டிசம்பர்மாத குளிருடன் கிருஸ்துமஸ் வருதோ இல்லையோ பீட்டர் ஜாக்ஸனின் படம் வெளிவந்து என்னையும் என் கண்ணையும் எப்போதும் குளிரூட்டத்தவறுவதே இல்லை. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே பதினோரு மாதங்கள் நான் காத்திருந்தது இதோ இழுத்துப்பேர்த்திக்கொண்டு இப்படி டைப்பன்னி மொக்கை போட்டு உங்களை கொல்வதற்காக மட்டுமல்ல, ஒரு அருமையான திரைப்படத்திற்காகவும்தான். வரும் 13ம் தேதி வெளிவரவிருக்கும் பீட்டர் ஜாக்ஸனின் த ஹாபிட் : டிஸோலேசன் ஆஃப் ஸ்மிக் தான் அது.
அப்படி அந்த படத்துல என்னதான்யா இருக்கு? லார்ட் ஆஃப் த ரிங்ஸ் மற்றும் ஹாபிட் படங்களின் மைய கதையே சுவாரஸ்யமான அட்வெஞ்சர் பயணம்தான். அதனூடே பல்வேறு சித்திர விசித்திர மனிதர்கள், விலங்குகள், தேவதைகள், நாடுகள் ராஜியங்கள், ராஜா ராணிகள்(இதில் ஒருமை பன்மையை கவணிக்கவும்), மந்திர தந்திர வித்தைகள் என பல சுவைகளை கலந்த பஞ்சாமிர்த கதையாய் எழுதியதுதான் ஜே.ஆர்.ஆர். டோல்கினின் திறமையே. ஒரு நாவலை எப்படி திரைப்படமாக எடுக்கவேண்டும் என எடுத்துக்காட்டி உதாரணமாக்கியவர் இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன்.
இந்த ஹாபிட்டின் முதல் பாகத்தை நான் சேலம் சங்கீத் தியேடரில் பார்த்துவிட்டு அந்த கற்பனை உலகைவிட்டு வெளிவர மனமில்லாமல் தியேடரைவிட்டு கடைசி நபராக வெளிவந்ததும், அடுத்த வாரமே மீண்டும் காணவந்து படம் தூக்கப்பட்டு நொந்து சென்றதும் பிஹைன்ட் த ஸ்க்ரீன். இதுவரை வந்த அணைத்து படங்களும் 24fps அதாவது ஒரு நொடிக்கு 24 ஃபிரேம்கள் என்ற விகிதத்தில் எடுக்கப்பட்டவை. ஆனால் இந்த ஹாபிட் சீரிஸ் மட்டும் முதன்முறையாக 48fps என்ற விகிதத்தில் எடுக்கப்பட்டவை. இதனால் காட்ச்சிகளில் தெளிவும் கிராஃபிக்ஸில் துல்லியமும் அதிகரிக்கும். இந்த படத்தை அதன் ஒரிஜினல் 48fps ல் ஐமேக்ஸ் திரையரங்கில் 3D ல் பார்த்தால் ஒரு திரைப்படம் கொடுக்கக்கூடிய உச்சபட்ச்ச சந்தோசத்தை அடைவீர்கள். சென்னையில் கூட 48fpsல் ஓடும் திரையரங்குகள் உண்டு. எப்படியிருந்தாலும் என்னால் இம்முறை பார்க்கமுடியாது எனவே எனது 2014 புது வருட தீர்மானமே இதன் மூன்றாம்பாகமான The Hobbit :There and back again படத்தை அடுத்த டிசம்பரில் ஐமேக்ஸ் 3Dல் பார்ப்பதுதான்.
ஜாக்ஸனின் இயக்கத்தில் 2016ல் வெளிவர இருக்கும் The Adventures of Tintin:
Prisoners of the Sun படமும் இப்போதே என் எதிர்பார்ப்பில் வந்துவிட்டது
Saturday, December 7, 2013
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by a blog administrator.
ReplyDelete