மார்வெலோட திட்டமிடல் திறமை எந்த அளவுக்கு இருக்கும் என்பதற்கு
உதாரணம் இந்த படம். கடந்த பத்து வருடங்களா ஒவ்வொரு ஹிரோவா அறிமுக படுத்தியது இந்த கதையை
எடுப்பதற்குத்தான். அந்த கதையோ தனோஸ் கெஸ்ட்,
இன்ஃபினிடி கன்லெட், இன்ஃபினிடி வார்னு மிகப்பெரியது. அதனால் இரண்டு பாகமா எடுத்துருக்காங்க.
இரண்டாவது பாகம் அடுத்த வருடம் வருகிறது. ஓகே இந்த படம் எப்படி இருக்கு?
ஒரு முழு
படமே கிளைமேக்ஸா இருந்தா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு இந்த படம். படத்தோட முதல்
நிமிடத்திலிருந்து கடைசி நிமிடம் வரை எல்லா கட்சிகள்லையும் நீக்கமற நிறைந்திருப்பவர்
தனோஸ், தனோஸ், தனோஸ் மட்டுமே. ஆரம்பத்தில் இருந்தே அவெஞ்சர்ஸ்கு, லோகி, ச்சிடாரி படை,
ரோனன்னு ஒவ்வொரு ஆட்களா அனுப்பி தொல்லை கொடுத்தது இந்த தனோஸ் தான். இத்தனை வருடமா அவ்ளோ
பில்டப் கொடுத்த அளவுக்கு இந்த வில்லன் இருக்கானா என்றால் இல்லை. அதுக்கும் மேலையே
இருக்கான்.
ஆ வூனு கத்த
மாட்டான். இடி இடினு சிரிக்க மாட்டான். அமைதியா நிதானமா எதுக்கும் அலட்டிக்காம எல்லாவற்றையும் செய்யக்கூடியவன்.
ரொம்ப செண்டிமெண்டானவன். அழக்கூடியவன் அதே வேலை சூப்பர் ஹீரோக்களே பயந்து பதுங்கிக்கொள்ளக்கூடிய
அளவுக்கு படு பயங்கரமானவன். இந்த பிரபஞ்சத்துக்கே நல்லது செய்யக்கூடிய அளவுக்கு இவனுக்கு
ஒரு தீவிரமான சித்தாந்தமும் உண்டு. அத்தனை ஹீரோக்களையும் கதற விடுவான். சூப்பர் ஹீரோக்களுக்கான
வில்லன் இப்படித்தான் இருக்க வேண்டும்.
இத்தனை ஹீரோக்களையும்
கட்டி மேய்க்கிறதே பெரிய வேலை அதை கச்சிதமா ருஸோ சகோதரர்கள் செஞ்சிருக்காங்க. அந்தந்த
ஹீரோவுக்கே உரிய தனித்தன்மையான காட்சிகள நல்லாவே எடுத்திருக்காங்க. குறிப்பா ஒரு ஹீரோவுக்கான
அறிமுகம் எப்ப இருக்கனுமோ அப்ப இருக்கும் கேப்டன் அமெரிக்காவின் அறிமுகம்.
இந்த படத்திலிருந்து
நான் ஒரு காட்சியைகூட சொல்லமாட்டேன் ஏன்னா ஒவ்வொரு காட்சியுமே விசில் சத்தத்தோட இருக்கையே
அதிரும்படி தியேடர்ல கிடைக்கும் அனுபவத்தை ஒரு தடவையாவது அனுபவிங்க. இந்த படம் எல்லா
வசூல் சாதனைகளையும் அடிச்சி நொருக்க போகுது அது மட்டும் நிச்சயம்.
படத்தில்
ஒரே ஒரு போஸ்ட் கிரடிட் காட்சி உண்டு அதில் கேப்டன் மர்வெலுக்கான ஆரம்பம் காட்டப்படும்.
அப்புறம்
ட்ரைலர்ல வந்த சில காட்சிகள் படத்தில் இருக்காது இது மார்வெலோட வழக்கமான வேலை தான்.
அடுத்த பாகத்துக்காக இனி ஒரு வருடம் கத்திருக்கனும் .