Thursday, July 18, 2013

வாலி

இவர்
புவியில் பாடினார்
எவன் எவனுக்கோ
இன்று
கவிபாடச்சென்றுவிட்டார்
எமனுக்கோ!

இவர்பாட்டால்
ஒருவர் மந்திரியானார்
ஒருவர் மன்மதன்ஆனார்
முன்னவர் MGR
பின்னவர் STR
இவர்

கிருஷ்ணவிஜயம் எழுதினால்
கிருஷ்ணரேகூட
எட்டிப்பார்ப்பார்
தன்னையும் விஜயம் செய்யென
சிவனும் இவரிடம்
முட்டிப்பார்ப்பார்

இவர் பக்திப்பாடலால்
காமனுக்கும்
அருள்வரும்
இவர் காதல்பாடலால்
கந்தனுக்கும்
காதல்வரும்

அகவை என்பதிலும்
இவர்
இளமை நீரூற்று
எந்த காலத்திற்கும்
பாட்டெழுதுவதில்
நீர் ஊற்று

அண்ணார் உதித்ததோ
திருவரங்கம்
வெள்ளுடை வெண்தாடியில்
சினிமாவில் வாழ்ந்த
கவிச்சுரங்கம்

பாமாலையால் பூமாலை
கட்டியவருக்கு இன்று
மரணம் வைத்தது
மலர்வளையம்
உன்னுடன் உடன்கட்டை ஏரலாமா
என்ற யேசனையில்
தாழ்ந்திருக்கிறது
தமிழ்மகளின் தலையும்.
 ்

0 Comments:

Post a Comment