Friday, December 20, 2013

Kill Bill - பழிவாங்கும் கலை

அது ஜப்பானில் உள்ள ஒரு விடுதி.

  "ஓ-ரென்-ஸ்சி ஏன் ஒளிஞ்சிருக்க ? வெளிய வா!"  எனும் காட்டு கத்தலை கேட்டு ஓ-ரென்-ஸ்சி என்ற பெண்மனி தனது படை பரிவாரத்துடன் வெளியே வந்து பார்க்கிறாள். எதிரே மரணபீதியுடன் நிற்கும் ஒரு பெண்னின்(செம ஃபிகரு)  கை வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுகையில் அவளின் பின்னால் இருந்து ஒரு உருவம் கையில் ரத்தம் சொட்டும் கத்தியுடன் வெளிப்படுகிறது. படு துள்ளலான ராப் இசை பின்னனியில் ஒலிக்க கொலைவெறியுடன் நடந்துவரும் அந்த உருவம் ஒரு பெண். அவள் பெயர் பிரைட். அவளை கண்டு மொத்த கூட்டமும் ஓட்டமெடுக்க அதன்பின்னர் ஓ-ரென்-ஸ்சிகும் பிரைடிற்கும் பெரும் யுத்தம் துவங்குகிறது.

இப்படிப்பட்ட ஒரு காட்சி கில்பில் என்ற படத்தின் முதற்பாகத்தில் கடைசி இருபது நிமிடங்களுக்கு முன் வரும். இதைப்போன்ற மிக அட்டகாசமான ஒரு கெத்தான  சீனை நான் ரஜினி படத்தில்கூட பார்த்ததில்லை. முதலில் இந்த படத்தோட இயக்குனர் க்வன்டின் டரன்டினோவை பற்றி பார்த்து விடுவோம் இல்லனா வண்டி வண்டியா திட்டுவாரு.

1990களில் ஹாலிவுட்டை கைப்பற்றி இன்றுவரை தனது வித்யாசமான திரைப்படங்களால் ஆட்சி செய்பவர். தனது இரண்டாவது படமான பல்ப் ஃபிக்சனிற்காக ஆஸ்கர் வாங்கியவர். வாய்நிரைய கெட்டவார்த்தை திரை நிரைய ரத்தம் இவை இரண்டும் இல்லாமல் க்வன்டின் படமே எடுக்கமாட்டார். திரையில் இருவர் பேசிக்கொண்டால் அது எவ்வளவு கடினமான பெரிய வசனமாக இருந்தாலும் பேசுபவரை விட்டுவிட்டு கேட்பவரைத்தான் திரையில் காட்டுவார். அதுவும் வசனம் எழுதுவதில் இவர் ஒரு கில்லாடி. பெரும்பாலும் காட்சிக்கும் பேச்சிற்கும் சம்பந்தம் இல்லாமலும் டார்க் ஹியூமரிலும் வசனம் இருக்கும்.

ஒரு சிறிய உதாரணம் இந்த  கில்பில்-ன் ஆரம்ப காட்சி.
கதாநாயகி பிரைட் மரணஅடி வாங்கி உயிருக்கு போராடும் நிலையில் ஒரு கை அவள் முகத்தில் உள்ள ரத்தத்தை பரிவுடன் கர்சிஃப்பால் துடைத்துக்கொண்டே மிகவும் அன்பாக அவளுடன் பேசும்.
அந்த உருவம் நமக்கு காண்பிக்கப்படுவதில்லை. ஆனால் அடுத்த நொடி பிரைட் அந்த கையால் கொல்லப்படுவாள் இந்த காட்சியில் உள்ள முரணை கவணித்தால் க்வன்டினின் மேதமை தெரியும். அவளை கொல்ல வந்த கை எதற்காக அவளது முகத்தை துடைத்துவிட வேண்டும்?.
எல்லா இயக்குனர்களும் அரைத்த மாவையே அரைத்தாலும் அதே மாவை க்வன்டினிடம் கொடுக்கும்போது அதில் சாதா தோசைக்கு பதில் சுவையான மசால்தோசை சுடுவதுதான் க்வன்டின் டரன்டினோவின் திரைக்கதை திறமை. இனி படத்தின் கதை ( அப்ப இன்னும் முடியலையா...)

ஒரு ஊர்ல (எல்லா கதையும் இப்படிதான ஆரம்பிக்கும்) டெட்லி வைபர் அஸஸின் ஸ்குவாட் என்ற கொலைகார கும்பல் ஒன்று உண்டு. இதன் தலைவன் பெயர் பில். அதில் கைதேர்ந்த கொலைகாரிதான் பிரைட். அவள் மனம் திருந்தி வாழ தனது கூட்டத்தைவிட்டு விலகி செல்கிறாள். இது பிடிக்காத பில்லும் அவன் கும்பலும் பிரைடை போட்டுத்தள்ள, சாவிலிருந்து மீண்டு வந்து எப்படி பழிவாங்குரானு தொரிஞ்சிக விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் படத்தை பாருங்கள். பழிவாங்குதலை ஒரு கலையைப்போல் எடுத்திருப்பார். முதலில் ஒரே பாகமாக வரவேண்டியது நான்கு மணி நேரத்திற்கு மேல் ஓடக்கூடியதால் இரு பாகமாக வெளியிட்டனர்.

இது சம்பவங்கள் முன்னும் பின்னும் மாறி மாறி காட்டப்படும் நான்லீனியர் திரைப்படம்.
இருந்தாலும் இரு பாகமும் தெளிவாக புரியும். க்வன்டினோட டிரேட்மார்க்கே திரைப்படத்தை ஒரு நாவலைப்போல் அத்யாயமாக பிரித்து அதற்கும் தலைப்பு வைத்து எடுப்பதுதான். க்வன்டின் ஒரு பழைய ராப் இசை ரசிகர் அதனால்தான் இவரது எல்லா படங்களிலும் பின்னனியில் ராப் பாடல்களை ஒலிக்கச்செய்வார் அது இந்த படத்திலும் பட்டையை கிளப்பியிருக்கும்.
இந்த படத்தின் நாயகி உமா த்ருமேன் நல்ல அழகிதான் இருந்தாலும் இந்த படம் முழுவதும் இவரது ஆக்ரோசமான அடிதடிதான். ரத்தத்தை பார்த்தால் மயக்கம் போடும் கேசுகளுக்கான படம் இதுவல்ல.

0 Comments:

Post a Comment