Dr.ஹேங்க் பைம்
என்ற விஞ்ஞானி எந்த ஒரு பொருளையும் சின்னதா மாத்துற ஒரு மருந்த கண்டுபிடிகிறார். தன்னுடைய
ஃபார்முலாவ திருடிட்டாங்கனு அவர் S.H.I.E.L.D விட்டு விலகிபோய் அந்த மருந்தையும் மறைத்து
வைத்துவிடுகிறார். அதன் பெயர் ‘ ஆன்ட் மென் ‘ .
பல வருடங்களுக்கு
பிறகு டாக்டர்.ஹேங்கோட சிஸ்யரான டேரன் க்ராஸ் என்பவன் ’ எல்லோ ஜாக்கெட் ‘ என்ற புதுவித
சூட் ஒன்றை உருவாக்குகிறான். இதை அணிந்துகொண்டால் உருவத்தை சிறியதாக மாற்றி, பறந்துபோய்
எதை வேண்டுமானாலும் அழிக்கலாம். இதை ஸீல்டின் எதிரி அமைப்பான ஹைட்ராவிற்கு விற்க நினைக்கிறான்.
Dr.ஹேங்க், ஸ்காட்
லாங்னு ஒரு கைதேர்ந்த திருடன வேலைக்கு எடுக்கிறார். அவனுக்கு ஆன்ட் மென் சூட்டை கொடுத்து
அவனை ஆன்ட் மென்னா மாற்றி அந்த எல்லோ ஜாக்கெட்டை [ இது என்ன பெண்கள் அணியும் ஜாக்கெட்டா?
இதை அணிந்தால் அது சிறியதாகிவிடுமா? என்று குசும்பு பிடித்த யாராவது கேட்கக்கூடும்.]
ஹைட்ராவின் வசம் செல்லாமல் திருடிவர சொல்கிறார். இந்நிலையில் டேரன் க்ராஸ், Dr.ஹேங்க
சுட்டுவிட்டு அந்த எல்லோ ஜாக்கெட்டை அணிந்து கொண்டு ஸ்காட் லாங்கின் மகளையும் பினைய
கைதியா பிடிச்சிடுறான். கடைசியா எல்லோ ஜாக்கெட்டை அழிக்க ஆன்ட் மென் அணுவைவிட சிறிய
உருவம் எடுக்கிறார் இதனால் காலம் மற்றும் இடத்துக்கு இடையிலான பிரபஞ்ச வெளியில் மாட்டிக்கொள்கிறார்.
இதுக்கு அப்புறம்
என்ன ஆகுதுனு தெரிஞ்சிக்க விருப்பம் இருந்தா, வேற வேலை வெட்டி இல்லனா டவுன்லோட்பன்னி
பாருங்க.
Imax 3Dல பார்க்கவேண்டிய
அட்டகாசமான படம் இது. அவெஞ்சர்ஸோட இடத்துல ஆன்ட் மென் புகுந்து ஃபால்கனுக்கு ஆட்டம்காட்டுற
சீன் நல்லவே எடுத்துருக்காங்க. கடைசில இரண்டு போஸ்ட் கிரடிட் சீன் இருக்கு. ஒன்று ஆன்ட்
மெனோடவும் மற்றொன்று அவெஞ்சர்ஸோடவும் தொடர்புடையது.
இந்த படதுல ஆன்ட்
மெனை விடவும் எனக்கு பிடிச்சது Dr.ஹேங்க் பைமா நடிச்ச மைக்கல் டக்ளஸ்தான். இந்த படத்தோட இரண்டம் பாகம் 2018ல வரப்போகுது.