் கலாய்ப்பாரு
நம்மளையும் சேர்த்துதான்.
“ என்ட்ட 12 புல்லட்டுதான்
இருக்கு ஒழுங்கா ஸேர் பன்னிக்கிட்டு செத்துபோய்டுங்க” என்று இவர் அறிமுகமாகும் ஆரம்ப
சண்டைகாட்சிக்கு இடையேதான் தன்னோட கதைய நமக்கு சொல்றாரு. இடைல கட்ஸாட் வை, பாட்டு போடு,
ஸ்பாய்லர் அலர்ட்டுனு இயக்குனருக்கும் சொல்வாரு. இன்னும் பல ரகளை பன்னுவாரு.
ஹீரோவும் ஹீரோயினும்
ரொம்ப நாளா சேர்ந்து வாழ்றாங்கனு காட்டுறதுக்காக ஒரு கட் ஸாட் வரும் பாருங்க, அதுவும்
பல பொஸிசன்களில்……………… ச்சி ச்சி படத்த பார்த்து தெரிஞ்சிகங்க.
என்னது படத்தோட
கதைய சொல்லனுமா? 58மில்லியன்ல தயாரிச்சி 650மில்லியன் தேத்திடிச்சி இதுக்குமேல எதுக்கு
கதை.
அப்புறம் கட்டகடைசியா
போஸ்ட் கிரடிட் சீனுக்காகவே வெய்ட் பன்றவங்களுக்கு ஒரு போஸ்ட் கிரடிட் சீன் இருக்கு
அதுதான் மரண கலாய்.
0 Comments:
Post a Comment