Thursday, May 9, 2013

The Adventure of TinTin

் இந்தவாரம்
சன்டிவியில் ஞாயிரு மதியம் டின்டின்
படம் ்போடுராங்க அதனால இந்த பதிவ
படிச்சிட்டு படம்பாருங்க
உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்

Steven Spielberg இந்த பெயர் என் வாயில்
நுழைவதற்குவெகு காலத்திற்கு முன்பு என் சிறுவயதில் Jurasic park படம்
பார்த்தேன்,வியந்தேன் .
இன்றுவரையிலும் அதேநிலைதான்
இவரது ஒவ்வெரு படத்திற்கும்.
ஒரு சேசிங்சீன் எப்படி எடுக்கனும்னுஇவர­்
படத்தைபார்த்து தெரிஞ்சிக்கலாம்.
( இவரது இண்டியானா ஜோன்ஸ்
படங்களை பார்த்தால் தெரியும்)
சும்மா டயர்
தேயும்வரை வண்டியை ஓட்டாமல்
அதிலும் சுவாரஸ்யம்வைத்து எடுப்பதில்
இவர் வல்லவர்களுக்கெல்லாம் வல்லவர்
இந்த 66 வயதிலும்கூட.
அதற்கு ஒரு சிறு உதாரணம் 2011ல் இவர்
இயக்கிய The Adventure of TinTin.
1929-1983 காலகட்டத்தில் Georges Remi
(Herge) என்ற பெல்ஜிய காமிக்ஸ் ரைட்டர்
உருவாக்கிய கதாபாத்திரம்தான் இந்த
டின்டின்.இவன் Le Petit xxe என்ற
பெல்ஜிய பத்திரிகையின் இளம் நிருபர்.
டின்டினும் அவனுடைய நாயான
ஸ்னோயியும் சேர்ந்து துப்பறியும் 24
கதைகளில்
மூன்றை எடுத்து திரைப்படமாக்கியுள்ளார் Steven Spielberg.
இது இவர் இயக்கிய முதல் அனிமேஷன்
படமாகும்.அதுவும் மோஷன்கேப்சர் 3Dல்
இவரை எடுக்கவைத்து இனைந்து தயாரித்தது இயக்குனர் peter Jackson. எனக்கு மிகவும் பிடித்த
இப்படத்தோட கதையை பார்ப்போம்.

அந்த கடைவீதியில் ஒரு அழகிய கப்பலின்
மினியேச்சரை கண்டு விலைபேசுகிறான்
டின்டின்.ஆனால்
அதே கப்பலை ஒரு வயதானவரும்
கேட்கிறார், முதலில் விலைபேசிய
டின்டினுக்கே கப்பல்் கிடைக்கிறது.
ஆனால் விடாமல் துரத்தும் அந்த
முதியவர் அவனிடமிருந்து அந்த
கப்பலை திருடிவிடுகிறார்.
அவருக்கு தேவையான அந்த கப்பலின்
உள்ளேயுள்ள ஒரு சிறிய காகிதம்
எதிர்பாரதவிதமாக டின்டினிடம்
கிடைக்கிறது. அதில் யுனிகார்ன்
கப்பலிலிருந்து எடுக்கப்பட்ட புதையல்
இருக்கும் இடத்தின் குறிப்புள்ளது.
இந்த இடத்தில் ஒரு சிறிய ஃபிளாஸ்பேக்,
ரெட்ராக்கம் என்ற கடற்கெள்ளையன்
கெள்ளையடித்த
தங்கத்தை அவனிடமிருந்து மீட்க
போராடுகிறார் கேப்டன் விஜயகாந்த்
ச்சி கேப்டன் ஹேடக்.
இந்த சண்டையில் தோற்கும் ரெட்ராக்கம்
அந்த
புதையலை அடைந்தே தீருவதாகசபதமிட்
டு இறக்கிறான்.
நிகழ்காலத்தில் ரெட்ராக்கம்மின்
வழிவந்தவனே அந்த கப்பலை திருடியவன்.
அவனைதடுத்து தற்போதுள்ள கேப்டன்
ஹேடக்கின் உதவியுடன்
புதையலை எப்படி டின்டின் எடுக்கிறான்
என்பதை இப்படத்தில் காணுங்கள்.
இந்த படத்திலும் spielberg கார்,கப்பல், ஃபிளைட்,பைக் அவ்வளவு ஏங்க சிங்கில்
டயரை வைத்துக்கூட ரசிக்கும்படி சேசிங்
எடுத்துள்ளார் கண்டுகளியுங்கள்.
இப்படத்தை 3Dல் திரையில்
கண்டவர்களே புண்ணியவான்கள். பார்காதவர்கள் இம்முறையாவது பாருங்கள். நன்றி.