இதுவரைக்கும் நான்
எடுத்த படங்களெல்லாம் ஒரு சிறுவனின் மனநிலையில் எடுத்தது ஆனா இந்த படம்தான் ஒரு அடல்டா,
உணர்ந்து எடுத்தது – இது சமீபத்திய பேட்டி ஒன்றில் கியர்மோ டெல் டோரா சொன்னது.
சொன்னதைப்போலவே
இதுவரை அவர் படங்களில் இல்லாத நிர்வாண, உடலுறவு, பெண்னின் சுய இன்பக்காட்சிகள் இந்த
படத்தில் உண்டு. ஆனா இதுக்காக மட்டும் அவர் அப்படி சொல்லல, இது ஒரு காதல்கதை என்பதால்
சொல்லிருக்காரு. அதுவும் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல.
எலிசா ஒரு அனாதை
ஊமைப் பெண். சினிமா தியேடரின் மாடியில் ஒரு அறையில் வசிப்பவள். பக்கத்து அறையில் ஒரு
வயதான ஓவியர். அரசாங்கத்தின் ரகசிய ஆராய்ச்சிக்கூடத்தில் கூட்டி,பெருக்கி சுத்தம் செய்யும்
ஒரு சாதாரண நைட்ஷிப்ட் பனிப்பெண்.
அந்த ஆரய்ச்சிக்கூடத்தில்
ஒரு நாள் ஒரு பெட்டி வருவதை பார்க்கிறாள். அதற்குள் ஏதோ ஒன்று அசைவதை கண்டு பயந்து
சென்றுவிடுகிறாள். மறுநாள் அந்த அறையில் சிந்திக்கிடக்கும் ரத்தத்தை சுத்தம் செய்ய
வரும்போதுதான் ’அதை’ முழுதும் பார்க்கிறாள். அது மீனும் மனிதனும் கலந்ததைப்போன்ற ஒரு
விசித்திர ஜந்து. தென் அமெரிக்காவின் ஏதோ ஒரு ஆற்றிலிருந்து அதை பிடித்து வந்து ஆராய்ச்சி
என்ற பெயரில் வதைத்துக் கொண்டிருந்தார்கள். அதை பார்ப்பதற்காகவே அந்த அறைக்கு அடிக்கடி
வருகிறாள். அது சாப்பிட முட்டை தருகிறாள். இசை தட்டுக்களை ஒலிக்கச் செய்கிறாள். நடனமாடுகிறாள்.
அது கூடவே இருக்க விரும்புகிறாள்.
இந்த கதை நடப்பது
அமெரிக்க-ரஷ்ய பனிப்போர் நடந்த 1960களில். அந்த ஆராய்ச்சிகூடதில் இருந்த மருத்துவர்களில்
ஒருவர் ரஷ்ய ஒற்றர். இந்த ஆரய்ச்சிய பத்தி அடிக்கடி ரஷ்யாவிற்கு தகவல் கொடுக்கிறார்.
அந்த ஜந்துவ கடத்தனும் இல்லனா கொல்லனும்னு ரஷ்யா திட்டமிடுது. அமெரிக்காவும் அந்த ஜந்துவ
கொன்னு பாகங்களை வெட்டி எடுத்து ஆராய முடிவு செய்றாங்க. எப்படியாவது அந்த ஜந்துவ காப்பாத்தனும்னு
எலிசாவும் ஒரு திட்டம் போடுறா. இதுக்கு அப்புறம் என்ன ஆகுதுனு படத்தில் பாருங்க.
ஹெல்பாய் படத்தில்
வரும் ஏப்ரஹாம் செப்பியனை போலதான் இந்த ஜந்துவும் இருக்கு. அதில் நடிச்ச டக் ஜோன்ஸ்
தான் இதுலையும் நடிச்சிருக்காரு. இவர் டெல் டோராவின் ஆஸ்தான நடிகர். பான்’ஸ் லிபரிந்த்
படத்தில் வரும் Faun மற்றும் பேல்மேனும் இவர் தான்.
யுனிவர்சல் பிக்சர்ட்ட
அவங்களோட கிரியேச்சர் ஆஃப் பிளாக் லகூன ரீமேக் பன்ன டெல் டோரா கேட்டிருக்கிறார். (அதுவும்
இந்த மீன் மனிதனைப் போன்ற ஒரு ஜந்து தான்) இவரோட ஸ்கிரிப்டு அவங்களுக்கு பிடிக்காததால்
நிராகரிச்சிட்டாங்க. அதனால space between us என்ற குறும்படத்தோட கதைய வச்சி இந்த படத்தை
டெல் டோரா எடுத்துருக்காரு. இதனால இழப்பு யுனிவர்சல் பிக்சர்க்குதான். இரண்டு கோல்டன்
குலோப் விருது வாங்கிருக்கு சிறந்த இயக்கம் மற்றும் இசைக்கு. ஆஸ்கர்லையும் விருது நிச்சயம்.
இந்த படம் கியர்மோ
டெல் டோராவின் சிறந்த படம் கிடையாது. அவரோட பெஸ்டுனா அது Pan's.Labyrinth தான். அது
ஒரு காவியம். மறுபடியும் அந்த படத்தைதான் பார்க்கத்தோனுது.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete