Tuesday, August 22, 2017

INFINITY WAR


கார்டியன் ஆஃப் த கேலக்ஸி வால்யூம் 2 படத்தோட முடிவும் தோர் ராக்னரோக் படத்தோட முடிவும் சந்திக்கிற இடத்தில்தான் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படம் ஆரம்பிக்குது. இது தான் அவெஞ்சர்ஸ் படங்களின் கடைசி. கடந்த பத்து வருடங்களில் பதினாறு படங்கள் வந்தது இந்த முடிவை நோக்கித்தான்.
ப்ளானெட் ஹல்க்னு ஒரு அனிமேஷன் படம் இருக்கு ( தமிழ் டப்பிங்ளையும் இருக்கு) அந்த படத்தோட கதையையும் தோரோட கதையையும் கலந்து எடுத்ததுதான் இப்ப வரப்போர தோர் ராக்னரோக்.
ஒகே அது என்ன இன்ஃபினிடி வார்?
இந்த பிரபஞ்சத்தில் இன்ஃபினிடி ஸ்டோன்ஸ் எனப்படும் சக்திவாய்ந்த ஆறு கற்க்கள் இருக்கு.
1. ஸ்பேஸ் ஸ்டோன் - தோர், கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் படங்களில் வரும் டெசரக்ட் தான் இது. பல உலகங்களை இனைக்கும் வாசலா இது பயன்படும். இப்போதைக்கு இது அஸ்கார்டில் பத்திரமா இருக்கு.
2. மைண்ட் ஸ்டோன் – யார் மனதை வேண்டுமானாலும் மாற்றக்கூடியது. லோகியோட மந்திரக்கோளில் இருக்கும். இப்ப விஷனோட நெற்றியில் இருக்கு.
3. ரியாலிடி ஸ்டோன் – தோர் டார்க்வேல்டு படத்தில் வரும் ஈதர் எனப்படும் ஒரு திரவ வடிவ வஸ்து தான் இது. கலெக்டரோட மியூசியத்தில் இப்ப இருக்கு.
4. பவர் ஸ்டோன் – பெயருக்கு ஏத்த மாதிரி அதீத சக்தியை கொடுக்கக்கூடியது. கார்டியன் அஃப் த கேலக்ஸி முதல் பாகத்தில் வரும். இப்ப ஸாண்டர் கிரகத்தில் நோவா கார்ப்பின் பாதுகாப்பில் இருக்கு.
5. டைம் ஸ்டோன் – இத வச்சிருந்தா காலத்துக்குல்லையே புகுந்து விளையாடலாம். டாக்டர் ஸ்ட்ரேஞ்சின் டாலரான ஐ அஃப் அகமோட்டோவிற்குள் இருப்பது இது தான். இப்ப நேபாளத்தில் உள்ள காமர் தாஜ்ல இருக்கு.
6. சோல் ஸ்டோன் – இது எங்க இருக்குனே தெரியல. இனிமே வரப்போர தோர் ராக்னரோக், பிளாக் பந்தர், அவெஞ்சர் இன்ஃபினிடி வார் பாகம் 1, ஆண்ட்மேன் அன் த வாசப், கேப்டன் மார்வெல் படங்களில் ஏதேனும் ஒன்றில் வரும்.
இந்த ஆறு கற்களுமே தனித்தனியே சக்தி வய்ந்தது. இந்த ஆறு கல்லுமே ஒரே ஆளுகிட்ட இருந்து அவனுமே ஒரு எமதர்மனுக்கு நிகரானவனா இருந்தா என்ன ஆகும்? அது தான் இன்ஃபினிடி வார்.
தனோஸ் என்பவன் தான் மார்வெல் உலகத்தின் சக்திவாய்ந்த வில்லன். இவனை கார்டியன் ஆஃப் த கேலக்ஸி முதல் பாகத்தில் பார்க்கலாம். இவனிடம் இன்ஃபினிடி கன்லெட்னு ஒரு கையுறை இருக்கு. அதுல ஆறு கல்லையும் பதித்து அதன் மூலம் அவெஞ்சர்ஸோட மோதுவான். தனோஸிடம் பிளாக் ஆர்டர்னு நான்கு நபர்கள் உண்டு. அவர்களைக்கொண்டு இந்த கற்களையெல்லாம் கைப்பற்றுவது தான் இன்ஃபினிடி வார் முதல் பாகத்தில் நடக்கப்போகிறது. அதில் சிலர் இறக்கலாம். ஏன்னா மைண்ட் ஸ்டோன் வேனும்னா விஷன கொன்னா தான் எடுக்க முடியும். இதுக்கு அப்புறம் நடக்கின்ற போர் தான் இரண்டாம் பாகமா இருக்கலாம் என்பது என்னோட கனிப்பு.
ஸ்பைடர் மேன் ஹோம் கமிங் படத்தில் ஒரு புது சூட்ட அயர்ன் மேன் காட்டுவாரே அந்த சூட்ட போட்டுகிட்டுதான் இந்த படத்தில் ஸ்பைடர் மேன் வருவார். சிவில் வாருக்கு அப்புறம் தலைமறைவான கேப்டன் அமெரிக்கா ஒரு புது தோற்றத்தில் வருகிறார். இது எல்லாம் உனக்கு எப்புடி தெரியும்னு கேக்குரிங்களா? யுடியூபில் ட்ரைலர் லீக் ஆகிருக்கு போய் பாருங்க.
இந்த இன்ஃபினிடி வார் இரண்டாம் பாகத்தோட மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 22 படங்கள் அடங்கிய Phase 3 முடிவுக்கு வருது. இதுக்கு அப்புறம் Phase 4னு எடுக்கலாம். ஏன்னா டாக்டர் ஸ்ட்ரேஞ், பிளாக் பாந்தர் படங்களின் பாகங்கள் பாக்கி இருக்கு. இவங்களை போலவே யுனிவர்சல் பிக்ஸர்சும் மான்ஸ்டர் யுனிவர்ஸ் (கிங்காங்,காட்ஸில்லா, டைனோசர்ஸ்), டார்க் யுனிவர்ஸ்னு ( மம்மி, இன்விசிபில் மேன், ஃபிராங்கன்ஸ்டைன்) வரிசையா படங்களை ரிலீஸ் பன்ன போறாங்க. இதுக்கு போட்டியா டிசியும் ஜஸ்டிஸ் லீக் மூலமா போர் தொடுக்க போறாங்க தயாரா இருங்க