ஜூன் 12, 1981ல் அந்த திரைப்படம் வெளியானது. அவர் ஒரு சாதாரண ஹீரோதான் ஆனால் எந்த ஒரு சூப்பர் ஹீரோவுக்கும் சற்றும் குறையாத சிறப்பை அவர் அடையப்போவதை அப்போது யாரும் உணரவில்லை அதன் இயக்குனரான ஸ்பீல்பெர்கும் கூட. அந்த திரைப்படம் Raiders of the Last Ark. இத்தனைக்கும் இந்த கதாபாத்திரத்தை உருவாக்கியவர் ஸ்டார் வார்ஸ் படங்களை இயக்கி புகழ்பெற்றவரான ஜார்ஜ் லூகாஸ்.ஆரம்பத்தில் இக்கதாபாத்திரதிற்கு லூகாஸ் வைத்த பெயர் இண்டியானா ஸ்மித், இது ஸ்பீல்பெர்கிற்கு பிடிக்காததால் பின்னர் மாற்றப்பட்டதே இந்த இண்டியானா ஜோன்ஸ்.
சரி யாருயா இந்தாளுனா ஒரு ஆர்க்கியாலஜி புரபசர். பல்வேறு இனங்களின் நாகரிக வளர்ச்சி பற்றி ஆழ்ந்த ஞானம் உள்ளவர்.இரண்டாம் உலகப்போர் சமயத்தில் CIA-ன் Office of Strategic Services என்ற பிரிவில் பார்ட்டைமாக உளவாளியாகவும் இருப்பவர். கவ்பாய் தொப்பியும் லெதர் ஜாக்கெட்டுடனும் சாட்டையை சுழற்றியபடி இவர் செய்யும் சாகசங்களே இவரின் பிரதான அடையாளம். இவரின் எல்லா கதைகளுமே எனக்கு மிகப்பிடித்தமான ஜானரான புதையல் தேடும் கதைதான். பில்டப் போதும் இனி படத்தைப்பற்றி .
கிருஸ்துவத்தில் உள்ள பத்து கட்டளைகளுள் சொல்லப்பட்ட சக்திவாய்ந்த ஒரு ஒளியை(Ark) பற்றிய கதையே டாக்டர் ஜோன்ஸின் முதல் படமான ரைடர்ஸ் ஆப் த லாஸ்ட் ஆர்க். இந்த ஆர்க்கை தங்களுக்கு சாதகமாக்கி இரண்டாம் உலகயுத்ததில் வெல்ல நினைக்கும் நாஜிக்களை எப்படி ஜோன்ஸ் முறியடிக்கிறார் என்பதை படத்தில் பாருங்கள்.
இவரது பெரும்பாலான கதைகள் 1930களின் மத்தியில் ஹிட்லர் பின்னனியில் நடப்பவை. இதிலிருந்து மாறுபட்டு இந்தியாவை பின்புலமாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் Indiana jones and the Temple of Doom (1984). விலைமதிப்பற்ற ஒரு மரகதக்கல்லை தேடி இந்தியாவிற்கு வரும் ஜோன்ஸ், ஒரு பயங்கர சாமியாரால் நரபலியிடப்படும் சிறுவர்களை காப்பதே இப்படத்தின் கதை. இந்த படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் "தளபதி" புகழ் அம்ப்ரிஷ் பூரி.
மீண்டும் ஹிட்லர் பின்னனியில் இந்த சீரிசில் மூன்றாவதாக வந்த திரைப்படம் Indiana jones and the Last Crusade (1989). ஏசுவின் கடைசி விருந்தில் பயன் படுத்தப்பட்ட Holy Grail எனும் ஒரு ஓயின் கின்னத்தை தேடிச்சென்று தொலைந்துபோன தனது தந்தையை தேடிச்செல்லும் ஜோன்ஸின் பயணம்தான் இந்தப்படம். இதில் இவரின் தந்தையாக நடித்திருப்பவர் சீன் கானரி. ஹிட்லரிடம் ஜோன்ஸ் ஆட்டோகிராஃப் வாங்கும்படியான ஒரு ரசமான காட்சியும் இதில் உண்டு. அது எப்படினு படத்தில் பாருங்கள்.
இதன் பின்னர் இக்கதைகளை மறந்துவிட்டு ஏலியன் மற்றும் ரோபோக்களின் பக்கம் சென்றுவிட்டார் ஸ்பீல்பெர்க். கிட்டத்தட்ட பத்தொன்பது வருடங்கள் கழித்து தன் மகனின் ஆசைக்கினங்க மீண்டும் இண்டியானா ஜோன்ஸ் கதையை புதையலைப்போல தோண்டியெடுத்தார். அதுவே 2008ல் வெளியான Indiana jones and the Kingdom of the Crystal skull. இது 1940ல் ரஷ்யாவின் ஸ்டாலினை பின்னனியாக கொண்ட கதை. ஏலியன் சக்தியை பெற நினைக்கும் ஸ்டாலின் ஆட்களை தடுக்கும் முயற்சியின் நடுவே மாயன் நாகரீகம், தொலைந்துபோன தங்கநகரமான எல் டொரடோ ( இதைபற்றி பல கதைகள் வந்துள்ளன), ஏலியன்கள் என பல சுவாரஸ்யங்களை தொட்டுச்செல்கிறது.
இந்த படங்கள் எல்லாமே ஒரேமாதிரியான டெம்பிளேட்டை கொண்டிருந்தாலும் ஒரு நிமிடம்கூட அலுக்காமல் உங்களை படம்பார்க்க வைப்பது இதன் ஜெட்வேக திரைக்கதைதான். இண்டியானா ஜோன்ஸ் கதாபாத்திரத்திலேயே நடித்து ஒரு கிளாஸிக் ஐகானாக மாறியவர் நடிகர் ஹாரிசன் ஃபோர்ட். இது போன்ற படங்களை எடுப்பதில் ஸ்பீல்பெர்க் ஒரு ஜித்தர். மொத்தத்தில் இந்த படங்களை பார்ப்பது, காந்தி ஜொயந்தி அன்று சரக்கை தேடியலையும் அட்வெஞ்சரை போன்று ஒரு ஜாலியான அனுபவம் கிடைக்கும்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete